கருக்கலைப்பு

கருப்பையிலிருந்து கரு முதிராமல் முன்னரே வெளியேறுதல்

கருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். சில சமயங்களில் தானாகவே முளையம் அல்லது முதிர்கரு கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்துவிடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு (Miscarriage) அல்லது இயல்பு கருக்கலைப்பு அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு (Spontaneous Abortion) எனப்படும். தானாக அன்றி, ஒரு நோக்கோடு செய்யப்படும் கருக்கலைப்பு தூண்டற் கருக்கலைப்பு (Induced abortion) எனப்படுகிறது. பொதுவில் கருக்கலைப்பு என்ற சொல், வேண்டுமென்றே செய்யப்படும் தூண்டற் கருக்கலைப்பையே குறிக்கிறது.

தூண்டற் கருக்கலைப்பு
A woman receiving Pennyroyal, a common Medieval abortifacient. From Herbarium by Pseudo-Apuleius. 13th-century manuscript.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமகப்பேறியல்
ஐ.சி.டி.-10O04.
ஐ.சி.டி.-9779.6
நோய்களின் தரவுத்தளம்4153
மெரிசின்பிளசு002912
ஈமெடிசின்article/252560
பேசியண்ட் ஐ.இகருக்கலைப்பு

தூண்டற் கருக்கலைப்பில், ஏதேனும் ஒரு மருத்துவக்காரணம் கருதி (தாயின் நலம் கருதி) உண்டாக்கப்படும் கருக்கலைப்பு சிகிச்சைக் கருக்கலைப்பு எனப்படும். பிற காரணங்களுக்காக செய்யப்படும் கருக்கலைப்பு தேர்வுக் கருக்கலைப்பு எனப்படும். பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது. வேலையில் ஏற்படும் குழப்பங்கள், படிப்பில் ஏற்படக் கூடிய இடைஞ்சல்கள், நிரந்தரமற்ற பொருளாதார நிலை, உறவுகளில் உறுதியற்ற தன்மை போன்றனவே பொதுவாக இவ்வகையான தூண்டற் கருக்கலைப்புக்கு காரணமாகின்றன[1][2]. ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது கர்ப்பம் தரித்திருந்தாலும், இவ்வாறான கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

சட்டபூர்வமான அனுமதி உள்ள நிலையில், வளர்ந்த நாடுகளில் செய்யப்படும் கருக்கலைப்பு, மிகவும் பாதுகாப்பான மருத்துவச் செயல்முறைகளில் ஒன்றாக இருக்கிறது.[3][4] நவீன முறையில் சில மருந்துகள் மூலமாகவோ, அல்லது அறுவைச் சிகிச்சை மூலமாகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது.[5] சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும் கருக்கலைப்புச் செய்யப்படும்போது, நீண்டகாலத்தில் ஏற்படக்கூடிய மனநல, உடல்நலப் பாதிப்புகள் தவிர்க்கப்படலாம்.[6] ஆனால், திறமையற்றவர்களால், சுகாதாரமற்ற சூழலில், அபாயகரமான உபகரணங்கள் பயன்படுத்திப் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் சட்டபூர்வமற்ற கருக்கலைப்பு நிகழ்வுகளினால், ஆண்டொன்றுக்கு 5 மில்லியன் பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதுடன், 47000 பேர் இறப்புக்கு உள்ளாகின்றனர்.[6][7] எல்லாப் பெண்களுக்கும் பாதுகாப்பான, சட்டபூர்வமான கருக்கலைப்புக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்கிறது,.[8]

