போரோகுலா
போரோகுலா என்பவர் செங்கிஸ் கானின் தளபதிகளில் ஒருவர் ஆவார்.
போரோகுலா | |
---|---|
சுதேசியப் பெயர் | Борохул |
சார்பு | மங்கோலியர் |
தரம் | தளபதி |
மங்கோலியாவின் பழங்குடி இனங்களில் ஒன்றான சுர்கன் பழங்குடியினத்தைச் செபே அழித்த பிறகு இவர் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் செங்கிஸ் கானின் தாய் ஓவலுனிடம் கொடுக்கப்பட்டார்.
கலக்கல்ஜித் மணல் யுத்தத்தின்போது செங்கிஸ் கானின் மகன் ஒக்தாயியிக்கு கழுத்தில் அம்பு தாக்கிக் காயம் ஏற்பட்டபோது இவர் ஒக்தாயியின் கழுத்திலிருந்து இரத்தத்தை உறிஞ்சி அவரைக் காப்பாற்றினார். காப்பாற்றிய பிறகு எதிரிகள் எங்கு தப்பி ஓடினர் என்பதை இவர் செங்கிஸ் கானிடம் தெரிவித்தார். கோரி துமேட் பழங்குடியினம் மீது படையெடுக்க இவர் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் எதிரி ஒற்றர்களால் தனிமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.