போக்ரி சந்தை

கராச்சி சந்தை

போக்ரி சந்தை (Bohri Bazaar) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியின் சதார் நகரத்தில் அமைந்துள்ள ஒரு சந்தையாகும்.[1] போக்ரா சந்தை என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.

போக்ரி சந்தை
Bohri Bazaar
بوہری بازار
சந்தை
நாடுபாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
நகரம்கராச்சி
நிறுவப்பட்டது1939

போக்ரி சந்தை கராச்சியின் பழமையான சந்தைகளில் ஒன்றாகும். [2]

ஒரு காலத்தில் கராச்சியில் மிகவும் பிரபலமான பொருட்கள் வாங்கும் இடமாக இருந்தது. [2] [3] இசுதான்புல்லின் பெரிய சந்தையைப் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். [2] [3]

வரலாறு தொகு

போக்ரி சந்தை 1939 ஆம் ஆண்டில் பிரித்தானிய இராணுவ வீரர்களின் முகாம்களுக்கான இடமாக நிறுவப்பட்டது. [1] கராச்சியின் போக்ரா சமூகத்தின் பெயர் சந்தைக்கு இடப்பட்டது . [4] [5] சமூகம் சந்தையின் மையத்தில் தாகிரி பள்ளிவாசல் என்ற பள்ளிவாசலை கட்டியுள்ளது. [4]

2022 ஆம் ஆண்டு ஆகத்து மாத நிலவரப்படி, சந்தையில் குறைந்தது 5,000 கடைகள் இருந்தன.[4]

சம்பவங்கள் தொகு

போக்ரி சந்தையின் சில பகுதிகள் 1958 ஆம் ஆண்டு தீ விபத்தில் மோசமாக சேதமடைந்தன, ஆனால் மீண்டும் கட்டப்பட்டன, மீண்டும் 1987 ஆம் ஆண்டு கராச்சி கார் குண்டுவீச்சிலும் சேதமடைந்து பின்னர் மீட்டெடுக்கப்பட்டன. [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Bohri bazaar; an old Bazaar of Karachi".
  2. 2.0 2.1 2.2 2.3 "Cultural heritage: Bohri Bazaar – once a most famous thriving marketplace" (in en). The Express Tribune. 2015-02-22. http://tribune.com.pk/story/842541/cultural-heritage-bohri-bazaar-once-a-most-famous-thriving-marketplace. "Cultural heritage: Bohri Bazaar – once a most famous thriving marketplace". The Express Tribune. 22 February 2015. Retrieved 28 April 2022.
  3. 3.0 3.1 "Bohri bazaar: Stepping back in time" (in en). Dawn newspaper. 2011-01-30. https://www.dawn.com/2011/01/30/bohri-bazaar-stepping-back-into-time/. "Bohri bazaar: Stepping back in time". Dawn newspaper. 30 January 2011. Retrieved 28 April 2022.
  4. 4.0 4.1 4.2 "Bohri Bazaar, where old meets new - A historic place with affordable shopping attracts customers from all over Karachi".
  5. "Bohri Bazaar saga".
"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்ரி_சந்தை&oldid=3840260" இலிருந்து மீள்விக்கப்பட்டது