போலிகள் (பஞ்சாபி)
போலிகள் (Boliyan, உச்சரிப்பு:பம்பாய் என்பதிலுள்ள இரண்டாம் ப போல) என்பன பஞ்சாப் பகுதியில் பாடப்படும் இரண்டடி பாடல்களாகும். போலி நிகழ்வுகளையும் அதன்போது ஏற்படும் உணர்ச்சிகளையும் ஏற்படும் சூழல்களையும் வெளிப்படுத்துவனவாக அமையும். பொதுவாக போலி பெண்ணொருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவரது குழுவின் மற்ற பெண்களால் கூட்டாகப் பாடப்படும். போலிகள் பெரும்பாலும் குழந்தை பிறப்பின் போதும், திருமண நிகழ்வின் போதும் பாடப்படும்.[1]
இந்த போலிகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாய்வழியே வந்தவையாம். தற்காலத்தில் போலிகள் பாங்க்ரா இசையுடன் பிணைந்து வட அமெரிக்கா, பெரிய பிரித்தானியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது புதியவகை, நகரிய பாணி பாங்க்ரா வகையை உருவாக்கியுள்ளது. வட இந்தியர்களை மட்டுமல்லாது அனைவரையும் கவரும் வண்ணம் வளர்ந்துள்ளது.
பொதுவாக போலிகளை பெண்கள்தான் பாடுவார்கள் என்றாலும் ஆண்களும் பாடுகின்றனர். குல்விந்தர் தில்லோன் தனது போலியான் பாடல்கள் மூலமாகவே பிரபலமானவர்.[2]
ஜாகோ
தொகு"ஜாகோ" என்பது திருமணத்திற்கு முந்தைய நாளில் விழித்திருக்கும் இரவில் குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்க மகிழ்ச்சியான தருணத்தைப் பாடும் போலி ஆகும். ஜாகோ இரவன்று பாடப்படும் முதல் போலி ஜாகோ ஐயா ஆகும்- இதனை இவ்வாறாக மொழிபெயர்க்கலாம்:
ஜத்தா ஜாக் வே. - நீங்கள் ஜாட்டுக்கள் எல்லோரும் விழியுங்கள்
ஹுன் ஜாகோ ஐயா. - ஜாகோ வந்துவிட்டது
ஷவா வே ஹுன் ஜாகோ ஐயா. - ஓ, பாருங்கள், ஜாகோ வந்துவிட்டது.
லோரி தெ கே பையா
உத் பௌ ஜி
அத்தியான் கரு ஜி
சுக்னி பௌஜி
ஜாகோ ஐயா
ஜத்தா ஜாக் வே
ஹுன் ஜாகோ ஐயா"
வழமையாக போலிகள் பாடும்போது பெண்கள் கித்தா நடனமாடுவர். மால்வா பகுதியிலும், கீழ் பஞ்சாபிலும், ஆண்கள் போலிகளைப் பாடுகின்றனர். அவர்கள் போலிகளுடன் பாங்க்ரா நடனமும் ஆடுகின்றனர்.
பஞ்சாபிய மூதாதையரால் பெண்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த போலிகள் அறிமுகமாயின. போலிகளுக்கு மேலும் அழகும் வலிவுமூட்ட பெண்கள் வண்ணமிகு சல்வார்-கமீஸ்களை அணிகின்றனர். போலிகளை இயற்ற கவிஞர்கள் தேவையில்லை, விவசாயப் பெருமக்கள் கூட பங்கெடுக்கின்றனர். இவற்றின் சந்தம் சீராக இருக்கும்; பல நேரங்களில் போலிகளை அழகாக்க பொருளற்ற எதுகைகளும் சேர்க்கப்படும். அனைத்து நாட்டுப்புற நடனங்களும் வட்டமாக நிகழ்த்தப்படும்.
கித்தா நடனமாடும்போது பெண்கள் இனிய குரலில் பாட, தோலக் எனப்படும் மேளம், கத்தா எனப்படும் கடங்கள் தாளயிசை வழங்குகின்றன.குழுத்தலைவி போலியைப் பாட அதனை குழுவிலுள்ள மற்றப் பெண்கள் மீளவும் பாடுகின்றனர்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17.
- ↑ "Sikh heritage". Archived from the original on 2015-10-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.
வெளியிணைப்புகள்
தொகுபோலிகள் - குறிப்பு பரணிடப்பட்டது 2016-11-29 at the வந்தவழி இயந்திரம்