பௌண்டரக வாசுதேவன்
பௌண்டரக வாசுதேவன் (Paundraka Vasudeva) பாகவத புராணத்தில் கூறப்படும் ஒரு கதை மாந்தர் ஆவார். ஜராசந்தனின் கூட்டாளியான பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரக வாசுதேவன், வாசுதேவனைப் போன்று உடையணிகள் பூண்டு, தானே உண்மையான பௌண்டர வாசுதேவன் எனக் கூறிக்கொண்டான்.[1] இறுதியில் இம்மன்னர் ஒரு போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.[2]
- மகத நாட்டின் கௌதம தீர்க்கதமஸ் எனும் முனிவரின் மகனான பாலியின் வழித்தோன்றல்களே பௌண்டர நாடு மன்னர்கள் ஆவார்.
- தருமரின் இராசசூய வேள்வியின் போது, பௌண்டர நாட்டு மன்னர் வங்க நாடு கலிங்க நாட்டு மன்னர்களுடன் காணப்பட்டார் எனச் சபா பருவம், அத்தியாயம் 33-இல் குறித்துள்ளது.
- குருச்சேத்திரப் போரில் பௌண்டர நாட்டுப் படைகள் கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம் அத்தியாயம் 7:20) ஆயிரக்கணக்கான பௌண்டர நாட்டுப் படைகள் அருச்சுனனை எதிர்த்துப் போரிட்டது.[3]
- திரௌபதியின் சுயம்வரத்தில் பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரக வாசுதேவன் கலந்து கொண்டார் என ஆதி பருவம், அத்தியாயம் 1:188 -189 இல் குறிப்பிட்டுள்ளது
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Pauṇḍraka, the False Vāsudeva
- ↑ "Srimad Bhagavatam Canto 10 Chapter 66". Archived from the original on 21 பெப்பிரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2014.
- ↑ (மகாபாரதம் 7:90)