வரலாறு தொகு

 
கருக்கலைப்புத் தொடர்பான அனைத்துலக சட்டங்களின் நிலையைக் காட்டும் வரைபடம். ஐக்கிய நாடுகள் அவையின் 2013 ஆம் ஆண்டிற்கான அறிக்கை[9] , சில இடங்களில் இவற்றில் மிகச் சரியான தன்மை இல்லாது இருக்கலாம்.
    கோரிக்கை இருப்பின் சட்டப்படி செய்யலாம்
    தாயின் உயிர், மனநலம், உடல்நலம், வன்கலவி, குறைபாடுள்ள முதிர்கரு, சமூகப் பொருளாதாரக் காரணிகள் போன்ற நிலைகளுக்கேற்ப சட்டப்படி செய்யலாம்.
    தாயின் உயிர், மனநலம், உடல்நலம், வன்கலவி, குறைபாடுள்ள முதிர்கரு போன்ற நிலைகளுக்கேற்ப சட்டப்படி செய்யலாம்.
    தாயின் உயிர், மனநலம், உடல்நலம், வன்கலவி போன்ற நிலைகளுக்கேற்ப சட்டப்படி செய்யலாம்.
    தாயின் உயிர், மனநலம், உடல்நலம் போன்ற நிலைகளுக்கேற்ப சட்டப்படி செய்யலாம்.
    தாயின் உயிரைக் கருத்தில்கொண்டு சட்டப்படி செய்யலாம்.
    எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சட்டத்துக்குப் புறம்பான செயலாகக் கொள்ளப்படும்.
    தொடர்பான தகவல்கள் இல்லை[needs update]

கருக்கலைப்பு என்பது நீண்ட வரலாற்றை உடையது. முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், உடற்காயங்களை உண்டாக்குதல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும்.[10] தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன.

கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுதும் நடைபெறுகின்றன.[11][12] கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்குச் சமமானது என்றும், அதனை அழிப்பது கொலைக்குச் சமமானது என்றும் வாதிடுகின்றனர்.[13][14] கருவை வளரவிடுவதும், அழிப்பதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமை என்கின்றனர் கருக்கலைப்பு ஆதரவாளர்கள்.[15]

தற்காலத்தில் வளர்ந்த நாடுகளில், பொதுவாக ஒவ்வொரு நாட்டினதும் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளைக் கையாண்டே கருக்கலைப்பு செய்யப்படுகின்றது.[3] ஆனாலும், உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர்[7]

உலக அளவில், ஆண்டு ஒன்றுக்கு நிகழும் சுமார் 56 மில்லியன் கருக்கலைப்புகளில்[16], கிட்டத்தட்ட 45% பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களாகவே இருந்தன.[17] 2003 - 2008 ஆண்டுகளில் இந்த வீதத்தில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை.[18] ஆனால் மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றிய அறிவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்ததன் விளைவாக அதற்கு முந்திய ஒரு சில பத்தாண்டுகளில் இந்த வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.[19]. 2008 ஆம் ஆண்டளவில், 40% மான பெண்களுக்கு, தமது விருப்பத்திற்கேற்ப, சட்டபூர்வமாக கருக்கலைப்புச் செய்துகொள்வதற்கு கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.[20] அதேவேளை கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளில், வெவ்வேறு நாடுகள், பிரசவ காலத்தில் எந்தக் கால எல்லைக்கு முன்னர் கருக்கலைப்புச் செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு வெவ்வேறு கால எல்லைகளைக் கொண்டிருக்கின்றன.[20]

கருக்கலைப்பின் வகைகள் தொகு

இயல்பு கருக்கலைப்பு தொகு

கர்ப்ப காலத்தின் முதல் 20 வாரங்களுக்குள் (இந்த கால வரையறை நாட்டிற்கு நாடு வேறுபடக்கூடியது)[21] தானாகவே கருவோ அல்லது முளையமோ அல்லது முதிர்கருவோ கருப்பையிலிருந்து வெளியேற்றப்படுவது இயல்பு கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு எனப்படும்.

 • காரணங்கள்:
 1. தாய்க்கு திடீர் எதிர்பாரா அடி
 2. கருவணுவின் நிறப்புரியில் (நிறமூர்த்தங்களில்) ஏற்படும் கோளாறுகள்
 3. சூழலிய காரணிகள்
 4. மதுமேக நீரிழிவு நோய்
 5. வளரூக்கியில் ஏற்படும் கோளாறுகள்
 6. கருப்பை அமைப்புக் கோளாறுகள்
 7. தொற்றுநோய்கள்
 8. இரத்தக்குழல்மய நோய்கள் (எ.கா. மண்டலிய செங்கரடு)

37 வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் குழந்தைகள் முற்றாக்குழந்தை அல்லது குறைபிரசவக் குழந்தை எனப்படும். 22 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையினுள் இறக்கும் குழந்தை மற்றும் பிறவியின் பொழுது இறந்த குழந்தை செத்தபிறவி எனப்படும். 61.9% தான்தோன்றி கருச்சிதைவு 12 வாரங்களுக்கு முன்னர் நடப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் 91.7% தான்தோன்றி கருச்சிதைவுகள் கர்ப்பிணித்தாய் அறியாமலேயே நிகழ்கின்றன.[22] இவை தாழ் புலன்மருத்துவ கருச்சிதைவுகள் எனப்படும்.

