போனிடா சர்மா

போனிடா சர்மா (Bonita Sharma) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு சுகாதார மற்றும் ஊட்டச்சத்து ஆர்வலராவார். சமூக மாற்றத் தயாரிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் என்ற இளைஞர்கள் தலைமையிலான ஓர் அமைப்பை நடத்தி வருகிறார்.பெண்களை கல்வி, புதுமை, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தொழில்முனைவோர்களாக்க அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டதாகும். 2019 ஆம் ஆண்டு பிபிசியின் மிகச் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இவரும் பட்டியலிடப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு ஒரு நிகழ்வில் போனிடா சர்மா

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சர்மா நேபாளத்தில் பிறந்தார். அவர் பர்பன்சால் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்தில் பிஏ படித்தார் மற்றும் திருபுவன் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்தை சிறப்புப் பாடமாகக் கொண்ட வீட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]

தொழில்

தொகு

போனிடா சர்மா 2017 ஆம் ஆண்டில் சமூக மாற்றத் தயாரிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அமைப்பை நிறுவினார்.[2] இவ்வமைப்பின் தலைமை நிர்வாகியாகவும் இயங்கி வருகிறார். இது ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது, நல்ல ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது போன்றவை இவ்வமைப்பின் நோக்கங்களாக உள்ளன. குறிப்பாக பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகள் இவ்வமைப்பின் கவனத்தில் கொள்ளப்படுகிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தை இறப்புகளைக் குறைப்பதற்காக, நியூட்ரிபீட்சு அல்லது போசன் மாலா என்ற வளையலை இவர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவைத் திட்டமிட உதவுகிறது.[3] 2016 ஆம் ஆண்டில் நியூட்ரிபீட்சு திட்டம் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் இளைஞர் கண்டுபிடிப்பு போட்டியை வென்றது. வளையல்களை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில், கிழக்கு நேபாளத்தின் மொராங் மாவட்டத்தில் பேரழிவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூக மாற்றத் தயாரிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அமைப்பின் உதவியை வழங்க முடிந்தது.[1]

28 மணிகள் கொண்ட சிவப்பு வட்ட வளையல்களையும் சமூக மாற்றத் தயாரிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அமைப்பு உற்பத்தி செய்கிறது, இதனால் பெண்கள் வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தி மாதவிடாய் சுழற்சியைத் திட்டமிட முடியும்.[4][3] ஊட்டச்சத்து, கருக்கலைப்பு மற்றும் கோவிட் -19 போன்ற பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்தும் சர்மா எழுதுகிறார்.

2019 ஆம் ஆண்டில் பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில் சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டது. மேலும், இவருடைய பெண்கள் கல்வி உரிமைக்கான செயல்பாட்டிற்காக மலாலா நிதியின் ஒரு பகுதியாக யுனெசுகோ பெண் வெற்றியாளர் என்ற சிறப்பையும் பெற்றார். [2] அனைத்து நாடுகளிலும் உள்ள இளம் தலைவர்களுடன் இணைந்து செயல்படும் அமைப்பும் காலநிலை மாற்றத்தை ஊக்குவிக்க காலநிலை மாற்றத்தின் முன்னணியில் உள்ள மக்கள் சமூகம், நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்ற அமைப்புமான ஒன் யங் வோல்டு சீரோ அங்கர் பிரிவில் இவரது அமைப்பான சமூக மாற்றத் தயாரிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அமைப்புக்கு விருதாக $50,000 வழங்கி சிறப்பித்தது. யுஎன்டிபி முடுக்கி ஆய்வகம் மற்றும் ஊண்டாய் நிறுவனம் ஆகியவற்றின் நாளைய 2030 இயங்குதளத்தில் 2020 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து கல்விக்கான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான குறைந்த தொழில்நுட்ப தீர்வை செயல்படுத்தியதற்காக இவர் சிறப்பிக்கப்பட்டார். இதேபோல, கோவிட் -19 நெருக்கடியில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக போனிடாவுக்கு பில் & மெலிண்டா கேட்சு அறக்கட்டளையின் கோல்கீப்பர் குளோபல் கோல்சு புரோக்ரசு விருதும் 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Rijal, Ajita. "The Rising Nepal: Bonita, latest inspiration to Nepali youth". The Rising Nepal இம் மூலத்தில் இருந்து 8 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200908204351/http://therisingnepal.org.np/news/32039. பார்த்த நாள்: 8 September 2020. 
  2. 2.0 2.1 "Bonita, a young change-maker inspires girls and women in Nepal through education". UNESCO (in ஆங்கிலம்). 23 January 2019. Archived from the original on 11 June 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
  3. 3.0 3.1 "Bonita Sharma : BBC's Top 100 Women From Nepal". Nepali Trends. 18 October 2019. Archived from the original on 8 September 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020."Bonita Sharma : BBC's Top 100 Women From Nepal". Nepali Trends. 18 October 2019. Archived from the original on 8 September 2020. Retrieved 8 September 2020.
  4. "Accelerating mission nutrition, Bonita Sharma". TNM. Archived from the original on 7 June 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
  5. "We Are Goalkeepers". www.gatesfoundation.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-05.
  6. "2 OYW Ambassadors named Goalkeepers Award Winners". www.oneyoungworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனிடா_சர்மா&oldid=3919494" இலிருந்து மீள்விக்கப்பட்டது