போரான் சுழற்சி

போரான் சுழற்சி (Boron cycle) என்பது வளிமண்டலம், நிலக்கோளம், உயிர்க்கோளம் மற்றும் நீர்க்கோளம் வழியாக போரானின் உயிர்வேதியியல் சுழற்சி ஆகும்.[1][2]

வளிமண்டலம், நிலக்கோளம், உயிர்க்கோளம் மற்றும் நிலக்கோளம் வழியாகப் போரான் சுழற்சிகள். நீர்த்தேக்கங்களுக்கிடையேயான பெரிய ஒழுக்கமைவு அம்புகளால் சித்தரிக்கப்படுகிறது. இங்கு அம்புக்குறியின் அளவு/அகலம் ஒழுக்கமைவின் அளவிற்கு ஒத்திருக்கும். அனைத்து ஒழுக்கமைவு மதிப்புகளும் Tg B/yr (= 10 12 gB/yr)-ல் கொடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு அம்புகள் மானுடவியல் உமிழ்வைக் குறிக்கின்றன, கருப்பு அம்புகள் இயற்கை உமிழ்வைக் குறிக்கின்றன.[a]

வளிமண்டல மற்றும் நிலப்பரப்பு ஒழுக்கமைவு

தொகு

வளிமண்டலத்தில் உள்ள போரான் மண்ணின் தூசி, எரிமலை உமிழ்வுகள், காட்டுத் தீ, கடல் நீரிலிருந்து போரிக் அமிலம் ஆவியாதல், உயிரி உமிழ்வு மற்றும் கடல் தெளிப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது.[1][2]

பெருங்கடல் ஒழுக்கு

தொகு

கடல் உயிர்க்கோளம் போரானின் மிகப் பெரிய தேக்கத்தைக் கொண்டுள்ளது. ஆற்று நீரில் கரைந்துள்ள போரான் கடல் நீருடன் கலப்பதாலும், ஈரமான படிவு, நீர்மூழ்கி நிலத்தடி நீர் வெளியேற்றம் மற்றும் நீர் வெப்ப துவாரங்கள் மூலம் போரான் கடல் நீரில் சேருகின்றது.[1][2] கடல் நீரிலிருந்து போரானது, கடல் நீர் மேற்பரப்பில் நடைபெறும் உமிழ்வுகள், கரிமப் பொருட்கள் மற்றும் படிவுகள் (பெரும்பாலும் கார்பனேட்டுகள் ) மற்றும் கடல் வண்டலின் கீழ்மிழ்தல் ஆகியவற்றில் பெருங்கடல்களிலிருந்து வெளிச்செல்கிறது.[1]

மானுடவியல் தாக்கங்கள்

தொகு

போரான் சுழற்சி மனித நடவடிக்கைகளால் கணிசமாகப் பாதிக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கம் மற்றும் எரிப்பு, எண்ணெய் உற்பத்தி, தொழிற்சாலைகள், உயிரி எரிபொருள்கள், திண்மக்கழிவு நிரப்புதல் மற்றும் போரான் தாதுகளின் சுரங்கம் மற்றும் செயலாக்கம் ஆகியவை முக்கிய மானுடவியல் பாய்வுகளாகும்.[1][2] நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலத்திற்கு மானுடவியல் செயல்பாடுகளால் சேரும் போரான் பாய்வுகள் அதிகரித்துள்ளன.[1] மேலும் மானுடவியல் பாய்வுகள் இப்போது இயற்கை போரான் பாய்வுகளை விட அதிகமாக உள்ளன.[1]

குறிப்புகள்

தொகு
  1. The dominant fluxes of B occur from anthropogenic and marine sources, where the total anthropogenic flux (2.3 Tg B/yr) is more than half of the total B input to the ocean (4.2 Tg B/yr).[1].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Schlesinger, William H.; Vengosh, Avner (2016). "Global boron cycle in the Anthropocene" (in en). Global Biogeochemical Cycles 30 (2): 219–230. doi:10.1002/2015GB005266. பன்னாட்டுத் தர தொடர் எண்:1944-9224. Bibcode: 2016GBioC..30..219S. 
  2. 2.0 2.1 2.2 2.3 Park, Haewon; Schlesinger, William H. (2002). "Global biogeochemical cycle of boron" (in en). Global Biogeochemical Cycles 16 (4): 20–1–20-11. doi:10.1029/2001GB001766. பன்னாட்டுத் தர தொடர் எண்:1944-9224. Bibcode: 2002GBioC..16.1072P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரான்_சுழற்சி&oldid=3747447" இலிருந்து மீள்விக்கப்பட்டது