போகி
போகி (Bhogi) தமிழ் நாட்காட்டியில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள், இந்தியாவில் கொண்டாடுகின்ற பண்டிகை ஆகும்.[1] கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளிலும், சில ஆண்டுகளில் சனவரி 14 ஆம் நாளிலும் வரும். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.[2]
போகி பொங்கல் Bhogi Pongal | |
---|---|
வகை | ஆண்டுதோறும் |
முக்கியத்துவம் | இடை குளிர்காலப் பண்டிகை |
கொண்டாட்டங்கள் | பழையனவற்றைத் தீயிடல், காப்பு கட்டு, |
நாள் | மார்கழி 30 |
தொடர்புடையன | சங்கராந்தி பொங்கல் |
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.[4]
இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி கோலம் இட்டு அழகுபடுத்துவது வழக்கம்.
நிலைப்பொங்கல்
தொகுபோகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Bhogi Pongal - First Day of Pongal Festival". Archived from the original on 2016-01-13. பார்க்கப்பட்ட நாள் 2015-12-19.
- ↑ "Pongal Bhogi". Hindustan Times.
- ↑ ஆர்.குமரேசன். "காப்புக் கட்டு என்பது வெறும் சடங்கல்ல... ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ [1] Post Jagran Article 15 01 2014