பொறியியல்சார் அறவியல்
பொறியியல்சார் அறவியல் (Engineering ethics) என்பது பொறியியல் நடைமுறை குறித்த அறநெறிகளின் தொகுப்பு சார்ந்த அறிவியல் புலமாகும். இப்புலம் பொறியாளரின் சமூகம், வாடிக்கையாளர், தொழில் சார்ந்த கடப்பாடுகளின் கணங்களை புலனாய்கிறது. இது அறிவியலின் மெய்யியல், பொறியியலின் மெய்யியல், தொழில்நுட்ப அறவியல் ஆகிய புலங்களோடு தொடர்பு கொண்ட புலமைப் பரப்பாகும்.
பின்னணியும் தோற்றமும்
தொகு18 ஆம் நூற்றாண்டும் புலஞ்சார் அக்கறையும்
தொகுபொறியியல் 19 ஆம் நூற்றாண்டில் தனித்தொழிலாக உருவாகியதும், பொறியாளர்கள் தாங்களே தனியாகச் செயல்பட்டார்கள் அல்லது பெரிய குழுமங்களில் வேலை செய்தார்கள். பெரிய குழுமங்கள் தம் பணியாளர்களைத் தமது கட்டுபாட்டில் வைக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையில் கணிசமான உரசல் ஏற்பட்டது.[1]
அமெரிக்காவில் எழுச்சி கண்ட பொறியியல் தொழிலின் பெருக்கத்தால் நான்குவகைப் பொறியியல் கழகங்கள் உருவாகின: அமெரிக்கக் குடிமைப் (கட்டிடப்) பொறியாளர் கழகம் 1951 இலும் அமெரிக்க மின்பொறியாளர் கழகம் 1884 இலும் முதலில் தோன்றின.[2] இதேபோல, 1871 இல் அமெரிக்கச் சுரங்கவியல்,பொன்மவியல் (உலோகவியல்), பாறைநெய்ப் பொறியியல் கழகமும் பின்னர், 1880 இல் அமெரிக்க எந்திரப் பொறியாளர் கழகம் தோன்றின.[3] குடிமைப் பொறியியல், மின்பொறியியல் கழகங்கள் பொறியாளரைக் குறைந்த தொழில்நுட்பத் தொழில் வல்லுனர்களாகக் கருதின. ஆனால் எந்திரப் பொறியாளர் கழகமோ பொறியாளர்களைத் தொழில்நுட்பப் பணியாளராகவே கருதி நடத்தியது.[4]
மேலும் அறவியல் தனியரைப் பற்றியதாகக் கொள்ளப்பட்டதே ஒழிய, தொழில்முறை சார்ந்தவொன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. பொறியியல்சார் அறவியல் தனித் துறையாகவோ புலமாகவோ கருதப்படவே இல்லை.[5][6]:6
20 ஆம் நூற்றாண்டுத் திருப்பமும் திருப்புமுனையும்
தொகு[[File:BostonMolassesDisaster.jpg|thumb| அமெரிக்காவில் போசுட்டன் மெல்லுடலிகள் பேரழிவு, தொழில்முறை உரிமத்தை வற்புறுத்தவும், தொழில்முறைசார் (பொறியியல்சார்) அறவியல் விதிமுறைத் தொகுப்புகளை உருவாக்கவும் உந்துதல் அளித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கட்டமைப்புக் குலைவால் ஏற்பட்ட மூன்றுப் பேரிடர்கள் பொறியாளர்கள் மீது தொழில்முறை சார்ந்த நடைமுறை மீதும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின. இவை ஆழ்சுதபுலா ஆற்றுத் தொடர்வண்டித் தண்டவாளப் பேரிடர், தாய்ப்பாலப் பேரிடர் (1879), குவெபெக் பாலக்குலைவு (1907) என்பனவகும். இவை தொழில்முறை வல்லுனர்களைத் தம் தொழில்நுடப, கட்டுமான நடைமுறைக் குறைபாடுகளுக்கும் அறவியல் செந்தரக் கடப்பாட்டுக்கும் பொறுப்பேற்க வைத்தது.[7]
