ப. சிவகாமி

தமிழ் எழுத்தாளர்

பழனிமுத்து சிவகாமி (Palanimuthu Sivakami பிறப்பு:1957) ஒரு இந்திய தமிழ் எழுத்தாளர். இவர் தனது எழுத்துக்களில் தலித் மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்கிறார்.[1] இந்திய தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவர்.

1995 முதல் தமிழ் இலக்கிய இதழான ”புதிய கோடாங்கி”யில் எழுதி வருகிறார். மேலும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்களுக்காக எழுதி வருகிறார். இவர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றினார். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேலூர் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றினார். தொழிலாளர் துறை கூடுதல் செயலாளராகவும் சுற்றுலாத்துறை இயக்குநராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2009 முதல் இவர் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார்.[2].

படைப்புகள்

தொகு
  1. பழையன கழிதலும்
  2. பழையன கழிதலும் ஆசிரியர் குறிப்பு
  3. குறுக்கு வெட்டு
  4. இப்படிக்கு உங்கள் யதார்த்தமுள்ள
  5. நாளும் தொடரும்
  6. கடைசி மாந்தர்
  7. உடல் அரசியல்

மேற்கோள்கள்

தொகு
  1. Pathak, Nilima (26 August 2012). "Sivakami, first Dalit woman to become a novelist". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
  2. Satyanarayana and Tharu (2011). No Alphabet in Sight: Dalit Writing from South Asia. New Delhi: Penguin Books. pp. 295–297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-143-41426-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சிவகாமி&oldid=4004917" இலிருந்து மீள்விக்கப்பட்டது