போண்டா
போண்டா தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உண்ணப்படும் ஒரு பலகாரம் ஆகும். இது கோளவடிவில் இருக்கும். கடலை மாவினை எண்ணெயில் பொரித்து இது செய்யப்படுகிறது. இதன் மேற்பகுதி மொறுமொறுப்பாகவும் உட்பகுதி மெதுமெதுவெனவும் இருக்கும்.[1]
- உருளைக்கிழங்கு மசியல்[2], வேக வைத்த முட்டை[3], மசித்த கீரை[4] போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளங்கைக்குள் அடங்குமாறு பிடித்து அதனை கடலை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொறித்து போண்டா செய்யப்படுகிறது.
- மேலும் இத்துடன் கடலை மாவுடன் கார மசாலா பொருட்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் போண்டா சாதா போண்டா அல்லது கார போண்டா என்றும் அழைக்கப்படுகிறது.
- மேலும் மேற்கண்ட கலவையுடன் கீரை சேர்த்து கொண்டு செய்யப்படும் போண்டா கீரை போண்டா என்றும் அழைக்கப்படுகிறது.
- வெறும் கடலை மாவுடன் வரமிளகாய் அரைத்த பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் போண்டா கடலை மாவு போண்டா அல்லது மெது போண்டா என்றும் அழைக்கப்படுகிறது.
போண்டா வகைகள்
தொகு- போண்டா (கார போண்டா)
- உருளைக்கிழங்கு போண்டா (மசால் போண்டா)
- கடலை மாவு போண்டா (மெது போண்டா)
- பர்மா போண்டா
- கீரை போண்டா
- முட்டை போண்டா
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "போண்டா". Archived from the original on 2015-08-16. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.
- ↑ "உருளை போண்டா". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.
- ↑ "முட்டை போண்டா". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.
- ↑ "கீரை போண்டா". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.