போர்னியோ மழைக்காடுகள்
போர்னியோ மழைக்காடுகள் (Borneo lowland rain forest) தென்கிழக்காசியா[1] கண்டத்தில் இந்தோனேசியா, மலேசியா, புருணை போன்ற நாடுகளை உள்ளடக்கிய மலாய் தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள பசுமையான காடு ஆகும். இக்காடுகள் அமேசான் காடுகளைவிடப் பழமையான காடுகளாகும். தற்போதைய சூழலில் (Ecoregion) உயிரியல் ஆய்வாளர்களுக்கு இக்காடுகள் பெரும் சவாலாக திகழ்கிறது. மேலும் பாலூட்டிகள், மரங்கள், பறவைகள், பூச்சி இனங்கள், என பலதரப்பட்ட அபூர்வ இனங்கள் இங்கு வாழுகின்றன. இப்பகுதியில் காணப்படும் காடுகள் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல மற்றும் ஈரமான அகலமான இலைகளைக் கொண்டவையான மரங்கள் உள்ளன. இக்காடுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பின்னர் இந்தோனேசியா, மலேசியா, புருணை போன்ற நாடுகளின் பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டன.
உயிரினங்கள்
தொகுஇத்தீவில் காணப்படும் 15,000 தாவரங்களில் இங்கு மட்டும் 6,000 வகை தாவரங்களும், 420 வகையானப் பறவையினங்களையும் காணமுடியும். மேலும் 222 வகையான பாலூட்டிகள் வாழுகின்றன, இவற்றின் 44 வகையானவை ஓரிட வாழ்விகளாக வாழுகின்றன. பறவைகளில் 37 வகையான பறவைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையைக் கொண்டுள்ளன. அதேபோல் இங்கு மீன்கள் மட்டும் 393 வகையானவை வாழுகின்றன. இவற்றில் ஓர் இடத்தில் மட்டும் மீன்கள் மட்டும் 19 வகையாகக் காணப்படுகின்றன.
அரியவகைப் பூச்சிகள்
தொகுஇக்காடுகளில் காணப்படும் பிசின் நிறந்த மரம் ஒன்றில் மட்டுமே 100 வகையான பூச்சி இனங்களைக் காணமுடியும். இங்குக் காணப்படும் சான் மெகாஸ்டிக் என்ற ஒருவகையான பூச்சி அரை மீட்டருக்கும் (56.7 செ.மீ) மேல் வளரும் தன்மை கொண்டது. இப்பூச்சி உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. மேலும் உலகிலேயே பெரிய மலரான ரஃப்ளேசியா என்ற மலர் இங்குதான் தரையில் மலருகிறது.[1] துபையா என்னும் பாலூட்டி வகை விலங்கு தொன்மைக்கால பூச்சிகளை உண்ணும் தன்மை கொண்டதாக உள்ளது. அதோடு உலகிலேயே குள்ளமான பிக்மி யானை என்று அழைக்கப்படும் யானைகள் இங்குதான் வாழுகின்றன. அதோடு வௌவாலுக்கு முந்திய நிலை என்று கருதப்படும் பறக்கும் லீவர் என்னும் உயிரினம் இங்குதான் காணப்படுகிறது.[2]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 http://www.worldwildlife.org/ecoregions/im0102
- ↑ அடவியின் அந்திமக் காலம்? - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016