தூண்டற் கருக்கலைப்பு தொகு

கருச்சிதைவினை பல வகையில் தூண்ட முடியும். கர்ப்ப காலத்தைப் பொறுத்தும், கருவின் அளவைப் பொறுத்தும், அந்தந்த நாட்டுச் சட்டங்கள் மற்றும் தனிநபர் விருப்பம் பொறுத்தும் சரியான முறை தேர்வு செய்யப்படும்.

சிகிச்சைக் கருக்கலைப்பு பின்வரும் காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது;[23]

 1. கர்பிணிப்பெண்ணின் உயிர்காக்கும் பொருட்டு
 2. கர்பிணிப்பெண்ணின் உடல் மற்றும் மன நலம் கருதி
 3. உயிர்கொல்லும் மற்றும் முடங்கச்செய்யும் பிறவி நோய்களுடன் பிறக்கப்போகும் குழந்தைகளைத் தடுக்கும் பொருட்டு
 4. பல்சூல் நிலையில் (Multiple pregnancy) தாயின் நலன் கருதி குறிப்பிட்ட முதிர்கருவைச் சிதைக்கும் பொருட்டு

தேர்வுக் கருக்கலைப்பு என்பது பின்வரும் காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது;[24][25][26][27][28][29]

 1. குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போடுவதற்காக
 2. குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்காக
 3. குறிப்பிட்ட பாலினக் குழந்தை வேண்டாம் என்ற முடிவினால் செய்யப்படுவது. இது பொதுவாக பெண் குழந்தை வேண்டாம் என்ற முடிவினால்
 4. ஏற்கனவே இருக்கும் குழந்தைகள் போதும் என்ற நிலையில், மேலதிகமாக வரும் குழந்தை வேண்டாம் என்ற முடிவினால்
 5. படிப்பு, வேலை போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக
 6. சமூகப், பொருளாதார நிலைகள் சரிவர ஒத்துழைக்காத நிலையில்
 7. உறவுகளில் உள்ள உறுதியற்ற தன்மையினால்
 8. வன்கலவி போன்ற வேண்டத் தகாத உறவினால் உருவாகிய குழந்தை தேவையில்லை என்ற காரணத்தால்
 9. திருமணத்திற்கு முன்னர் குழந்தை பெறுவது கலாச்சாரத்துடன் ஒத்து வராது என்ற காரணத்தால்

கருக்கலைப்பு முறைகள் தொகு

பல்வேறு கருக்கலைப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன[30]. சட்டபூர்வமற்ற முறையில் அல்லது பாதுகாப்பற்ற முறைகளில் செய்யப்படும் கருக்கலைப்புக்கள் பாதகமான முறையில் அமைவதுமுண்டு[31][32][33]

மருந்துகளைப் பயன்படுத்தும் முறைகள் தொகு

கருவைக் கலைக்கக்கூடிய சில மருத்துவக் குணங்கொண்ட பதார்த்தங்களைப் பயன்படுத்தி கருக்கலைப்புச் செய்தலைக் குறிக்கும். மருந்துகள் பயன்படுத்திச் செய்யப்படும் கருக்கலைப்பு வெற்றியளிக்காவிட்டால், அறுவைச் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்படும்[34].

கருத்தரிப்பின் ஆரம்ப காலத்திலோ அல்லது நடுப்பகுதியிலோ இந்தக் கருக்கலைப்பு செய்யப்படும். ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு பொதுவாக ஆபத்தில்லாததாக இருக்கும். ஆனால் கருத்தரிப்புக் காலத்தின் பிந்திய நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு சிக்கல்களை ஏற்படுத்தலாம்[35].

கனடா, அனேகமான ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா போன்ற நாடுகளில், கருத்தரிப்புக் காலத்தின் நடுப்பகுதியில் செய்யப்படும் கருக்கலைப்பு பொதுவாக இந்த மருத்துவ முறையாகவே உள்ளது[36]. ஆனால் அமெரிக்காவில், இந்த நடுப்பகுதியில் செய்யப்படும் கருக்கலைப்பில் 96% அறுவைச் சிகிச்சை முறையாலானதான் இருக்கிறது[37].

