பௌசியா கூபி

ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி, பெண்கள் உரிமை ஆர்வலர்

பௌசியா கூபி (Fawzia Koofi; 1975இல் பிறந்தார்)[1] ஒரு ஆப்கான் அரசியல்வாதியும், பெண்கள் உரிமை ஆர்வலருமாவார். இவர் படாக்சான் மாகாணத்தைச் சேர்ந்தவர். தற்போது ஆப்கானித்தான் பிரதிநிதிகளில் கத்தாரின் தலைநகரமான தோகாவில் தாலிபான்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் காபுலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

பௌசியா கூபி
فوزیه کوفی
in 2012இல் பௌசியா கூபி
ஆப்கானிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2005
படாக்சான் மாகாணத்தின்]] சார்பில் தேசிய சட்டமன்றத்தின் கீழ் சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பிரெஸ்தான் கல்கலைக்கழகம், பாக்கித்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பௌசியா கூபி

1975 (அகவை 48–49)
படாக்சான், ஆப்கானித்தான்
பிள்ளைகள்2
வாழிடம்(s)காபுல், ஆப்கானித்தான்
வேலைஅரசியல்வாதி, பெண்கள் உரிமை ஆர்வலர்

சுயசரிதை

தொகு

இவர், பலதுணை மணம் வழக்கத்திலிருக்கும் ஒரு குடும்பத்தின் தனது பெற்றோருக்கு ஏழு பெண்களில் ஒருவராக பிறந்தார். இவரது பாலினம் காரணமாக தனது பெற்றோரால் நிராகரிக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினரான இவரது தந்தை ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது தாயார் தனது கணவரின் அன்பை திரும்பப் பெற ஒரு மகனைப் பெற முயன்றார். பௌசியா கூபி பிறந்த அன்றே இறந்துவிடவேண்டுமென வெயிலில் விடப்பட்டார்.[2]

தன்து பெற்றோரிடம் தன்னை பள்ளிக்கு அனுப்பும்படி சமாதானப்படுத்தி, குடும்பத்தில் பள்ளியில் படிக்கும் ஒரே பெண்ணாக ஆனார். பின்னர் இவர் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவரது தந்தை சோவியத்–ஆப்கான் போரின் முடிவில் (1979-1989) முஜாகிதீன்களால் கொல்லப்பட்டார்.

இவர் முதலில் ஒரு மருத்துவர் ஆக விரும்பினார். ஆனால் அரசியல் அறிவியலைப் படித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் உறுப்பினரானார். இவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் , ஓரங்கட்டப்பட்ட பெண்கள், குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுடன் பணிபுரிந்தார். மேலும் 2002 முதல் 2004 வரை அமைப்பின் குழந்தை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார்.[4]

அரசியல் வாழ்க்கை

தொகு
 
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், சயீத் அமீத் கைலானியுடன் ஆப்கான் நாடாளுமன்றத்தின் சபாநாயகரான பௌசியா கூபி, 2006இல்.

தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தனது "பள்ளிக்குத் திரும்பு" பிரச்சாரத்தில் பெண்களின் கல்வி உரிமையை ஊக்குவித்தார். 2002 முதல் 2004 வரை, இவர் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் குழந்தை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார். இதில் வன்முறை, சுரண்டல் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பணியை மேர்கொண்டார்.[4]

2005 -ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் , நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள படாக்சான் மாவட்டத்திற்கான ஆப்கானிய தேசிய சட்டமன்றத்தின் கீழ் சபையான வோலேசி ஜிர்காவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கீழ் சபையின் துணை சபாநாயகராக பணியாற்றினார். தேசிய சட்டமன்றத்தின் துணை தலைவராகவும் பணியாற்றினார்.[5] இவர், ஆப்கானித்தான் வரலாற்றில் நாடாளுமன்றத்தின் முதல் பெண் இரண்டாவது துணை சபாநாயகர் ஆவார். 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சட்டசபையின் மொத்த 69 பெண் உறுப்பினர்களிடமிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டோரா போரா நகருக்கு அருகில் மார்ச் 8, 2010 அன்று நடந்த பல படுகொலை முயற்சிகளில் இருந்து இவர் தப்பித்தார்.[6]

பெண்களுக்கு சம உரிமை, உலகளாவிய கல்வியை ஊக்குவித்தல் மற்றும் அரசியல் ஊழலுக்கு எதிரான ஒரு தளத்தில் 2014 ஆம் ஆண்டு ஆப்கானித்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார்.[7][8] ஆனால் சூலை 2014 இல் தேர்தல் ஆணையம் பதிவு தேதியை அக்டோபர் 2013க்கு மாற்றியதாக கூறினார். இதன் விளைவாக 40 வயதுக்குட்பட்ட குறைந்தபட்ச வயதுக்கு இவர் தகுதி பெறவில்லை.[9]

