பொறையாற்றுக் கிழான் நற்றேர்ப்பெரியன்

(பொறையாற்றுக்கிழான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொறையாற்றுக் கிழான் நற்றேர்ப்பெரியன்[1] என்பவன் சோழ நாட்டிலுள்ள குறுநில மன்னனாவான். அழுந்தூர்வேள் திதியன் என்பவனின் காவல் மரத்தை அன்னி வெட்டியபோது அவ்வன்னிக்கு இப்பெரியன் துணை போனான்[2]. சங்க கால அரசன் பெரியன் பொறையாற்று கிழான் எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் சிறந்த கொடையாளி. பொறையாறு என்பது இவனது ஊர். இவன் புறந்தை என்னும் உரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான்.

வேங்கட நாட்டில் வாழ்ந்த புலவர் கல்லாடனார் இவனைக் கண்டு பரிசில் வேண்டிப் பாடித் தன் வறுமையைப் போக்கிக்கொண்டார்[3],[4].

பாட்டுப் பாடுபவர்களை இவன் தன் அன்பு வலைக்குள் திளைக்குமாறு செய்திருந்தான். [5]

ஒருகாலத்தில் வேங்கட மலைக்கு வடக்கிலிருந்த நல்ல நெல் விளையும் நிலத்தைக் கொண்ட கல்லாடம் என்னும் ஊரில் வாழ்ந்த கல்லாடனார் என்னும் புலவரின் குடும்பம் பசியால் வாடியபோது இந்த ஊர் பொறையாற்றுக்கு வந்து அரசன் பெரியன் கொடையால் தம் பசியைப் போக்கிக்கொண்டது[6].

இவனைப் பொருத்தமட்டில் பெரியன் என்னும் சொல் பெருமை மிக்க இவனது உள்ளத்தைக் குறிக்கும்.
உருவத்தால் பெரியவனாக விளங்கிய (விஸ்வரூபம் எடுத்த) திருமாலின் பெயர்களில் ஒன்று ‘பெருமால்’ (பெருமாள்).
இதன் பண்டைய தமிழ் வடிவமே பெரியன்.
பெரியார் என்னும் சொல்லைப் போன்றது இது.

பெருமை அடைமொழியுடன் கூடிய ஒப்பிட்டு நோக்கத் தக்க சங்ககாலப் பெயர்கள்
பெருங்கோக்கிள்ளி
பெருங்கோப்பெண்டு
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தன்
பெருஞ்சித்திரனார்
பெருஞ்சேரல் இரும்பொறை
பெருந்தலைச்சாத்தனார்

அடிக்குறிப்பு

தொகு
  1. நற்றிணை 131
  2. நற்றிணை 180
  3. அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
    வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென,
    ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்
    தீர்கை விடுக்கும் - (கல்லாடனார் – புறம் 391)
  4. அகம் 100
  5. பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப் புன்னையங்கானல் புறந்தை முன்றுறை வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன - உலோச்சனார் பாடல் அகநானூறு 100
  6. வேங்கட வைப்பின் வடபுலம் பசித்து என ஈங்கு வந்து இறுத்த என் இரும்பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பு … முதுகுடி கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்