போலா ரவுத்து
போலா ரவுத்து (Bhola Raut) இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
போலா ரவுத்து Bhola Raut | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் , மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1952–1977 | |
பின்னவர் | சகந்நாத் பிரசாத் சுவதந்த்ரா |
பதவியில் 1980–1989 | |
முன்னையவர் | சகந்நாத் பிரசாத் சுவதந்த்ரா |
பின்னவர் | மகேந்திர பைதா |
தொகுதி | பகாகா மக்களவைத் தொகுதி , பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெட்டியா, மேற்கு சம்பாரண் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 4 நவம்பர் 1914
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பாபுனி தேவி |
பிள்ளைகள் | 4 மகன்கள், 1 மகள் |
மூலம்: [1] |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபோலா ரவுத்து 1914 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மேதார் சாதியில் அரிகர ராவத் என்பவருக்கு பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தில் (தற்போது மேற்கு சம்பாரண், பீகார் ) சம்பாரண் பகுதியிலுள்ள பெத்தியா நகரத்தில் பிறந்தார்.[1]
அரசியல்
தொகு1952, 1957, 1962, 1967, 1971, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் பீகாரில் உள்ள பகாகா தொகுதியில் இருந்து போலா ரவுத்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 1950-51 ஆம் ஆண்டில் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
போலா ரவுத்து தாழ்த்தப்பட்ட வகுப்புகள் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளராகவும், மெகதர் டோம் சபாவின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய மெகதர் மசுதூர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், பீகார் மாநில சஃபாய் மசுதூர் சங்கத்தின் தலைவராகவும், பீகார் மாநில தோட்டக்காரர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்
மேற்கோள்கள்
தொகு- ↑ Kshīrasāgara, Rāmacandra (1994). Dalit Movement in India and Its Leaders, 1857–1956. M.D. Publications Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85880-43-3 – via Google Books.
- ↑ H. D. Singh (1996). 543 faces of India: guide to 543 parliamentary constituencies. Newmen Publishers. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190066907 – via Google Books.
- Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1967. p. 36 – via Google Books.
- Who's who. Lok Sabha Secretariat. 1971. p. 515 – via Google Books.