போவியைட்டு
சல்பைடுக் கனிமம்
போவியைட்டு (Bowieite) என்பது (Rh,Ir,Pt)2S3, என்ற வாய்ப்பாடு கொண்ட ரோடியம்-இரிடியம்-பிளாட்டினத்தின் சல்பைடு கனிமம் ஆகும். அலாசுக்காவின் குட்நியூசு விரிகுடாவில் பிளாட்டினம்-கலப்புலோகம் நக்கெட்சுவில் இக்கனிமம் காணப்படுகிறது [2][3][4]. ஒளிபுகா கனிமங்களை அடையாளப்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய விஞ்ஞானி சிடான்லி போவி (1917-2008) இக்கனிமத்தைக் கண்டறிந்த பின்னர் அனைத்துலக கனிமவியல் கூட்டமைப்பு 1984 இல் இக்கனிமத்திற்கு போவியைட்டு எனப் பெயரிட்டது [5].
போவியைட்டு Bowieite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Rh2S3 |
இனங்காணல் | |
நிறம் | வெளிர் சாம்பல் முதல் வெளிர் சாம்பல் பழுப்பு வரை |
படிக அமைப்பு | செஞ்சாய் சதுரம் |
மிளிர்வு | Metallic |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
மேற்கோள்கள் | [1] |
Pbcn என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் போவியைட்டு படிகமாகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mindat.org
- ↑ Handbook of Mineralogy - Bowieite
- ↑ Webmineral.com - Bowieite
- ↑ Mindat.org - Bowieite
- ↑ http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article4915907.ece The Times, 10 Oct 2008, p81
- ↑ Parthé, E.; Hohnke, E.; Hulliger, F. (1 November 1967). "A new structure type with octahedron pairs for Rh2S3, Rh2Se3 and Ir2S3". Acta Crystallographica 23 (5): 832–840. doi:10.1107/S0365110X67003767. Bibcode: 1967AcCry..23..832P.