போதனா சிவானந்தன்

போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan, பிறப்பு: 2015)[1] என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சதுரங்கம் ஆட்டக்காரர் ஆவார். இவர் பெண் வேட்பாளர் மாசுட்டர் பட்டத்தைக் கொண்டுள்ளார்.

போதனா சிவானந்தன்
நாடுஇங்கிலாந்து
பிறப்பு2015 (அகவை 8–9)
பட்டம்பெண் மாசுட்டர் வேட்பாளர் (2023)[1]
உச்சத் தரவுகோள்1857 (திசம்பர் 2023)

வாழ்க்கைக் குறிப்பு தொகு

2015 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளி தமிழ்க் குடும்பம் ஒன்றில் இங்கிலாந்தில் பிறந்த போதனா இலண்டன், கரோ நகரில் வசிக்கிறார். சிவா சிவானந்தன் என்பவரின் மகள். புனித யோன் பிசர் தொடக்கப் பள்ளியில் கல்வி பயிலுகிறார்.[2][3]

சதுரங்கத்தில் ஈடுபாடு தொகு

போதனா 2020 இல் கோவிட்-19 முடக்கக் காலத்தில் சதுரங்கம் பயிலத் தொடங்கினார். 2022 இல் இவர் கூறியது: "நான் சதுரங்கம் விளையாட விரும்புகிறேன், ஏனென்றால் அது எனக்கு வடிவங்களை அடையாளம் காணவும், என் கவனத்தை ஒருமுகப்படுத்தவும், எப்படி நகர்வுகளை முன்கூட்டியே திட்டமிடுவது, கணக்கிடுவது என்பதை அறியவும் உதவுகிறது. மேலும், சதுரங்கக் காய்கள், குறிப்பாகக் குதிரை பலகையில் நகரும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்."[4]

விளையாட்டைக் கற்றுக்கொண்ட 15 மாதங்களுக்குப் பிறகு, 2022 மார்ச்சில், போதனாவை ஆங்கிலேய சதுரங்க வீரர் லியோனார்ட் பார்டன் "விதிவிலக்கானவர்" என்று கூறினார். "விரைவு, மின்னல் ஆட்டங்களில் ஐரோப்பிய 8-அகவைக்குக் குறைந்த பெண்கள் ஆட்டங்கள் இரண்டிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற போதனா சிவானந்தன், 322 பிடே புள்ளிகள் வித்தியாசத்தில் தனது வயதுப் பிரிவில் மின்னல் ஆட்டத்தில் உலகின் முதல்-தரப் பெண்" மற்றும் "செர்பியாவில் போதனாவின் பதக்கங்கள் யோவான்கா அவுசுக்காவின் சாதனையுடன் இணைகின்றன."[2]

2022 மே மாதத்தில், உரோட்சில் நடைபெற்ற ஐரோப்பியப் பள்ளிகளின் வயதுப் பிரிவு வாகையாளர் போட்டிகளில், போதனா தான் விளையாடிய 24 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.[5]

தனது ஏழாவது அகவையில், ஆகத்து 2022 இல் போதனா டார்க்கியில் நடந்த பிரித்தானிய சதுரங்க வாகையாளர் போட்டியில் பங்கேற்றார். தி கார்டியனில் எழுதும் லியோனார்ட் பார்டன், திறந்த விரைவுப் போட்டியில் அவரது ஆட்டத்தை "கண்ணைக் கவரும் செயல்திறன்" என்று விவரித்தார்: இவர் இளைய போட்டியாளர், அத்துடன் இரண்டு வெற்றிகளுக்கும், ஒரு சமத்திற்கும் பிறகு இவர் தற்போதைய 12-வயதிற்குட்பட்ட வாகையாளரைத் தோற்கடித்தார். இவ்வெற்றிக்கு முன்னர் கீத் ஆர்க்கெல் என்ற கிராண்ட்மாசுட்டரால் தோற்கடிக்கப்பட்டார். கீத் ஆர்க்கெல் தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அவளுடைய அனுபவமின்மையால் தான் நான் வெற்றி பெற்றேன்" என்று கூறினார்.[6]

2023 அக்டோபரில் எகிப்து, சாம் எல் சேக் நகரில் நடைபெற்ற 8-அகவைக்குட்பட்ட பெண்களுக்கான உலக இளையோர் சதுரங்க வாகையாளர் போட்டியில் வெற்றிபெற்று முதலாவதாக வந்தார்.[7]

தனது எட்டு வயதில், போதனா 2023 திசம்பரில் குரோவாசியா, சாகிரேப் நகரில் நடைபெற்ற 2023 ஐரோப்பிய மின் (பிளிட்சு) வாகையாளர் போட்டியில் 8.5/13 எடுத்தார்;[8][9][10] இதற்கு முன்னதாக முன்னாள் பிரித்தானிய சதுரங்க வாகையாலரான பீட்டர் லீயை கண்காட்சிப் போட்டி ஒன்றில் தோற்கடித்தார்.[8]

பன்னாட்டு மாசுட்டர் லாரன்ஸ் டிரெண்ட் 2023 இல் துவிட்டரில் பின்வருமாறு எழுதினார்: "இவரது விளையாட்டின் முதிர்ச்சி, அவரது உன்னதமான தொடுதல், அது உண்மையிலேயே மூச்சுத் திணறல். இவர் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வீரராக இருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை".[10]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Profile: Sivanandan, Bodhana". International Chess Federation (FIDE). பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
  2. 2.0 2.1 Barden, Leonard (18 March 2022). "Chess: Rapport closes in on Candidates as six-year-old steals show at Blackpool". The Guardian. https://www.theguardian.com/sport/2022/mar/18/chess-rapport-closes-in-on-candidates-as-six-year-old-steals-show-at-blackpool. 
  3. "Home". www.stjohnfisherschool.co.uk. St John Fisher Catholic Primary School. பார்க்கப்பட்ட நாள் 21 December 2023.
  4. Hill, Amelia (8 July 2022). "Rachel Reeves hopes chess festival can be opening gambit for children’s futures". The Guardian. https://www.theguardian.com/sport/2022/jul/08/rachel-reeves-chess-festival-opening-gambit-childrens-futures. 
  5. Leonard Barden (6 May 2022). "Chess: England children sweep gold medals and world titles in Rhodes". The Guardian. https://www.theguardian.com/sport/2022/may/06/chess-england-children-sweep-gold-medals-and-world-titles-in-rhodes. 
  6. Leonard Barden (19 August 2022). "Chess: Bodhana Sivanandan, seven, shines at British Championships". The Guardian. https://www.theguardian.com/sport/2022/aug/19/chess-british-championships-this-week-as-bodhana-sivanandan-seven-shines. 
  7. FIDE WORLD CADETS CHESS CHAMPIONSHIPS ( girls U08 )
  8. 8.0 8.1 Leonard Barden (18 December 2023). "Aged just eight, Bodhana Sivanandan enters chess history". https://www.ft.com/content/ccc25257-6479-4ad5-843c-0a3e913498e7. 
  9. Katie Gibbons (19 December 2023). "How British schoolgirl, 8, became chess queen of Europe". The Times. https://www.thetimes.co.uk/article/bodhana-sivanandan-chess-master-defeat-match-hcd5j7pmt. 
  10. 10.0 10.1 Samantha Jagger (20 December 2023). "London chess prodigy, 8, wins title at European championships". BBC News. https://www.bbc.com/news/uk-england-london-67770604. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போதனா_சிவானந்தன்&oldid=3852460" இலிருந்து மீள்விக்கப்பட்டது