எனவே, நான்கு பொறியியல் கழகங்களில் மூன்று கழகங்கள் முறையான அறவியல் விதிமுறைத் தொகுப்புகளை உருவாக்கின. மின்பொறியியல் கழகம் 1912 இலும் குடிமைப் பொறியியல், எந்திரப் பொறியியல் ஆகிய கழகங்கள் இரண்டும் 1914 இலும் இந்த தொகுப்புகளை உருவாக்கிக் கொண்டன.[8] AIME did not adopt a code of ethics in its history.[4]
அண்மை வளர்ச்சிகள்
தொகுபொது நெறிமுறைகள்
தொகுசமூகக் கடப்பாடு
தொகுபொது இடர் அறிவித்தல்
தொகு
நன்னடத்தை
தொகுபொறியாளர்கள் சந்திக்கும் பல அற்வியல் சிக்கல்கள் உள்ளன. அவற்றில் சில தொழில்நுட்பம் சர்ந்தவை; பல தொழில்நுட்ப நடைமுறைகளைச் சார்ந்தவை; எஞ்சிய பல வணிக நன்னடத்தை சார்ந்தவையாக உள்ளன. இவற்றில் சில கீழே தரப்படுகின்றன:
- வாடிக்கையாளர்கள், அறிவுரைஞர்கள், போட்டியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியவர்டனான உறவு
- வாடிக்கையாளர்கள், அவர்களின் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் சட்டப்படியான ஏற்பை உறுதிபடுத்தல்
- விருப்பார்வ முரண்
- கையூட்டு, துணிநலங்கள் ஏற்றல் (பின்வருவன போன்றவை)
- பரிசுகள், விருந்துகள், கைமாற்றுச் சேவைகள், பொழுதுபோக்குகள்
- வணிகக் கமுக்கம், குழும உடைமை தகவல் விவரக் கமுக்கம் பேணல்
- பணிதருவோர் சொத்துகள் வ்வரப் பேணல்
- வெளிப் பணியமர்த்தம்/வெளிச் செயல்பாடுகள் ஏற்றல்
சில பொறியியல் கழகங்கள் சுற்றுச்சுழல் பாதுகாப்பையும் இவற்றுடன் சேர்க்கின்றனர். வணிக அறவியல் புலக் கடபிடிகளையும் பொறியாளர்கள் தம் முடிவெடுப்பில் கருத வேண்டியுள்ளது.
வகைநேர்வுப் பயில்வுகளும் முதன்மைக் காரணிகளும்
தொகுபொறியியல் பொய்த்தலுக்கு (குலைவுக்கு) தவறான தொழில்நுடபக் கணக்கீடுகள் மட்டுமே காரணமல்ல; மேலும் வடிவமைப்பு செயல்பாட்டுத் தவறுகள், மேலாண்மைப் பண்பாட்டுக் குறைபாடுகள் என பலகாரணிகள் உள்ளடங்குகின்றன என்று பெத்ரோசுகி குறிப்பிடுகிறார்.[9] என்றாலும் அனைத்து பொறியியல் குலைவுகளுமே அறச் சிக்கல்களால் ஏற்படுவதில்லை. முத்லில் ஏற்பட்ட தகோமா குறுகு பாலத்தின் (1940) குலைவு, செவ்வாய் நிலமுனைத் தரையிறங்குகலம் இழப்புகள், செவ்வாய்க் காலநிலை வட்டணைக்கலம் ஆகியன தொழில்நுட்ப, வடிவமைப்பு சார்ந்த குலைவுகளாகும். பின்வரும் பொறியியல் பொய்த்தலினால் ஏற்பட்ட குலைவுகள் அறவியலும் தொழில்நுட்பவியலும் குறித்த சிக்கல்களை உள்ளடக்குகிறது.