பிரித்தானியா[38][39], பிரான்சு[40], சுவிட்சர்லாந்து[41], மற்றும் நோர்டிக் நாடுகளில்[42] கருத்தரிப்புக் காலத்தின் 9 கிழமைகளுக்குள்ளாக, அதாவது ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பே அதிக அளவில் நடைபெறுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஆரம்ப நிலையில் செய்யப்படும் கருக்கலைப்பு மிகக் குறைவாகவே உள்ளது[43][44] கருத்தரிப்பின் மூன்று பருவங்களில், முதல் மூன்று மாதங்களான முதலாம், மற்றும் அடுத்து வரும் மூன்று மாதங்களான இரண்டாம் பருவங்களில் மைஃபெரிஸ்டோன் (mifepristone), ப்ரோஸ்டாக்லான்டின் (prostaglandin) ஆகிய இரு மருந்துகளையும் இணைத்து அவற்றின் மூலம் கருக்கலைப்புச் செய்வது அறுவைச் சிகிச்சை போன்றே பாதுகாப்பான முறையாகும்[5][45] கருக்கலைப்பைத் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள், மற்றும் சாதனக்கள் பயன்படுத்தலாம்.[45]

அறுவைச் சிகிச்சை முறைகள் தொகு

 
8 கிழமை கருக்காலத்தில் வெற்றிட உறிஞ்சி மூலம் கருக்கலைப்பு.
1: பனிக்குடப்பை
2: முளையம்
3: கருப்பை அகவுறை
4: பரிசோதனை உபகரணம்
5: சுரண்டும் கருவி
6: உறிஞ்சும் pump

பொதுவாக கருத்தரித்து 12 கிழமைக்குள்ளாக, உறிஞ்சுதல் முறையிலான கருக்கலைப்பே அறுவைச் சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது[46]. மின்சாரக் கருவிகள் மூலமாகவோ, அல்லது மின்சாரப் பாவனையற்ற உபகரணங்களாலோ இவ்வாறான உறிஞ்சல் முறையில் முளையம் அல்லது முதிர்கரு, தொப்புள்கொடி என்பன அகற்றப்படுகிறது.

முளைய விருத்தியின் நிலையைப் பொறுத்து இதனைச் செய்யும் முறையில் வேறுபாடு காணப்படும். கருத்தரிப்பின் மிகவும் ஆரம்ப நிலையாயின் கருப்பை வாய்ப்பகுதியை விரிவாக்கம் செய்யாமலே எளிய உறிஞ்சல் முறையால் கருக்கலைப்பு செய்ய முடியும். பிந்திய நிலையாயின் கருப்பை வாய்ப் பகுதியின் விரிவாக்கம் அவசியமாகிறது. இரண்டாவது பொதுவான நடைமுறையிலுள்ள அறுவை சிகிச்சை முறையானது விரிவாக்கமும், சுரண்டி வழித்தெடுத்தலும் (D&C - Dilation and Curettage) ஆகும். இந்த முறை பல்வேறு காரணங்களை முன்னிட்டு செய்யப்படும் கருக்கலைப்பு முறையாகும். இது புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்கின்றனவா என்று சோதிக்கவும், அசாதாரண குருதிப்போக்கு போன்றவற்றிற்கான காரணங்களைச் சோதனை செய்து அறியவும், கருக்கலைப்பில் அல்லது தன்னிச்சையான கருச்சிதைவுக்குப் பின்னர் கருப்பையின் உட்சுவரை சுரண்டி வழித்துச் சுத்தம் செய்யவும் பயன்படுகின்றது. சுரண்டி வழித்தெடுப்பதற்கு curette எனப்படும் ஒரு உபகரணம் பயன்படுத்தப்படுகின்றது. இலகுவான உறிஞ்சல் முறைகளால் கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையிலேயே இம்முறையை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது[47].

