பர்வான் மாகாணம்

பர்வான் (Parwān (பாரசீகம்/பஷ்தூ: پروان), also spelled Parvān) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இதன் மக்கள் தொகை 631,600 ஆகும். இது பல இன பழங்குடி மக்களைக் கொண்ட. கிராமப்புற சமூகமாக உள்ளது. இந்த மாகாணமானது பத்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தலைநகராக சாரிகார் நகரம் உள்ளது.

பர்வான்
Parwan
پروان
குளிர்காலத்தில் சலாங் கணவாய்
குளிர்காலத்தில் சலாங் கணவாய்
ஆப்கானித்தான் வரைபடத்தில் பர்வான் உயர்நிலம்
ஆப்கானித்தான் வரைபடத்தில் பர்வான் உயர்நிலம்
ஆள்கூறுகள் (Capital): 35°00′N 69°00′E / 35.0°N 69.0°E / 35.0; 69.0
நாடு ஆப்கானித்தான்
தலைநகரம்சாரிகார்
அரசு
 • ஆளுநர்முகம்மது ஆசிம் அசீம்
பரப்பளவு
 • மொத்தம்5,974 km2 (2,307 sq mi)
மக்கள்தொகை
 (2015)[1]
 • மொத்தம்6,64,502
 • அடர்த்தி110/km2 (290/sq mi)
நேர வலயம்UTC+4:30
ஐஎசுஓ 3166 குறியீடுAF-PAR
முதன்மை மொழிகள்தாரி மற்றும் பஷ்தூ[2]

இந்த மாகாணமானது கபுல் மாகாணத்தின் வடக்கிலும், பாக்லான் மாகாணத்தின் தெற்கிலும் அமைந்திருக்கும் இது, இந்து குஷ் மலைகளில் இருந்த ஒரு பழமையான நகரத்தின் பெயரில் அமைந்துள்ளது.[3]

பர்வான் மாகாணமானது ஆப்கானிஸ்தானில் பாதுகாகப்பான மாகாணங்களில் ஒன்றாகும். எனினும், எப்போதாவது போராளிகளின் தாக்குதல்கள் குறித்து பதியப்படுகின்றன, ஆனால் அவை வழக்கமாக சிறியதாக உள்ளன.[4] ஆப்கானிஸ்தானில் உள்ள மிகப் பெரிய அமெரிக்க-இராணுவ தளங்களில் ஒன்றான பாக்ராம் விமான தளமானது, பர்வனில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

பர்வானில் கி.மு. 329 ஆம் ஆண்டில், அலெக்சாந்தரால் காகசஸ் அலெக்ஸாண்ட்ரியா என்ற குடியேற்றம் நிறுவப்பட்டது. கி.பி. 792 ஆம் ஆண்டில் அரேபிய முஸ்லீம்கள் அதைக் கைப்பற்றினர். ஜவால் அட்-டின் மிங்ன்பர்னு தலைமையிலான குவாரெஸ்மியன் பேரரசின் ஆட்சியில் இருந்த இந்த மாகாணம், 1221இல் செங்கிஸ்கானின் தலைமையிலான மங்கோலியர்களின் படையெடுப்பில் அவர்களிடம் வீழ்ந்தது.[3] புகழ்பெற்ற மொராக்கோ பயணியும் அறிஞருமான இபின் பதூதா, 1333இல் இந்த பகுதிக்கு வருகை தந்தார்.

1747 ஆம் ஆண்டில் அகமது ஷா துரானியின் துரானி பேரரசுடன் இணைக்கப்படும் வரை இந்தப் பகுதி தைமூர்களாலும், முகலாயர்களால் ஆளப்பட்டது. 1840 ஆம் ஆண்டில், நடந்தமுதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரின் பெரும்பகுதி பர்வான் மாகாணப் பகுதியில் நடந்தது. இப்போரில் பிரித்தானியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பர்வானின் நவீன வரலாறானது 1937இல் ஜபல் சரோஜ் நகரில் ஒரு நவீன ஆடை தயாரிப்பு ஆலை கட்டப்பட்டதில் இருந்து தொடங்குகிறது. சோவியத்-ஆப்கானியப் போரின்போது பர்வானின் சில பகுதிகளில் கடுமையான சண்டைகள் நடந்தன.[5] 1990களில் தாலிபனுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தளமாக இப்பகுதி இருந்தது.

அரசியலும், நிர்வாகமும்

தொகு

மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் முகம்மது ஆசிம் அசீம் ஆவார். மாகாணத்தின் தலைநகராக Charikar நகரம் செயல்படுகிறது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) கையாள்கிறது. ஆப்கானிய தேசிய பொலிசை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.

நலவாழ்வு பராமரிப்பு

தொகு

இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 32% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 11% என குறைந்துள்ளது.[6] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 4 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 7 % என உயர்ந்தது.

கல்வி

தொகு

மாகாணத்தின் மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 37% என்று இருந்தது. 2011 இல் இது 28% என குறைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு
 
ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.
 
பர்வான் மாகாண மாவட்டங்கள்

இந்த மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 631,600 ஆகும். இவர்கள் பல இனமக்களாகவும் பெரும்பாலும் கிராமப்புற மக்களகவும் உள்ளனர்.[1] கடற்படை முதுநிலை பட்டப்படிப்பு பள்ளியின் கூற்றின்படி, மாகாணத்தில் வாழும் இனக்குழுக்களானது பஷ்டூன், தாஜிக், உஸ்பெக், கிசில் பஷ், குச்சி, கசாரா மற்றும் பிற சிறுபான்மை குழுக்களாகும்.[7]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Settled Population of Parwan province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan, Central Statistics Organization. Archived from the original (PDF) on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16.
  2. "Parwan Provincial profile" (PDF). United Nations. Afghanistan's Ministry of Rural Rehabilitation and Development. Archived from the original (PDF) on சூன் 1, 2015. பார்க்கப்பட்ட நாள் சூன் 1, 2015. Dari and Pashto are the main languages spoken in the province; however Dari speakers outnumber Pashto speakers by a ratio of 5 to 2.
  3. 3.0 3.1 Frye, Richard Nelson (1999). "Farwan (also Parwan)". Encyclopaedia of Islam CD-ROM Edition v. 1.0. Leiden, The Netherlands: Koninklijke Brill NV. Retrieved on December 18, 2007.
  4. "Regional Command East: Parwan Province". Institute for the Study of War. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16.
  5. "Charikar". The Columbia Encyclopedia (Sixth). (2007). Columbia University Press. அணுகப்பட்டது December 19, 2007. 
  6. Archive, Civil Military Fusion Centre, "Archived copy". Archived from the original on மே 31, 2014. பார்க்கப்பட்ட நாள் மே 30, 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)CS1 maint: Archived copy as title (link)
  7. "Parwan Province". Program for Culture & Conflict Studies. Naval Postgraduate School. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16. The population of approximately 560,000 is composed of Pashtun, Tajik, Uzbek, Qizilbash, Kuchi, Hazara, Turkmen and other minority groups.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்வான்_மாகாணம்&oldid=3917676" இலிருந்து மீள்விக்கப்பட்டது