போகாலெட்ச் கெப்ரே

போகாலெட்ச் போக் கெப்ரே (Bogaletch Boge Gebre) ( போ-கே என்றும் உச்சரிக்கப்படுகிறார்) (பிறப்பு:1950 - இறப்பு: 2019 நவம்பர் 2) [1] இவர் ஒரு எத்தியோப்பியன் விஞ்ஞானியும் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். 2010 ல், தி இன்டிபென்டன்ட் என்ற இதழ் இவரை "எத்தியோப்பியன் பெண்களில் கிளர்ச்சியைத் தொடங்கியவர்" என்று வகைப்படுத்தியது.

போகாலெட்ச் கெப்ரே
பிறப்பு1960 Edit on Wikidata
Kembata Zone Edit on Wikidata
இறப்பு2 நவம்பர் 2019 Edit on Wikidata
லாஸ் ஏஞ்சலஸ் Edit on Wikidata
விருதுகள்North–South Prize, King Baudouin International Development Prize, Jonathan Mann Award for Health and Human Rights, Knight of the Legion of Honour Edit on Wikidata

இவரது சகோதரி ஃபிகிர்டே கெப்ரேவுடன் சேர்ந்து, கெப்ரே கெம்பட்டி மென்டி கெஸ்ஸிமா-டோப் (கெம்பட்டா பெண்கள் ஒன்றாக நிற்கிறார்கள்) என்றும் அழைக்கப்படும், எத்தியோப்பியாவின் கெம்பாட்டாவை தளமாகக் கொண்ட ஒரு உள்நாட்டு அரசு சாரா தொண்டு நிறுவனமான கே.எம்.ஜி எத்தியோப்பியாவை நிறுவினார். பெண் பிறப்புறுப்பு சிதைவு மற்றும் திருமணக் கடத்தல்களைத் தடுப்பது, இளம் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற பல பகுதிகளில் பெண்களுக்கு சேவை செய்வதற்காக இந்த தொண்டு நிறுவனம் செயல்படுகிறது.[2] எத்தியோப்பியாவின் பாரம்பரிய நடைமுறைகளுக்கான தேசிய குழுவின் கூற்றுப்படி, இத்தகைய நடைமுறைகள் 2003ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் 69 சதவீதத் திருமணங்களுக்கு அடிப்படையாக இருந்தன.

விருதுகள்

தொகு

இந்த அமைப்பு கெம்பட்டாவில் மணப்பெண் கடத்தல் விகிதத்தை 90 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளதாக தி இன்டிபென்டன்ட் இதழ் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பெண் பிறப்புறுப்பு சிதைவை 100 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைத்த பெருமைக்குரியது என்று தி எகனாமிஸ்ட் என்ற இதழ் குறிப்பிடுகிறது. 2005ஆம் ஆண்டில், கெப்ரேக்கு 2005 வடக்கு-தெற்கு பரிசு மற்றும் 2007இல் உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மான் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டது.[3] ஆப்பிரிக்காவின் வளர்ச்சியில் இவர் செய்த பங்களிப்பிற்காக, 2013 மே மாதத்தில் இவருக்கு கிங் பௌடவுன் சர்வதேச மேம்பாட்டு பரிசு வழங்கப்பட்டது.[4]

பின்னணி

தொகு

12 வயதில் பெண் பிறப்புறுப்பு சிதைவினால் பாதிக்கப்பட்ட கெப்ரே, தனது தந்தையால் முறையான கல்வி கற்க தடை செய்யப்பட்டார். ஆனால், ஒரு மிஷனரி பள்ளியில் சேர தனது வீட்டை விட்டு வெளியேறி அங்கு முறையான கல்வியைக் கற்றார்.[5][6] இறுதியில், 1946 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் செனட்டர் ஜே. வில்லியம் ஃபுல்பிரைட்டால் நிறுவப்பட்ட ஐக்கிய அமெரிக்க கலாச்சார பரிவர்த்தனை திட்டங்களில் ஒன்றான ஃபுல்பிரைட் உதவித்தொகையில் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு ஜெருசலேமில் நுண்ணுயிரியல் பயின்றார்.[7] ஐக்கிய அமெரிக்காவில் இருந்தபோது, எத்தியோப்பியன் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் 26,000 டாலர் மதிப்புள்ள தொழில்நுட்ப புத்தகங்களைப் பெற்றனர்.[8]

கே.எம்.ஜி எத்தியோப்பியா

தொகு

தொற்றுநோயியல் துறையில் பி.எச்.டி பெற்ற பிறகு, 1990களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவுவதற்காக கெப்ரே எத்தியோப்பியாவுக்குத் திரும்பினார். எச்.ஐ.வி / எய்ட்ஸ் என்ற தடைத் தலைப்பில் ஒரு ஆரம்ப பொது உரையைத் தொடர்ந்து, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு சமூகத்துடன் நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்பதை கெப்ரே உணர்ந்தார். எனவே சிக்கல்களைத் தீர்ப்பதற்கு தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டார். அமைப்பை கட்டியெழுப்ப தேவையான பொருட்களை வழங்கினார். பிராந்திய குழந்தைகள் அருகிலுள்ள பள்ளியையும் வணிகர்களையும் உள்ளூர் சந்தையை அடைய அனுமதிக்கும் ஒரு பாலமாக இருந்தார். பின்னர், இவரும் இவரது சகோதரியும் கே.எம்.ஜி எத்தியோப்பியாவை உருவாக்கி, பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கிராமம் மூலம் சமூக ஆலோசனை கிராமத்தைத் திறந்தனர்.

குறிப்புகள்

தொகு
  1. "Ethiopian Women Rights Advocate Passes Away". www.ezega.com. பார்க்கப்பட்ட நாள் Nov 12, 2019.
  2. "KMG Ethiopia". KMG Ethiopia. Archived from the original on 2013-04-23. பார்க்கப்பட்ட நாள் 17 August 2014.
  3. "Fulbright Alumna Awarded King Baudouin Prize in Belgium". Bureau of Educational and Cultural Affairs. United States Department of State. Archived from the original on August 19, 2014. பார்க்கப்பட்ட நாள் August 17, 2014.
  4. "Bogalatech Gebre (Ethiopia)" (PDF). eeas.europa.eu. Archived from the original (PDF) on 28 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 17 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Rosenberg, Tina (July 17, 2013). "Talking Female Circumcision Out of Existence". The New York Times. http://opinionator.blogs.nytimes.com/2013/07/17/talking-female-circumcision-out-of-existence/?_php=true&_type=blogs&_r=0. பார்த்த நாள்: 17 August 2014. 
  6. "Abducted. Raped. Married. Can Ethiopia's wives ever break free?". Abbay Media. March 17, 2010 இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819130202/http://abbaymedia.com/2010/03/17/abducted-raped-married-can-ethiopias-wives-ever-break-free/. பார்த்த நாள்: 17 August 2014. 
  7. Hari, Johann (March 16, 2010). "Kidnapped, Raped, Married: The Extraordinary Rebellion of Ethiopia's Abducted Wives". The Independent. https://www.independent.co.uk/news/world/africa/kidnapped-raped-married-the-extraordinary-rebellion-of-ethiopias-abducted-wives-1922263.html. பார்த்த நாள்: 17 August 2014. 
  8. Shetty, Priya (June 23, 2007). "Bogaletch Gebre: ending female genital mutilation in Ethiopia". The Lancet. http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736%2807%2960964-7/fulltext#. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகாலெட்ச்_கெப்ரே&oldid=3628115" இலிருந்து மீள்விக்கப்பட்டது