போலோ காடு (Polo Forest) விஜயநகர் காடு என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் குசராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள விஜயநகர் வட்டத்தில் உள்ள அபாபூர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு உலர்ந்த கலப்பு இலையுதிர் காடாகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்திலும், வற்றாத அர்னாவ் ஆற்றின் கரையிலும் 400 சதுர கிலோமீட்டர்கள் (99,000 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது.[1][2]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு
 
போலோ காட்டுக்குள் அமைந்துள்ளா ஒரு ஏரி

சாம்பியன் & சேத் வகைப்பாட்டின்படி துணை வகை உலர்ந்த தேக்கு காடுகளுடன் (5A/C-1b) தெற்கு வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.[2]

பருவமழைக்குப் பிறகு, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், காடுகள் பசுமையாக மாறும். 450 க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்கள் இங்குள்ளன. சுமார் 275 பறவைகள், 30 பாலூட்டிகள், 9 வகையான மீன்கள் மற்றும் 32 ஊர்வன இதில் அடங்கும். இப்பகுதியில் சுமார் 79 மர வகைகள், 24 மூலிகைகள் மற்றும் புதர்கள், 18 வகையான புற்கள் மற்றும் மூங்கில்கள் உள்ளன. சோம்பல் கரடிகள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், நீர்க்கோழிகள், குருவிகள், நான்கு கொம்புகள் கொண்ட மிருகங்கள், பொதுவான புனுகுப்பூனை, காட்டுப் பூனைகள் மற்றும் பறக்கும் அணில்கள் உள்ளன. வனப்பகுதி குளிர்காலத்தில், புலம்பெயர்ந்த பறவைகளையும், மழைக்காலங்களில் ஈரநிலப் பறவைகளையும் ஈர்க்கிறது.[3] [2] இந்த காடுகளில் அழிந்து வரும் இந்திய சாம்பல் இருவாச்சி மற்றும் பச்சைக் குக்குறுவான் ஆகியவையும் உள்ளன.[1]

போலோ நினைவுச்சின்னங்கள்

தொகு

இந்த காட்டில் சிவனுக்கான சர்னேசுவர் கோவில் மற்றும் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து மற்றும் சைனக் கோவில்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்த கோவில்கள் மாநில தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.[3]

சுற்றுலா

தொகு

குஜராத் அரசு ஒவ்வொரு ஆண்டும் போலோ திருவிழாவை நடத்துகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Polo Monument and Vijaynagar Forest". Gujarat Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-01.
  2. 2.0 2.1 2.2 "State of Environment Reports of Gujarat" (PDF). The State ENVIS Hub : Status of Environment & Related Issues - Gujarat.
  3. 3.0 3.1 "Polo Forest Site". Principal Chief Conservator of Forest & Head of the Forest Force (HoFF), Government of Gujarat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-01.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
போலோ காடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலோ_காடு&oldid=4002596" இலிருந்து மீள்விக்கப்பட்டது