போர்க்கப்பல் (விளையாட்டு)

போர்க்கப்பல் எனப்படும் விளையாட்டை இருவர் விளையாடலாம். இதை கடற்போர் என்றும் குறிப்பிடுவதுண்டு.[1]) இது கணித்து விளையாடக் கூடிய விளையாட்டு. இது பேப்பரில் வரைந்து விளையாடப்படுவதோடு, கணினி விளையாட்டாகவும், பலகை விளையாட்டாகவும் உருவெடுத்துள்ளது.

போர்க்கப்பல் விளையாட்டு. ஒரு வரைபடத்தில் உள்ள பயனர் தன் தாளில் உள்ள கட்டங்களில் எதிராளியின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டங்களை குறிவைக்க வேண்டும். கப்பல் உள்ள கட்டத்தில் எதிராளியின் குறி இருந்தால், அதூ x குறியிட்டு காட்டப்படும். கப்பல்கள் வரையப்பட்ட தாள் எதிராளியிடம் காட்டப்படாது. எவர் எதிராளியின் அனைத்து கப்பல்களையும் தாக்குகிறாரோ அவர் வெற்றி பெறுவார். ஆட்டம் முடிவடையும்.


ஹாஸ்புரோ நிறுவனத்தினர் இந்த விளையாட்டு கணினிக்கு ஏற்றவாறு உருவாக்கி, பிளேஸ்டேசன் 2, வீ உள்ளிட்டவற்றுக்கான விளையாட்டாகவும் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு பேட்டில்ஷிப் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

விளையாடும் முறை

தொகு

இந்த விளையாட்டை விளையாட காகித்தாள் போதும். தாளில் 10x10 கட்டங்களை வரைந்து கொள்ள வேண்டும். தாளில் ஒரு கட்டத்தை கண்டறிய கிடைவரிசை பெயரும், வரிசை எண்ணும் பயன்படும். இருவரும் தங்களுககான நான்கு கப்பல்களுக்கு கட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.[2] கப்பலை வரைவதில்லை என்றபோதும், சில தொடர்கட்டங்களை சுற்றி தடித்த கோடிட்டு காட்டலாம். கப்பல்களை கிடைமட்டமாகவோ, நேர்மட்டமாகவோ வைக்கலாம். கப்பலின் அளவை பொருத்து, இரு கட்டங்கள் முதல் ஐந்து கட்டங்கள் வரை ஒரு கப்பலை வைக்கலாம். கப்பல் இருக்கும் கட்டங்களில் ஒன்று தாக்கப்பட்டால் அதை சுட்டிக்காட்டுவர். ஒரே கட்டத்தில் இரு கப்பல்களை வைக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த விளையாட்டில் நிறுவனங்களுக்கு ஏற்ப விதிமுறை மாறுபடலாம். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒருவர் ஒரு கட்டத்தை மட்டுமே தாக்க முடியும். தாக்கிய கட்டத்தில் கப்பலின் பகுதி இருந்தால் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும். இருவரும் தங்களுடைய தாள்களில் எதிராளி தாக்கிய கட்டத்தை குறித்து வைப்பர். எவர் ஒருவர் எதிராளியின் அனைத்து கப்பல்களையும் தாக்குகிறாரோ அவரே வெற்றியாளர்.

ஹில்டன் பிராட்லி நிறுவனத்தினர் தங்களுடைய போர்க்கப்பல் விளையாட்டில் பயன்படுத்தியுள்ள கப்பல்களை கீழ்க்கண்டவாறூ வகைப்படுத்துகின்றனர்.

கப்பலின்
வகை
கட்டங்களின்
எண்ணிக்கை
வானூர்தி தாங்கிக் கப்பல் 5
போர்க்கப்பல் 4
நீர்மூழ்கிக் கப்பல் 3
குரூசர் வகை கப்பல் 3
ரோந்து படகு 2

சான்றுகள்

தொகு
  1. "Play School Age: Sea Battle a Free Game at Fupa Games". Fupa.com. பார்க்கப்பட்ட நாள் 4 December 2012.
  2. Salvo – Battleships – Complete Rules – Paper and Pencil Game

இணைப்புகள்

தொகு