முதிர்கரு வளர்ச்சி 15 கிழமைகளைத் தாண்டி செல்லுமாயின் 26 கிழமைகள் வரை பொதுவாகக் கருக்கலைப்பு செய்யப்படும் முறை விரிவாக்கமும், வெளியேற்றலும் (D&E - Dilation and Evacuation) என அழைக்கப்படுகிறது. அந்நிலையில் கருப்பை வாய்ப்பகுதி விரிக்கப்பட்டும், கருப்பையினுள் இருக்கும் உள்ளடக்கங்கள் யாவும் சில அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் மூலமும், உறிஞ்சல் கருவிகள் மூலமும் அகற்றப்பட்டு, கருப்பை வெறுமையாக்கப்படுகிறது. Prostaglandin என்னும் பதார்த்தம் கொண்டு குறைப்பிரசவம் தூண்டப்படுவதுடன், உப்புக் கரைசல் (Saline), யூரியா போன்றவற்றைக் கொண்ட செறிவு கூடிய, உயரழுத்தமுள்ள (Hypertonic solution) கரைசலில் பனிக்குட நீர் சேர்க்கப்பட்டு உட்செலுத்தப்படும்.

கருத்தரிப்பின் 16 கிழமைக்குப் பின்னராயின், முழுமையான விரிவாக்கமும் பிரித்தெடுத்தலும் (IDX - intact dilation and extraction) என்ற ஒரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு முதிர்கருவின் தலை அமுக்க நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்படும். இம்முறை சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. கருத்தரிப்பின் இறுதி மூன்று மாதங்களாயின், குறிப்பிட்ட இந்த முறை மூலமோ, தூண்டப்படும் பிரசவம் மூலமோ அல்லது Hysterotomy மூலமோ கருக்கலைப்பு செய்யப்படும். இவ்வகைக் கருக்கலைப்பில், பொது உணர்வகற்றல் (general anesthesia) வழங்கப்படுகின்றது. இது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்புக்கு ஒப்பானது.

முதல் மூன்று மாதங்களில் மேற்கொள்ளும் முறைகள் உறுப்பிட உணர்வகற்றல் (local anesthesia) பயன்படுத்தியும், அதன் பின்னரான கருக்கலைப்பாயின் பொது உணர்வகற்றல் (General anesthesia) மூலமும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்[44]

குழந்தைப் பிறப்பைத் தூண்டல் தொகு

குழந்தைப் பிறப்பைத் தூண்டுவதன் மூலம், மேலும் தேவை ஏற்படின், முதிர்கருவை வெளியேற்றல் மூலம் கருக்கலைப்பை ஏற்படுத்தலைக் குறிக்கும்[48]. சில சமயங்களில் இந்த முறை சூழிடர் கொண்டதாகவும் அமைந்துவிடுகிறது[49][50]

மற்றவை தொகு

வேறு சில மரபுசார் முறைக் கருக்கலைப்பு முறைகளும் உள்ளன. பாதுகாப்பற்ற முறைகளும் இவற்றில் அடங்கும்.

