போடோ ஒப்பந்தம்

போடோ ஒப்பந்தம் (Bodo Accord) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள போடோலாந்து போராட்ட அமைப்புகள், இந்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசுகளுக்கு இடையே 27 சனவரி 2020 அன்று செய்து கொள்ளப்பட மூன்றாவது ஒப்பந்தம் ஆகும்.[1] [2] இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் சா முன்னிலையில், அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் மற்றும் போடோலாந்து போராட்டக் குழு தலைவர்கள் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தால் கடந்த 27 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய போடோ பழங்குடி மக்கள் தனி போடோலாந்து மாநிலக் கொள்கையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்துடன் இணைந்தனர். மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் போடோ மக்களுக்கு சிறப்பு அரசியல், பொருளாதார உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த ஒப்பந்தத்தை கொண்டாடுவதற்கு 7 பிப்ரவரி 2020-இல் கோக்ரஜார் நகரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விழா நடைபெற்றது.[3][4]இந்த விழாவின் போது போடோலாந்தின் வளர்ச்சிக்கு இந்திய அரசு ரூ 1500 கோடி வழகியங்து.

போடோ ஒப்பந்த வரலாறு

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The third Bodo accord: A new deal
  2. போடோ ஒப்பந்தம் குறித்து பிரதமர் பெருமிதம்
  3. போடோ ஒப்பந்தத்தை கொண்டாடும் பொதுக்கூட்டம்
  4. Bodoland celebrates Accord
  5. Bodoland Territorial Council

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போடோ_ஒப்பந்தம்&oldid=2926743" இலிருந்து மீள்விக்கப்பட்டது