போர்த்துகல் தேசிய நூலகம்

போர்த்துகல் தேசிய நூலகம் (போர்த்துக்கேயம்: Biblioteca Nacional de Portugal) போர்த்துகலின் தலைநகரமான லிசுபன் நகரில், லிசுபன் நகரப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. இது போர்த்துகலின், நூல் மற்றும் ஆவண மரபுகளின் வைப்பிடமாக உள்ளது.

Biblioteca Nacional de Portugal
போர்த்துகல் தேசிய நூலகத்தின் வெளித்தோற்றம்
நாடு போர்த்துகல்
வகைதேசிய நூலகம்
தொடக்கம்29 பெப்ரவரி 1796[1]
Reference to legal mandateLei Orgânica da BNP
அமைவிடம்லிசுபன்
அமைவிடம்38°45′4.17″N 9°9′7.89″W / 38.7511583°N 9.1521917°W / 38.7511583; -9.1521917
Collection
அளவு3 மில்லியன்[2]
Legal depositஆம் [3]
Access and use
Access requirementsபயனர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதுடன் வாசகர் அட்டையும் வைத்திருக்க வேண்டும். [4]
Population served564 657 (லிசுபன்)[5]
ஏனைய தகவல்கள்
இயக்குநர்Inês Cordeiro
இணையதளம்www.bnportugal.pt
Map
Map

வரலாறு

தொகு

இது 1796 ஆம் ஆண்டின் பெப்ரவரி 29ம் தேதியிட்ட அரசாணையின்படி நிறுவப்பட்டது. ஐரோப்பியக் கல்வியாளருக்கும், குருமாருக்கும் மட்டுமே நூலக வசதிகள் வழங்கப்பட்ட அக்காலப் போக்குக்கு மாறாக, இந்நூலகம் பொதுமக்களின் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதன் முன்னைய இருப்பிடமான லிசுபனில் உள்ள சான் பிரான்சிசுக்கோ குருமடம் சிறியதாக இருந்ததால், இதை "காம்போ கிரான்டே"க்கு மாற்றுவதற்கு 1956 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் அனுமதி வழங்கியது. கட்டிட வேலைகள் முடிந்து 1965ல் முதல் இடமாற்றம் நிகழ்ந்தது. 1969ல், தற்போதைய நகரப் பல்கலைக்கழகத்தில் புதிய வசதிகள் தொடக்கப்பட்டன.

செயற்பாடுகள்

தொகு

30 இலட்சத்துக்கு மேற்பட்ட உருப்படிகளைக் கொண்ட இந்நூலகத்தின் தற்போதைய செயற்பாடுகள், அதன் படிவளர்ச்சியின் பெறுபேறாகவும், சமகாலச் சமுதாயத்தின் தகவல் மற்றும் தொடர்பியத் தன்மைகளுக்கு ஏற்பத் தகவமைவு பெற்றதன் விளைவாகவும் உருவானது. போர்த்துக்கேயரின் ஆவண மரபுகளைச் சேகரித்தலும், பேணலும், அவற்றைப் பரவச் செய்தலும் இந்நூலகத்தின் முக்கிய செயற்பாடுகள். கடந்த 200 ஆண்டுகளில், சட்டமுறைச் சேகரிப்பின் மூலமாகவும், பெறுமதி வாய்ந்த நூல்களை விலகொடுத்துப் பெற்றுக்கொண்டதன் மூலமாகவும், இந்த நூலகத்தின் சேகரிப்புகள் பெறுமதி மிக்கனவாகி உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. As Real Biblioteca Pública da Corte (Royal Public Library of the Court)
  2. "Fundo geral". www.bnportugal.pt. பார்க்கப்பட்ட நாள் 12 February 2011.
  3. "Depósito legal". www.bnportugal.pt. பார்க்கப்பட்ட நாள் 12 February 2011.
  4. "Regulamento Geral de Acesso às Colecções e Serviços da BNP" (PDF). www.bnportugal.pt. பார்க்கப்பட்ட நாள் 12 February 2011.
  5. "UMA POPULAÇÃO QUE SE URBANIZA, Uma avaliação recente - Cidades, 2004". Instituto Geográfico Português. Archived from the original on 27 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 20 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புக்கள்

தொகு