போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம்
போர்த்துகல்,பிரேசில்,அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் (United Kingdom of Portugal, Brazil and the Algarves) பிரேசில் மாநிலத்தை தனி இராச்சியமாக அறிவித்து அத்துடனேயே போர்த்துகல் இராச்சியத்தையும் அல்கார்வெசு இராச்சியத்தையும் ஒன்றிணைத்து பல்வேறு கண்டங்களில் அமைந்த ஒரே முடியாட்சியாகும்.
போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஐக்கிய இராச்சியம் ரைனோ யூனிடோ டி போர்ச்சுகல்,பிராசில் எ அல்கார்வேசு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1815–1822/1825 | |||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||
தலைநகரம் | இரியோ டி செனீரோ (1815–1821) லிஸ்பன் (1821–1825) | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | போர்த்துக்கேயம், மற்றும் பல | ||||||||||||
சமயம் | கத்தோலிக்க திருச்சபை | ||||||||||||
அரசாங்கம் | தளையறு முடியாட்சி
(1815–1820) அரசியல்சட்ட முடியாட்சி (1820–1823) தளையறு முடியாட்சி (1823-1825) | ||||||||||||
மன்னர் | |||||||||||||
• 1815–1816 | மாரியா I | ||||||||||||
• 1816–1825 | யோவான் VI | ||||||||||||
சட்டமன்றம் | போர்த்துக்கேய கோர்டெசு (1820–1823) | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1815 | ||||||||||||
• முடிவு | 1822/1825 | ||||||||||||
நாணயம் | போர்த்துக்கேய ரியல் | ||||||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | PT | ||||||||||||
|
நெப்போலியனின் படையெடுப்புக்களின்போது பிரேசிலுக்கு இடம்மாறிய அரசவை மீண்டும் ஐரோப்பாவிற்குத் திரும்பிய நேரத்தில், 1815இல் போர்த்துகல், பிரேசில்,அல்கார்வெசு ஐக்கிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. 1822 இல் பிரேசில் விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டபோது இந்த இராச்சியம் நடைமுறைப்படி முடிவுக்கு வந்தது. தன்னாட்சி பெற்றதாக பிரேசில் பேரரசை போர்த்துகல் ஏற்றக்கொண்ட பிறகு 1825இல் முறையாக இந்த இராச்சியம் முடிவுக்கு வந்தது.[1][2]
இந்த ஐக்கிய இராச்சியம் நடைமுறையில் இருந்த காலத்தில் இது முழுமையான போர்த்துகல் பேரரசின் பிரதிநிதியாக இருக்கவில்லை. உண்மையில் இது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் இருந்த வெளிநாட்டுக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்திய அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்த பெருநகரமாக விளங்கியது.
எனவே, பிரேசிலைப் பொறுத்தவரை, இந்த அமைப்பினால் இரு நன்மைகள் கிடைத்தன:
- தனி இராச்சியம் என்ற தகுதி கிட்டியது.
- ஐக்கிய இராச்சியத்தின் உருவாக்கம் பிரேசில் இனி குடியேற்ற பகுதியாக இல்லாது அரசியலில் சமமான பங்கு கொள்ளும் தகுதியை நிலைநாட்டியது.
மேற்சான்றுகள்
தொகுநூற்றொகுதி
தொகு- (போர்த்துக்கேயம்) Gomes, Laurentino (2007). 1808 (book). Planeta.
{{cite book}}
: Text "1808 — How a mad queen, a coward prince and a corrupt court fooled Napoleon and changed the History of Portugal and Brazil" ignored (help) - Monarchy in Brazil[தொடர்பிழந்த இணைப்பு] வெளியுறவு அமைச்சகம், accessed on 8 June 2008.
- Elevação do Brasil a Reino Unido a Portugal e Algarves Secretary of Education of Rio de Janeiro, accessed on 8 June 2008. (போர்த்துக்கேயம்)
- Reino Unido (1815–1822) Chamber of Deputies of Brazil, accessed on 8 June 2008.