2020 ஆம் ஆண்டில், தாலிபான்களுடனான பேச்சுவார்த்தை சமாதான பேச்சுவார்த்தையில் ஆப்கானித்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 பேர் கொண்ட குழுவில் இவரும் ஒரு பகுதியாக இருந்தார். இவர் தனது சகோதரி மரியம் கூபியுடன் பர்வான் மாகாணம் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, காபுலுக்கு அருகே இவரைக் கொல்ல முயன்ற ஆயுததாரிகளால் இவர் கையில் சுடப்பட்டார்.[10]

2021 கோடையில் தலிபான்களின் விரைவான முன்னேற்றத்திற்கு மத்தியில், ஆப்கானித்தானிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவது பற்றிய தனது எண்ணங்களைப் பற்றி ஒரு நேர்காணலில் கேட்டபோது: " ஆப்கானித்தானின் பெண்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாகவும், என்ன நடக்கிறது என்பதில் தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும்" கூறினார்.[11]

சொந்த வாழ்க்கை

தொகு

பொறியாளரும் வேதியியல் ஆசிரியருமான அமீது என்பவரை மணந்தார். திருமணத்திற்கு 10 நாட்களுக்குப் பிறகு, தலிபான்கள் இவரது கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். 2003 இல் விடுவிக்கப்பட்ட சிறிது காலத்தில் இறந்தார். தனது இரண்டு இளம் வயது மகள்களுடன் காபுலில் வசிக்கிறார்.[5][12]

மேற்கோள்கள்

தொகு
  1. Malbrunot, Georges (2011-02-25). "Fawzia, un défi aux talibans" (in French). Le Figaro: p. 18. http://www.lefigaro.fr/mon-figaro/2011/02/25/10001-20110225ARTFIG00652-fawzia-un-defi-aux-talibans.php. 
  2. "A 'Favored Daughter' Fights For The Women Of Afghanistan". NPR. 2012-02-22. பார்க்கப்பட்ட நாள் 2013-05-19.
  3. "Guests of First Lady Laura Bush". ABC News. January 31, 2006. பார்க்கப்பட்ட நாள் February 14, 2013.
  4. 4.0 4.1 "Guests of First Lady Laura Bush". ABC News. January 31, 2006. பார்க்கப்பட்ட நாள் February 14, 2013."Guests of First Lady Laura Bush". ABC News. January 31, 2006. Retrieved February 14, 2013.
  5. 5.0 5.1 Malbrunot, Georges (2011-02-25). "Fawzia, un défi aux talibans" (in French). Le Figaro: p. 18. http://www.lefigaro.fr/mon-figaro/2011/02/25/10001-20110225ARTFIG00652-fawzia-un-defi-aux-talibans.php. Malbrunot, Georges (2011-02-25). "Fawzia, un défi aux talibans" [Fawzia, a challenge to the Taliban]. Le Figaro (in French). p. 18.
  6. Bryony Gordon (February 23, 2012). "'The Taliban want to kill me. But I am fighting for my daughters' freedom' Fawzia Koofi hopes to be Afghanistan's first woman president. The Taliban are determined to stop her.". த டெயிலி டெலிகிராப். https://www.telegraph.co.uk/news/worldnews/asia/afghanistan/9098660/The-Taliban-want-to-kill-me.-But-I-am-fighting-for-my-daughters-freedom.html. 
  7. Graeme Woods (February 14, 2013). "Fawzia Koofi Member of Parliament, Afghanistan". theatlantic.com.
  8. "Woman of the week - Fawzia Koofi Championing feminism in a country where male-chauvinism reigns". platform51.org. March 16, 2012. Archived from the original on April 21, 2012. பார்க்கப்பட்ட நாள் February 15, 2013.
  9. Fawzia Koofi, the female politician who wants to lead Afghanistan 18 December 2013, www.newstatesman.com, accessed 8 November 2020
  10. "Female Afghan peace negotiator wounded in assassination bid". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  11. She risked everything for women's rights in Afghanistan. Now she could lose it all, cbc.ca, Aug 12, 2021
  12. Sachs, Susan (January 21, 2011). "Fawzi Koofi: The face of what Afghanistan could be". The Globe and Mail இம் மூலத்தில் இருந்து ஜனவரி 7, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120107120637/http://www.theglobeandmail.com/news/world/asia-pacific/fawzi-koofi-the-face-of-what-afghanistan-could-be/article1879540/page1/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌசியா_கூபி&oldid=3480608" இலிருந்து மீள்விக்கப்பட்டது