மேற்கோள்கள் தொகு

 1. Bankole, Akinrinola, Singh, Susheela, & Haas, Taylor. (1998). Reasons Why Women Have Induced Abortions: Evidence from 27 Countries பரணிடப்பட்டது 2006-01-17 at the வந்தவழி இயந்திரம். International Family Planning Perspectives, 24 (3), 117–127 & 152. Retrieved 2006-01-18.
 2. Finer, Lawrence B., Frohwirth, Lori F., Dauphinee, Lindsay A., Singh, Shusheela, & Moore, Ann M. (2005). Reasons U.S. women have abortions: quantative and qualitative perspectives. Perspectives on Sexual and Reproductive Health, 37 (3), 110–8. Retrieved 2006-01-18.
 3. 3.0 3.1 Grimes, DA; Benson, J; Singh, S; Romero, M; Ganatra, B; Okonofua, FE; Shah, IH (2006). "Unsafe abortion: The preventable pandemic" (PDF). The Lancet 368 (9550): 1908–1919. doi:10.1016/S0140-6736(06)69481-6. பப்மெட்:17126724 இம் மூலத்தில் இருந்து 29 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629040442/http://www.who.int/reproductivehealth/publications/general/lancet_4.pdf. 
 4. Raymond, EG; Grossman, D; Weaver, MA; Toti, S; Winikoff, B (November 2014). "Mortality of induced abortion, other outpatient surgical procedures and common activities in the United States". Contraception 90 (5): 476–479. doi:10.1016/j.contraception.2014.07.012. பப்மெட்:25152259. 
 5. 5.0 5.1 Kulier, R; Kapp, N; Gülmezoglu, AM; Hofmeyr, GJ; Cheng, L; Campana, A (9 November 2011). "Medical methods for first trimester abortion.". The Cochrane Database of Systematic Reviews (11): CD002855. doi:10.1002/14651858.CD002855.pub4. பப்மெட்:22071804. 
 6. 6.0 6.1 Lohr, PA; Fjerstad, M; Desilva, U; Lyus, R (2014). "Abortion". BMJ 348: f7553. doi:10.1136/bmj.f7553. 
 7. 7.0 7.1 Shah, I; Ahman, E (December 2009). "Unsafe abortion: global and regional incidence, trends, consequences, and challenges" (PDF). Journal of Obstetrics and Gynaecology Canada 31 (12): 1149–58. பப்மெட்:20085681 இம் மூலத்தில் இருந்து 16 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716212405/http://www.sogc.org/jogc/abstracts/full/200912_WomensHealth_1.pdf. 
 8. World Health Organization (2012) (PDF). Safe abortion: technical and policy guidance for health systems (2nd ). Geneva: World Health Organization. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789241548434 இம் மூலத்தில் இருந்து 16 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150116223512/http://apps.who.int/iris/bitstream/10665/70914/1/9789241548434_eng.pdf?ua=1. 
 9. World Abortion Policies 2013 (archived from the original on 2016-04-15)
 10. Joffe, Carole (2009). "1. Abortion and medicine: A sociopolitical history". in M Paul, ES Lichtenberg, L Borgatta, DA Grimes, PG Stubblefield, MD Creinin (PDF). Management of Unintended and Abnormal Pregnancy (1st ). Oxford, United Kingdom: John Wiley & Sons, Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-1293-5 இம் மூலத்தில் இருந்து 21 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/62bppK1Iw?url=http://media.wiley.com/product_data/excerpt/62/14051769/1405176962.pdf. 
 11. Nixon, edited by Frederick Adolf Paola, Robert Walker, Lois LaCivita (2010). Medical ethics and humanities. Sudbury, Mass.: Jones and Bartlett Publishers. பக். 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780763760632 இம் மூலத்தில் இருந்து 6 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170906191717/https://books.google.com/books?id=9pM2pw-2wl4C&pg=PA249. 
 12. Johnstone, Megan-Jane (2009). Bioethics a nursing perspective (5th ). Sydney, N.S.W.: Churchill Livingstone/Elsevier. பக். 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780729578738 இம் மூலத்தில் இருந்து 6 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170906191717/https://books.google.com/books?id=EG-Yg1xDYakC&pg=PA228. "Although abortion has been legal in many countries for several decades now, its moral permissibilities continues to be the subject of heated public debate." 
 13. Pastor Mark Driscoll (18 October 2013). "What do 55 million people have in common?". Fox News இம் மூலத்தில் இருந்து 31 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140831022138/http://www.foxnews.com/opinion/2013/10/18/what-do-55-million-people-have-in-common/. பார்த்த நாள்: 2 July 2014. 
 14. Hansen, Dale (18 March 2014). "Abortion: Murder, or Medical Procedure?". The Huffington Post இம் மூலத்தில் இருந்து 14 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714230359/http://www.huffingtonpost.com/dale-hansen/abortion-murder-or-medica_b_4986637.html. பார்த்த நாள்: 2 July 2014. 
 15. Sifris, Ronli Noa (2013). Reproductive freedom, torture and international human rights: challenging the masculinisation of torture. Hoboken: Taylor & Francis. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135115227. இணையக் கணினி நூலக மையம்:869373168 இம் மூலத்தில் இருந்து 15 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151015195038/https://books.google.com/books?id=9pVWAgAAQBAJ&pg=PA3. 