- பொது மின்னோடிக் குழுமத் தீப்பற்றுமுளைச் சிக்கல் (2014)
- கொலம்பியா விண்ணோடப் பேரிடர் (2003)
- சாலஞ்சர் விண்ணோடப் பேரிடர் (1986)
- தெராக்-25 ஏதங்கள் (1985 to 1987)
- செர்நோபிள் பேரிடர் (1986)
- போபால் பேரிடர் (1984)
- கன்சாசு நகர [[ கியாட் ரீசென்சி நடைவழிக் குலைவு (1981)
- இலவ் கால்வாய்ப் பேரிடர் (1980), உலூயிசு கிப்சு
- முக்கல் தீவு ஏதம் (1979)
- நகரத் திரள்மையப் பேரிடர் (1978),
- பொர்டு பின்டோ பாதுகாப்புச் சிக்கல்கள் (1970s)
- மினமாட்டா நோய் (1908–1973)
- அபர்பான் பேரிடர் (1966)
- செவ்ரொலெட் கோர்வயர் பாதுகாப்புச் சிக்கல்கள் (1960s), இரால்ப் நாடெர்,' எந்த
வேகத்திலும் பாதுகாப்பின்மை
- போசுட்டன் மெல்லுட்லிகள் பேரிடர் (1919)
- குவெபெக் பாலக் குலைவு (1907), தியடோர் கூப்பர்
- ஜான்சுடவுன் பெருவெள்ளம் (1889), சவுத்போர்க் மீன்பிடிப்பு, வேட்டைக் குழு
- தாய்ப் பாலப் பேரிடர் (1879), தாமசு பவுச், வில்லியம் என்றி பார்லோ, வில்லியன் யோலாந்து
- ஆழ்சுதபுலா ஆற்றுத் தொடர்வண்டிப் பேரிடர் (1876), அமசாசுட்டோன்
குறிப்புகள்
தொகு- ↑ Layton (1986). pp. 6-9
- ↑ பிறகு வானொலிப் பொறியாளர் கழகம் 1912 இல் தோன்றியது. ஆனால், பின்னவையிரன்டும் 1963 இல் இனைந்து அமெரிக்க மின், மின்னன் இயல் பொறியாளர் கழகம் ஆகின.
- ↑ இந்த நான்கு கழகங்களுக்கும் அமெரிக்கச் சுரங்கவியல், பொன்மவியல், பாறைநெய்ப் பொறியியல் கழகத்தால் ஆளப்படுகின்றன: சுரங்கவியல், பொன்மவியல் தேட்டக் கழகம் (1957), கனிம, பொன்ம, பொருள்கள் கழகம் (1957), பாறைநெய்ப் பொறியியல் கழகம் (1957), இரும்பு, எஃகுத் தொழில்நுட்பக் கழகம் (1974) ஆகிய கழகங்கள் ஒட்டுமொத்தமாகவோ தனித்தனியாகவோ எதுவுமே அறவியல் சார்ந்து விதிமுறைத் தொகுப்பு எதையும் உருவாக்கிக் கொள்ளவில்லை.
- ↑ 4.0 4.1 Layton (1986) p. 35.
- ↑ ASCE (2000). p. 10.
- ↑ Flavell, Eric. "The ASCE Code of Ethics: PRINCIPLES, STUDY, AND APPLICATION". ASCE. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் Nov 27, 2013.
- ↑ போர்ட்டர் எனும் எந்திரப் பொறியாளர் கழக உறுப்பினர் 1892 ஆம் ஆண்டளவிலேயே பொறியாளர் கழகங்கள் சீரான உறுப்பினர் தகுதி, கல்வி, உரிமத் தேவைகள், அறநிலை விதிகள் போன்றவற்றைப் பின்பற்றவேண்டும் என பரிந்துரைத்தார். (Layton (1986). pp. 45-46)
- ↑ Layton (1986). pp. 70 & 114.
