போட்சா ஜான்சி லட்சுமி

இந்திய அரசியல்வாதி

போட்சா ஜான்சி லட்சுமி ( Botsa Jhansi Lakshmi) இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மக்களவைத் தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினருமாவார்.[1]

போட்சா ஜான்சி லட்சுமி
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை
பதவியில்
2009–2014
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
பின்னவர்அசோக் கஜபதி ராஜு
தொகுதிவிஜயநகரம்[1]
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை
பதவியில்
2006–2009
முன்னையவர்கொண்டப்பள்ளி பைதிதல்லி நாயுடு
பின்னவர்தொகுதி கலைக்கப்பட்டது
தொகுதிபொப்பிலி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்போட்சா சத்யநாராயணா
பிள்ளைகள்1மகன் , 1 மகள்[1]
As of 20 நவம்பர், 2010
மூலம்: [1]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ஜான்சி லட்சுமி, 11 ஏப்ரல் 1964 அன்று ராஜமன்றியில் மஜ்ஜி ராமராவ் மற்றும் கலாவதிக்கு மகளாகப் பிறந்தார். முதுகலை (தத்துவம்), முனைவர் ஆகியவற்றை படித்தார். இவர் ஆந்திரப் பிரதேச முன்னாள் அமைச்சர் போட்சா சத்தியநாராயணாவை மணந்தார். இவருக்கு 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.

தொழில் தொகு

ஜான்சி 2001-2006 வரை விஜயநகர மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்தார்.[2] 2007-09 காலகட்டத்தில், இவர் மக்களவையில் பொப்பிலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2009 ஆம் ஆண்டுவிஜயநகரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Lok Sabha". 2013-02-01. Archived from the original on 1 February 2013. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
  2. "Vizianagaram zp chairman race".
"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்சா_ஜான்சி_லட்சுமி&oldid=3824164" இலிருந்து மீள்விக்கப்பட்டது