 16. Sedgh, Gilda; Bearak, Jonathan; Singh, Susheela; Bankole, Akinrinola; Popinchalk, Anna; Ganatra, Bela; Rossier, Clémentine; Gerdts, Caitlin et al. (May 2016). "Abortion incidence between 1990 and 2014: global, regional, and subregional levels and trends". The Lancet 388: 258–67. doi:10.1016/S0140-6736(16)30380-4. பப்மெட்:27179755. 
 17. "Worldwide, an estimated 25 million unsafe abortions occur each year". World Health Organization. 28 September 2017. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
 18. Sedgh, G.; Singh, S.; Shah, I. H.; Åhman, E.; Henshaw, S. K.; Bankole, A. (2012). "Induced abortion: Incidence and trends worldwide from 1995 to 2008" (PDF). The Lancet 379 (9816): 625–632. doi:10.1016/S0140-6736(11)61786-8. பப்மெட்:22264435 இம் மூலத்தில் இருந்து 6 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120206043854/http://www.guttmacher.org/pubs/journals/Sedgh-Lancet-2012-01.pdf. "Because few of the abortion estimates were based on studies of random samples of women, and because we did not use a model-based approach to estimate abortion incidence, it was not possible to compute confidence intervals based on standard errors around the estimates. Drawing on the information available on the accuracy and precision of abortion estimates that were used to develop the subregional, regional, and worldwide rates, we computed intervals of certainty around these rates (webappendix). We computed wider intervals for unsafe abortion rates than for safe abortion rates. The basis for these intervals included published and unpublished assessments of abortion reporting in countries with liberal laws, recently published studies of national unsafe abortion, and high and low estimates of the numbers of unsafe abortion developed by WHO.". 
 19. Sedgh G, Henshaw SK, Singh S, Bankole A, Drescher J (September 2007). "Legal abortion worldwide: incidence and recent trends". Int Fam Plan Perspect 33 (3): 106–116. doi:10.1363/ifpp.33.106.07. பப்மெட்:17938093. http://www.guttmacher.org/pubs/journals/3310607.html. பார்த்த நாள்: 2012-09-21. 
 20. 20.0 20.1 "Critical gaps in universal access to reproductive health: Contraception and prevention of unsafe abortion". International Journal of Gynecology & Obstetrics 110: S13–16. July 2010. doi:10.1016/j.ijgo.2010.04.003. பப்மெட்:20451196. 
 21. Department of Reproductive Health and Research (2003). "Managing Complications in Pregnancy and Childbirth – A guide for midwives and doctors". World Health Organization. http://www.who.int/reproductive-health/impac/Symptoms/Vaginal_bleeding_early_S7_S16.html. Retrieved 2009-04-07. NB: This definition is subject to regional differences.
 22. Edmonds DK, Lindsay KS, Miller JF, Williamson E, Wood PJ (1982). "Early embryonic mortality in women". Fertil. Steril. 38 (4): 447–453.
 23. Roche, Natalie E. (2004). Therapeutic Abortion. Retrieved 2006-03-08.
 24. Broen AN1, Moum T, Bödtker AS, Ekeberg O. (Jan-Feb 2005). "Reasons for induced abortion and their relation to women's emotional distress: a prospective, two-year follow-up study.". Gen Hosp Psychiatry. 27 (1): 36-43. doi:10.1016/j.genhosppsych.2004.09.009. பப்மெட்:15694217. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/15694217. 
 25. Uygur D1, Erkaya S. (Jun 2001). "Reasons why women have induced abortions in a developing country.". Eur J Obstet Gynecol Reprod Biol. 96 (2): 211-4. பப்மெட்:11384810. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/11384810. 
 26. "Reasons Why Women Have Induced Abortions: Evidence from 27 Countries". Guttmacher Institute. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 27. Yan Jiang,1 Jingnan Han,2 Connor Donovan,3 Gholam Ali,4 Tan Xu,5,6 Yumei Zheng,7 and Wenjie Sun5,* (Aug 2017). "Induced Abortion among Chinese Women with Living Child-A National Study". Adv Dis Control Prev. 2 (1): 10-15. doi:10.25196/adcp201712. பப்மெட் சென்ட்ரல்:5568110. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5568110/. 
 28. Goodkind, Daniel (1999). "Should Prenatal Sex Selection be Restricted?: Ethical Questions and Their Implications for Research and Policy". Population Studies 53 (1): 49–61. doi:10.1080/00324720308069. 
 29. Holmes MM1, Resnick HS, Kilpatrick DG, Best CL. (Aug 1996). "Rape-related pregnancy: estimates and descriptive characteristics from a national sample of women.". Am J Obstet Gynecol. 175 (2): 320-4; discussion 324-5. பப்மெட்:8765248. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/8765248. 
