ப. சுப்ரமணியம்
ப. சுப்ரமணியம் (1910 - 1979) இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், நாடக உரிமையாளரும் மற்றும் நகரத்தந்தையுமாவார். கேரளாவின் இரண்டாவது திரைப்பட படப்பிடிப்பு அரங்கமான மெர்ரிலேண்ட் திரைப்பட படப்பிடிப்பு அரங்கத்தின் (1951 இல் நிறுவப்பட்டது) நிறுவனர் ஆவார்.
1950 களின் நடுப்பகுதியிலிருந்து 1970 களின் பிற்பகுதி வரை அவர் 69 படங்களைத் தயாரித்துள்ளார். அதில் 59 படங்கள் அவரே இயக்கியுள்ளார். அவரது குமார சம்பவம் என்ற திரைப்படம் சிறந்த படத்திற்கான முதல் கேரள மாநில திரைப்பட விருதை வென்றது. அவரது இரெண்டாங்காட்சி என்ற திரைப்படம் தேசிய விருதை வென்றது. கேரளாவில் சபரிமலை வளர்ச்சிப் பணிக்களுக்காக அவர் தனது சுவாமி அய்யப்பன் திரைப்படத்திலிருந்து பங்களிப்பை வழங்கினார். அதில் சுவாமி அயப்பன் சாலை என்ற பெயரில் ஒரு சாலையை கட்டினார்.
சினிமாவில் அவர் அளித்த பங்களிப்புகள் மலையாள சினிமாவை கணிசமாக உருவாக்கியுள்ளது. சினிமா கண்காட்சி இல்லங்கள், விநியோகங்கள், திரைப்பட அரங்குகள், தயாரிப்பு நிறுவனம் மற்றும் பக்தி மற்றும் சமூக கருப்பொருள்கள் கொண்ட திரைப்படங்களை தயாரிப்பதற்கான தயாரிப்பு நிறுவனம் போன்றவை. அவரது துணிகர முயற்சியான மெர்ரிலேண்ட் திரைப்பட மெர்ரிலேண்ட் திரைப்பட படப்பிடிப்பு அரங்கம் (1951 இல் நிறுவப்பட்டது) அதன் முக்கிய போட்டியாளரான உதயா திரைப்பட படபிடிப்பு அரங்கத்திற்குப் பிறகு கேரளாவின் இரண்டாவது திரைப்பட தயாரிப்பு அரங்காமாகும். நீலா தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரின் கீழ் படங்கள் தயாரிக்கப்பட்டன.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுப. சுப்பிரமணியம் பத்மநாப பிள்ளை மற்றும் நீலாம்மாள் ஆகியோருக்கு நாகர்கோயிலில், (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் ) 1910 பிப்ரவரி 19 அன்று பிறந்தார். தனது இடைநிலை படிப்புக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தார். திருவனந்தபுரம் குடிநீர் வழங்கல் வாரியத்தில் எழுத்தராக நியமிக்கப்பட்டதால் அவர் தனது படிப்பை முடிக்கவில்லை.
திருவனந்தபுரம் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் கௌடியர் அரண்மனையிலிருந்து முதல் முறையாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டி கோரிக்கை வந்தது. இந்த திட்டத்தின் போதுதான் அவரது கடின உழைப்பும் நேர்மையும் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திருவிதாங்கூர் திவான் சர் சி.பி.ராமசாமி ஐயர் ஆகியோருடன் ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தியது. ஒரு வருடம் கழித்து, சுப்பிரமணியம் அரசு எழுது பொருட்கள் துறையில் சேர்ந்தார். அங்கு அவர் திவானுடன் தொடர்ந்து ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தினார்.
தொழில்
தொகுவணிகம்
தொகுதிவான் மற்றும் அரச குடும்பத்தினருடனான அவரது தொடர்புகள் அவரது வேலையை விட்டுவிட்டு தனது முதல் தொழிலைத் தொடங்க உதவியது - முந்தைய திருவிதாங்கூரின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பேருந்து சேவையைத் தொடங்கினார். சர் சிபி ராமசாமி ஐயர் முதலில் எட்டு இருக்கைகள் கொண்ட வாகனம் வாங்க அவருக்கு உதவினார். பின்னர் சுப்பிரமணியம் மேலும் இரண்டு பேருந்துகளை சேர்த்தார்.
ஆரம்பகால தயாரிப்புகள்
தொகுதம்பனூர் ரயில் நிலையத்தில் ( திருவனந்தபுரம் மத்திய நிலையம் ) மற்றும் அதைச் சுற்றியுள்ள புனரமைப்பு பணிகளைத் தொடங்க திருவிதாங்கூர் அரசு முடிவு செய்தபோது, திவான் சுப்பிரமணியத்திற்கு ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தை குத்தகைக்கு எடுக்க உதவினார். சுப்ரமணியம் சதுப்பு நிலத்தை நிரவி ஒரு திரையரங்கத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதனால், திருவனந்தபுரத்தில் 'புதிய திரையரங்கம்' உருவானது. புதிய திரையரங்கம் இன்னும் நகரத்தில் ஒரு முக்கியத் திரையரங்கமாக உள்ளது.
இந்த முயற்சிக்கு முன்பே, சுப்ரமணியம் பிரகலாதா என்ற திரைப்படத்தை தயாரித்தார். இது உண்மையில் அரச குடும்பத்தினரால் நிதியளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மீண்டும், சர் சி.பி.ராமசாமி ஐயர் இந்த முயற்சியில் சுப்பிரமணியத்திற்கு உதவி வழங்கினார்.
மெர்ரிலேண்ட் திரைப்பட படப்பிடிப்பு அரங்கம்
தொகுபின்னர் சுப்பிரமணியம் இயக்குநர் கே.சுப்பிரமணியத்திடம் அவரது உதவியாளராக சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் தான் திருவனந்தபுரத்தில் மெர்ரிலேண்ட் அரங்கத்தைத் தொடங்கி திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். அவரது தயாரிப்பு நிறுவனமான நீலா தயாரிப்பு நிறுவனம், அவரது தாயார் நீலாம்மாளின் நினைவாக பெயரிடப்பட்டது. கடவுள் சுப்ரமண்யனின் பக்தர் என்பதால், அவரது படத்தை அரங்கத்தின் சின்னமாக பயன்படுத்தினார். இவரது முதல் படம் 1952 இல் வெளியான 'ஆத்மசகி' என்பதாகும். புகழ்பெற்ற நடிகர் சத்யனின் முதல் படம் இது. சதயன் பின்னர் மலையாள திரையுலகில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக ஆனார்.
1979 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி தனது 69 வயதில் இறக்கும் வரை சுப்பிரமணியம் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்தார். இப்போது அவரது நிறுவனத்தை அவரது மகன்களான சு. கார்த்திகேயன் மற்றும் சு. முருகன் ஆகியோர் நடத்துகின்றனர். மெர்ரிலேண்ட் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களை தயாரிப்பதில் இறங்கியது. மேலும் அவர்களின் பழைய திரைப்படமான சுவாமி அய்யப்பனை தொலைக்காட்சித் தொடர் வடிவத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பியதில் பிரபலமானது.