- ↑ Petroski (1985)
மேற்கோள்கள்
தொகு- American Society of Civil Engineers (2010) [1914]. Code of Ethics. Reston, Virginia, USA: ASCE Press. Archived from the original on 2011-02-14. பார்க்கப்பட்ட நாள் 2011-12-07.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - American Society of Civil Engineers (2000). Ethics Guidelines for Professional Conduct for Civil Engineers (PDF). Reston, Virginia, USA: ASCE Press. Archived from the original (PDF) on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-11-30.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - Institution of Civil Engineers (2004). Royal Charter, By-laws, Regulations and Rules. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2006-10-20.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - Layton, Edwin (1986). The Revolt of the Engineers: Social Responsibility and the American Engineering Profession. Baltimore, Maryland, USA: The Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-3287-X.
- Petroski, Henry (1985). To Engineer is Human: the Role of Failure in Successful Design. St Martins Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-80680-9.
- National Society of Professional Engineers (2007) [1964]. Code of Ethics (PDF). Alexandria, Virginia, USA: NSPE. Archived from the original (PDF) on 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2006-10-20.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help)
மேலும் படிக்க
தொகு- Alford, C.F. (2002). Whistleblowers: Broken Lives and Organizational Power, Cornell University Press.
- Fleddermann, C.B. (2011). Engineering Ethics, Prentice Hall, 4th edition.
- Glazer, M.P. (1991).Whistleblower, New York, NY: Basic Books.
- Harris, C.E., M.S. Pritchard, and M.J. Rabins (2008).Engineering Ethics: Concept and Cases, Wadsworth Publishing, 4th edition.
- Peterson, Martin (2020). Ethics for Engineers, Oxford University Press.
- Huesemann, Michael H., and Joyce A. Huesemann (2011). Technofix: Why Technology Won’t Save Us or the Environment, Chapter 14, “Critical Science and Social Responsibility”, New Society Publishers, Gabriola Island, British Columbia, Canada, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0865717044, 464 pp.
- Martin, M.W., and R. Schinzinger (2004). Ethics in Engineering, McGraw-Hill, 4th edition.
- Van de Poel, I., and L. Royakkers (2011). Ethics, Technology, and Engineering: An Introduction, Wiley-Blackwell.
வெளி இணைப்புகள்
தொகுஆத்திரேலியா
தொகு- Code of Ethics பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்
கனடா
தொகு- L'Ordre des ingénieurs du Québec (OIQ)
- Software Ethics - A Guide to the Ethical and Legal Use of Software for Members of the University Community of the University of Western Ontario
செருமனி
தொகு- Ethical principles of engineering profession பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
அயர்லாந்து
தொகு- Code of Ethics பரணிடப்பட்டது 2019-12-13 at the வந்தவழி இயந்திரம்
சிறிலங்கா
தொகு- Code of Ethics பரணிடப்பட்டது 2019-05-12 at the வந்தவழி இயந்திரம்
பெரும்பிரித்தானியா
தொகு- Anti-Corruption Action Statement பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம்
- Professional ethics and the IET பரணிடப்பட்டது 2011-12-26 at the வந்தவழி இயந்திரம்
- Engineering Council (EC)
- Statement of Ethical Principles பரணிடப்பட்டது 2015-02-05 at the வந்தவழி இயந்திரம்
அமெரிக்கா
தொகு- Online Ethics Center of the National Academy of Engineering பரணிடப்பட்டது 2018-02-01 at the வந்தவழி இயந்திரம்
- List of links to various professional and scientific societies' codes of ethics
- Onlineethics.org பரணிடப்பட்டது 2020-07-29 at the வந்தவழி இயந்திரம்
- American Society of Mechanical Engineers (ASME), Code of Ethics
- Institute of Electrical and Electronics Engineers (IEEE)