பொலோனியம் டையாக்சைடு

வேதிச் சேர்மம்

பொலோனியம் டையாக்சைடு (Polonium dioxide) என்பது PoO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொலோனியம்(IV) ஆக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பொலோனியத்தின் மூன்று ஆக்சைடுகளுள் இதுவும் ஒன்றாகும். பொலோனியம் மோனாக்சைடு (PoO) மற்றும் பொலோனியம் டிரையாக்சைடு (PoO3) என்பன மற்ற இரண்டு ஆக்சைடுகளாகும். அறை வெப்பநிலையில் பொலோனியம் டையாக்சைடு வெளிர் மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மமாக காணப்படுகிறது. வெற்றிடம் போன்ற தாழ்ந்த அழுத்தத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது தனிமநிலை பொலோனியமாகவும் ஆக்சிசனாகவும் சிதைவடைகிறது. பொலோனியம் ஆக்சைடுகளில் இது நிலைப்புத்தன்மை கொண்ட ஆக்சைடாகும். சால்கோசன்களிடை சேர்மமாகவும் இது கருதப்படுகிறது [4].

பொலோனியம் டையாக்சைடு

கனச்சதுர பொலோனியம் டையாக்சைடு அலகு கூடு (வெண்மை = Po, மஞ்சள் = O)
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
பொலோனியம் டையாக்சைடு
இனங்காட்டிகள்
7446-06-2
UNII JC742031MY Y
பண்புகள்
PoO2
வாய்ப்பாட்டு எடை 240.98 கி/மோல்
தோற்றம் வெளிர் மஞ்சள் படிக திண்மம் [1][2][3]
அடர்த்தி 8.9 கி/செ.மீ3[1]
உருகுநிலை 500 °C (932 °F; 773 K) சிதைவடையும்[1][2]
sublimation (phase transition)
கட்டமைப்பு
படிக அமைப்பு புளோரைட்டு, பியர்சன் குறியீடு cF12
புறவெளித் தொகுதி Fm3m (No 225)
Lattice constant a = 0.5637 நானோமீட்டர்[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கட்டமைப்பு

தொகு

அறை வெப்பநிலையில் பொலோனியம் டையாக்சைடு முக மைய கனசதுர புளோரைட்டு படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உயர்வெப்பநிலைக்கு இதை சூடுபடுத்துகையில் நாற்கோணக படிகக் கட்டமைப்புக்கு மாற்றமடைகிறது. கனசதுர வடிவம் வெளிர் மஞ்சள் நிறத்தோடும் நாற்கோணக வடிவம் சிவப்பு நிறத்தோடும் காணப்படுகிறது. தொடர்ந்து சூடாக்கும்போது பொலோனியம் டையாக்க்சைடு கருப்பாகவும் 885 °செல்சியசு வெப்பநிலை எனப்படும் பதங்கமாகும் வெப்பநிலையில் சாக்கலேட்டு நிறமாகவும் மாறுகிறது[2][3]. Po4+ அயனியின் அயனி ஆரம் 1.02 அல்லது 1.04 Å ஆகும். இதனால் Po4+ /O2− அயனி ஆரங்களின் விகிதம் 0.73 ஆக உள்ளது. கனசதுர படிக வடிவத்தின் குறைந்த நிலைப்புத்தன்மை பொலோனியம் டையாக்சைடை இரண்டு மாறுபாடுகளை அடைய அனுமதிக்கிறது. புதியதாக தயாரிக்கப்படும்போது இது நற்கோணக வடிவத்திலும், குளிர்விக்கப்படும் போது அல்லது நீண்ட காலம் இருப்பில் இருக்கும்போது கனசதுர வடிவத்திற்கும் மாறுகிறது [5].

தோற்றம்

தொகு

இயற்கையில் பொலோனியம் பற்றாக்குறை காரணமாகவும் மற்றும் 250 பாகை செல்சியசு என்ற அதிக வெப்பநிலை தேவை காரணமாகவும் பொலோனியம் டையாக்சைடு இயற்கையாக தோன்றுவதில்லை [2].

தயாரிப்பு

தொகு

தனிமநிலை பொலோனியத்தை ஆக்சிசனுடன் 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கி வினைபுரியச் செய்தால் பொலோனியம் டையாக்சைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது பொலோனியம்(IV) ஐதராக்சைடை (PoO (OH) 2 ), பொலோனியம் டைசல்பேட்டு (Po (SO 4 ) 2 ), பொலோனியம் செலீனேட்டு (Po (SeO 4 ) 2 ), அல்லது பொலோனியம் டெட்ரா நைட்ரேட்டு (Po (NO 3) ) 4 ). போன்ற சேர்மங்களைவெப்பச் சிதைவுக்கு உட்படுத்தியும் பொலோனியம் டையாக்சைடைத் தயாரிக்கலாம் [2].

வேதியியல்

தொகு

வெப்பநிலையில் நிகழ்கிறது. கந்தக டையாக்சைடில் 250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது வெள்ளை நிறத்தில் ஒரு சேர்மம் உருவாகிறது. ஒருவேளை அது பொலோனியம் சல்பைட்டு ஆக இருக்கலாம். பொலோனியம் டையாக்சைடை நீரேற்றம் செய்யும்போது பொலோனசு அமிலம் (H2PoO3) வெளிர் மஞ்சள் நிரத்தில் வீழ்படிவாகிறது. அதன் பெயர் பொலோனசு அமிலமாக இருந்தபோதிலும், இது ஓர் ஈரியல்பு சேர்மம் ஆகச் செயல்படுகிறது. அமிலங்கள் மற்றும் காரங்கள் இரண்டோடும் இது வினைபுரிகிறது.