 30. "Abortion - Methods". All American Life League. Archived from the original on 2017-05-25. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2017.
 31. "Unsafe abortion in rural Tanzania – the use of traditional medicine from a patient and a provider perspective". U.S. National Library of Medicine. National Centre for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2017.
 32. "The diversity of abortion methods". Institute of Research and Developement. University of Paris. Archived from the original on 2017-06-17. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2017.
 33. "28.01.1935: உலகில் முதல்முறையாக ஐஸ்லாந்து கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய தினம் இன்று!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2017.
 34. "Induced abortion". Danforth's obstetrics and gynecology (10th ). Philadelphia: Lippincott Williams & Wilkins. 2008. பக். 586–603. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7817-6937-2. https://archive.org/details/danforthsobstetr0000unse_o3j3. 
 35. "Risks of an abortion". Natioanl Health Service, UK. Gov.UK. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2017.
 36. "Medical methods to induce abortion in the second trimester". Management of unintended and abnormal pregnancy: comprehensive abortion care. Oxford: Wiley-Blackwell. 2009. பக். 178–192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4051-7696-2. 
 37. "Dilation and evacuation". Management of unintended and abnormal pregnancy: comprehensive abortion care. Oxford: Wiley-Blackwell. 2009. பக். 178–192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4051-7696-2. 
 38. "Abortion statistics, England and Wales: 2010". London: Department of Health, United Kingdom. 24 May 2011. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
 39. "Abortion statistics, year ending 31 December 2010" (PDF). Edinburgh: ISD, NHS Scotland. 31 May 2011. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011.
 40. Vilain A, Mouquet MC (22 June 2011). "Voluntary terminations of pregnancies in 2008 and 2009" (PDF). Paris: DREES, Ministry of Health, France. Archived from the original (PDF) on 26 September 2011. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011.
 41. . (5 July 2011). "Abortions in Switzerland 2010". Neuchâtel: Office of Federal Statistics, Switzerland. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
 42. Gissler M, Heino A (21 February 2011). "Induced abortions in the Nordic countries 2009" (PDF). Helsinki: National Institute for Health and Welfare, Finland. Archived from the original (PDF) on 18 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
 43. "Abortion incidence and access to services in the United States, 2008". Perspect Sex Reprod Health 43 (1): 41–50. March 2011. doi:10.1363/4304111. பப்மெட்:21388504. http://www.guttmacher.org/pubs/journals/4304111.pdf. பார்த்த நாள்: 22 November 2011. 
 44. 44.0 44.1 Templeton, A.; Grimes, D. A. (2011). "A Request for Abortion". New England Journal of Medicine 365 (23): 2198–2204. doi:10.1056/NEJMcp1103639 இம் மூலத்தில் இருந்து 8 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120108100041/http://www.nejm.org/doi/full/10.1056/NEJMcp1103639. 
 45. 45.0 45.1 Kapp, N; Whyte, P; Tang, J; Jackson, E; Brahmi, D (September 2013). "A review of evidence for safe abortion care". Contraception 88 (3): 350–63. doi:10.1016/j.contraception.2012.10.027. பப்மெட்:23261233. 
 46. Healthwise (2004). "Manual and vacuum aspiration for abortion". WebMD. பார்க்கப்பட்ட நாள் 2008-12-05.
 47. World Health Organization (2003). "Dilatation and curettage". Managing Complications in Pregnancy and Childbirth: A Guide for Midwives and Doctors. Geneva: World Health Organization. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:92-4-154587-9. இணையக் கணினி நூலக மையம்:181845530. http://www.who.int/reproductive-health/impac/Procedures/Dilatetion_P61_P63.html. பார்த்த நாள்: 2008-12-05. 
 48. Borgatta, L (December 2014). "Labor Induction Termination of Pregnancy". Global Library of Women's Medicine GLOWM.10444. doi:10.3843/GLOWM.10444. http://www.glowm.com/section_view/heading/Labor%20Induction%20Termination%20of%20Pregnancy/item/443. பார்த்த நாள்: 25 September 2015. 
 49. Society of Family Planning (February 2011). "Clinical Guidelines, Labor induction abortion in the second trimester". Contraception 84 (1): 4–18. doi:10.1016/j.contraception.2011.02.005. http://www.contraceptionjournal.org/article/S0010-7824(11)00057-6/pdf. பார்த்த நாள்: 25 September 2015. 
 50. "2015 Clinical Policy Guidelines". National Abortion Federation. 2015. http://prochoice.org/wp-content/uploads/2015_NAF_CPGs.pdf. பார்த்த நாள்: 30 October 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்கலைப்பு&oldid=3586504" இலிருந்து மீள்விக்கப்பட்டது