போலா, திருவிழா
போலா (Pola (festival) என்பது எருதுகள் மற்றும் காளைகளுக்கு விவசாயிகள் மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். இந்த விழா மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கொண்டாடபடுகிறது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த செயல்களில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் காளைகள் மற்றும் எருதுகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக இந்த மாநிலங்களில் போலா கொண்டாடப்படுகிறது. [1] மகாராஷ்டிராவின் கிராமப்புறப் பள்ளிகளில் போலா தினத்தில் விடுமுறை விடப்படுகிறது. அந்த தினத்தில் காளைகளை எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்துவது இல்லை. [2] இது விவசாயிகளுக்கு மிக முக்கியமான பண்டிகை. பெண்கள் வீட்டின் முன்னர் நிறக்கோலம் இட்டு கதவுகளின் மீது தோரணம் கட்டுவர். மேலும் எருதுகளுக்கு குங்குமம் இட்டு மண்ணாலான விளக்குகளில் நெய் ஊற்றி ஆரத்தி எடுப்பர் [3]. குடும்பத்தினர் எருதுகளிடம் ஆசிர்வாதம் பெறுகின்றனர்.விவசாயிகள் தங்கள் காளைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசுகிறார்கள், பழைய கயிறுகளை எடுத்துவிட்டு புதிய கயிறுகளை மணிகளால் கட்டிக்கொள்கிறார்கள், ஜோவர், கோதுமை மற்றும் பயறு போன்ற பல்வேறு வகையான தானியங்களை எருதுகளுக்கு வழங்குகிறார்கள். இது ஆகஸ்ட் மாதத்தில் திருவோண புதுநிலவு அன்று நடைபெறுகிறது.[4]
கொண்டாட்டங்கள்
தொகுபோலா உழவர்களுக்கான திருவிழா. அன்றைய தினத்தில் விவசாயிகள் தங்கள் காளைகளையும் எருதுகளையும் நன்றி தெரிவிக்கும் நிக்ழ்வாக இது அமைகிறது. இது பொதுவாக ஆகஸ்ட் பிற்பகுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெறும். போலா நாளில், காளைகளை குளீப்பாட்டிய பின்னர் ஆபரணங்கள் மற்றும் சால்வைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. அவற்றின் கொம்புகள் வர்ணம் பூசப்பட்டு, அதன் கழுத்து பூக்கள் கொண்ட மாலைகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
சான்றுகள்
தொகு- ↑ "Pola festivities endure even in urban milieu".
- ↑ "Pola festivities endure even in urban milieu.".
- ↑ "Pola festivities endure even in urban milieu Shreya Tinkhede | TNN | Updated: Aug 30, 2019, 10:01 IST".
- ↑ Maharashtra State Gazetteers: Kolhapur District (Volume 1). Directorate of Govt. Print., Stationery and Publications, Maharashtra State. 1976. p. 280.