ஐதரசன் ஆலைடுகளுடன் சேர்ந்து பொலோனியம் டையாக்சைடு ஆலசனேற்றம் அடைந்து பொலோனியம் டெட்ரா ஆலைடுகளை அளிக்கிறது : :[2]

PoO2 + 4 HFPoF4 + 2 H2O
PoO2 + 4 HClPoCl4 + 2 H2O
PoO2 + 4 HBrPoBr4 + 2 H2O
PoO2 + 4 HIPoI4 + 2 H2O

வேதி வினைகளில் பொலோனியம் டையாக்சைடு அதன் ஒத்தவகை சேர்மம் தெலுரியம் டையாக்சைடு போலவே செயல்பட்டு Po(IV) உப்புகளை உருவாக்குகிறது; இருப்பினும், சால்கோசன் ஆக்சைடுகளின் அமிலத் தன்மை தனிமவரிசை அட்டவணை குழுவிற்கு கீழே செல்கையில் குறைகிறது, மேலும் பொலோனியம் டை யாக்சைடு மற்றும் பொலோனியம்(IV) ஐதராக்சைடு சேர்மங்கள் அவற்றின் இலகுவான ஒத்தவரிசை சேர்மங்களைக்காட்டிலும் மிகக் குறைவான அமிலத்தன்மை கொண்டவையாக உள்ளன [5]. உதாரணமாக, SO2, SO3, SeO2, SeO3 மற்றும் TeO3 சேர்மங்கள் அமிலத்தன்மையும் ஆனால் TeO2 ஈரியல்புள்ள ஆக்சைடாகவும் உள்ளது. PoO2 ஈரியல்புள்ளது என்பதால் சில காரப் பண்புகளையும் வெளிப்படுத்துகிறது [6]. பொட்டாசியம் ஐதராக்சைடுடன் அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டுடன் பொலோனியம் டையாக்சைடு காற்றில் வினைபுரிந்து நிறமற்ற பொட்டாசியம் போலோனைட்டை (K 2 PoO 3 ) தருகிறது: :[5]

PoO2 + 2 KOH → K2PoO3 + H2O
PoO2 + 2 KNO3 → K2PoO3 + 2 NO

பொலோனியம் டையாக்சைடு போலோனைட் எதிர்மின் அயனியுடன் ( PoO2−3 ) நெருக்கமாக தொடர்புடையதாகும். இது பொலோனியம் டிரையாக்சைடும் பொலோனேட்டு எதிர்மின் அயனிக்கும் இடையிலான உறவைப் போன்றது.

பயன்கள்

தொகு

பொலோனியம் டையாக்சைடு அடிப்படை ஆராய்ச்சிக்கு பயன்படுவதற்கு அப்பாற்பட்டு வெளியே எந்தப் பயனும் இதற்கில்லை [5].

முன்னெச்சரிக்கை

தொகு

பொலோனியம் டையாக்சைடு போன்ற அனைத்து பொலோனியம் சேர்மங்களும் மிகவும் கதிரியக்கத்தன்மை கொண்டவை, எனவே அவை கையுறை பெட்டியில் கையாளப்பட வேண்டும். கையுறை பெட்டியை மேலும் ஒரு கையுறை பெட்டியைப் போன்ற மற்றொரு பெட்டியில் வைத்து மூடப்பட வேண்டும், கதிரியக்க பொருட்கள் வெளியேறாமல் தடுக்க கையுறை பெட்டியை விட சற்றே குறைந்த அழுத்தத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இயற்கை இரப்பரால் செய்யப்பட்ட கையுறைகள் பொலோனியத்திலிருந்து வரும் கதிர்வீச்சுக்கு எதிராக போதுமான பாதுகாப்பை அளிக்காது; அறுவை சிகிச்சை கையுறைகள் அவசியம். நியோபிரீன் கையுறைகள் இயற்கை இரப்பரை விட பொலோனியத்தின் கதிர்வீச்சை எதிர்த்து கவசப்படுத்துகின்றன [5].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 | publisher = CRC Press | isbn = 978-1-4398-5511-9|page=4.81| title-link = CRC Handbook of Chemistry and Physics }}
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  3. 3.0 3.1 3.2 Bagnall, K. W.; D'Eye, R. W. M. (1954). "The Preparation of Polonium Metal and Polonium Dioxide". Journal of the Chemical Society (RSC): 4295–4299. doi:10.1039/JR9540004295. http://pubs.rsc.org/en/content/articlelanding/1954/jr/jr9540004295. பார்த்த நாள்: 12 June 2012. 
  4. Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 585, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. pp. 197–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-023604-6. பார்க்கப்பட்ட நாள் June 14, 2012.
  6. Ebbing, Darrell D.; Gammon, Steven D. (2009). General Chemistry (9 ed.). Boston: Houghton Mifflin Company. p. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-85748-7. பார்க்கப்பட்ட நாள் June 14, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலோனியம்_டையாக்சைடு&oldid=4156817" இலிருந்து மீள்விக்கப்பட்டது