போர்ட் ராக் குகை

அமெரிக்காவின், ஓரிகான் மாநிலத்தில் உள்ள குகை மற்றும் தொல்லியல் தலம்

போர்ட் ராக் குகை (Fort Rock Cave) என்பது அமெரிக்க மாநிலமான ஓரிகானில் மனிதர்கள் வசித்ததற்கான ஆரம்பகால சான்றுகள் கிடைத்த இடம் ஆகும். ஃபோர்ட் ராக் குகையில் 9,000 முதல் 13,000 ஆண்டுகள் பழமையான நன்கு பாதுகாக்கப்பாக இருந்த சாக் பிரஷ் என்னும் காட்டுப் புல்லால் நெய்யப்பட்ட பல செருப்புகளைக் கிடைத்தன. இந்த குகையானது லேக் கவுண்டியில் ஃபோர்ட் ராக் ஸ்டேட் நேச்சுரல் ஏரியாவுக்கு அருகிலுள்ள ஃபோர்ட் ராக்கிலிருந்து சுமார் 1.5 மைல்கள் (2.4 km) தொலைவில் அமைந்துள்ளது. [1] ஃபோர்ட் ராக் குகை 1961 ஆம் ஆண்டு தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டது. [2] மேலும் 1966 ஆம் ஆண்டில் வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டது. [3]

போர்ட் ராக் குகை
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
ஐ.அ. தேசிய வரலாற்று அடையாளம்
ஃபோர்ட் ராக் குகையில், ஒரேகான் பல்கலைக்கழக தொல்லியல் துறையினரின் அகழ்வாய்வு, 1966
அமைவிடம்: வார்ப்புரு:Address Restricted
அண்மை
நகரம்:
ஃபோர்ட் ராக், ஓரிகான்
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
15, அக்டோபர், 1966
வகை NHL: 20, சனவரி, 1961
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
66000641

ரீப் லாங்கின் பண்ணைப் பகுதியில் இந்த குகை காணப்பட்டது. இது முன்னர் மென்கன்மேயர் குகை அல்லது மாட்டு குகை என்று அழைக்கப்பட்டது. [4] [5]

தொல்பொருளியல் தொகு

 
ஒரேகான் வரலாற்று சங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஃபோர்ட் ராக் செருப்புகள்.

ஓரிகான் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளர் லூதர் கிரெஸ்மேனின் என்பவர் ஓரிகானில் 13,200 ஆண்டுகளுக்கு முந்தைய மனித வாழ்விடத்தை அடிப்படையாக கொண்டு 1938 ஆம் ஆண்டு ஃபோர்ட் ராக் குகையில் அகழ்வாய்வு மேற்கொண்டார். [6] [7] அப்பகுதியில் ஒரு வகை காட்டுப் புல்லால் நெய்யப்பட்ட சில ஜோடி செருப்புகளையும், சில ஒற்றை செருப்புகளையும் கிரெஸ்மேன் குழு மீட்டது (சுமார் 7600 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த ஒரு எரிமலையின் குழம்புப் படிமத்துக்குக் கீழே இவை பாதுகாப்பாக இருந்தன ). இந்த செருப்புகளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புக்குக்கு உட்படுத்தியதில், இவை 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானவை என்பது கண்டறியப்பட்டது. தற்போது இவை யூஜினில் உள்ள ஓரிகான் இயற்கை மற்றும் கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஃபோர்ட் ராக் நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த செருப்பு பாணியானது ஃபோர்ட் ராக் பாணி என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை முதலில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்த செருப்பு பாணி மற்ற வகைகளிலிருந்து வேறுபட்டது; இவை தட்டையானவையாகவும், கால்விரல்களை மூடியவையாகவும், காலில் இருந்து கழன்று போகாமல் இருக்க பட்டை வைத்தவையாகவும் இருந்தன. [8] மேலும் இவை கூகர் மலை, கேட்லோ குகைகள் போன்ற பிற தளங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [9] ஃபோர்ட் ராக் குகையில் கூடை மற்றும் கல் கருவிகள் உட்பட பல வரலாற்று காலத்துக்கு முந்தைய கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [10] குகையின் அகழாமல் மீதமிருந்த பகுதிகளில் 1970 ஆம் ஆண்டில் ஸ்டீபன் பெட்வெல்லால் இந்தக் கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறிப்புகள் தொகு

  1. "Fort Rock Cave, Oregon". Archeological Society of Central Oregon. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
  2. "Fort Rock Cave". National Historic Landmark summary listing. National Park Service. Archived from the original on 2007-03-01. பார்க்கப்பட்ட நாள் 2007-11-19.
  3. Oregon Parks and Recreation Department, Oregon Historic Sites Database, பார்க்கப்பட்ட நாள் June 20, 2014.
  4. "Geographic board okays naming cave after Long". https://news.google.com/newspapers?id=cGZYAAAAIBAJ&sjid=8vcDAAAAIBAJ&pg=3674,2206559&dq=reub-long+fort-rock-cave&hl=en. பார்த்த நாள்: December 8, 2011. 
  5. "Fort Rock: It's too small for a beer license". https://news.google.com/newspapers?id=5P9XAAAAIBAJ&sjid=DPcDAAAAIBAJ&pg=3578,1131543&dq=reub-long+fort-rock-cave&hl=en. பார்த்த நாள்: December 8, 2011. 
  6. "Fort Rock State Natural Area". Oregon State Parks. பார்க்கப்பட்ட நாள் 2007-04-09.
  7. "World's Oldest Shoes". University of Oregon. பார்க்கப்பட்ட நாள் 2007-04-09.
  8. "Fort Rock Sandals". பார்க்கப்பட்ட நாள் October 17, 2011.
  9. Tucker, Kathy (2002). "Fort Rock Sandals". Oregon Historical Society. பார்க்கப்பட்ட நாள் 2007-04-09.
  10. "Cultural Sequence in the Northern Great Basin: The View From Fort Rock". University of Oregon Department of Anthropology. Archived from the original on July 15, 2004. பார்க்கப்பட்ட நாள் 2011-08-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்_ராக்_குகை&oldid=3565804" இலிருந்து மீள்விக்கப்பட்டது