மகதி ஏரி
மகதி ஏரி (Lake Magadi), கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டின் தென்பகுதியில் உள்ளது. இதன் தெற்கில் தான்சானியா நாட்டில் நாட்ரோன் ஏரி உள்ளது. மகதி ஏரி 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மகதி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் எரிமலை பாறைகளால் ஆனதால், ஏரியின் நீர் செந்நிறமாக காட்சியளிக்கிறது. கோடைக்காலத்தில் இந்த ஏரியின் நீர் 80% அளவிற்கு சோடியம் பைகார்பனேட்டு எனும் காரத் தன்மை மற்றும் அமிலத் தன்மை கொண்டதால், மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் நீர் அருந்த தகுதி அற்றதாக உள்ளது. கோடைக்காலத்தில் பிளமிங்கோ எனும் பெரும் பூநாரைகள் மட்டுமே இந்த ஏரிப்பகுதியில் காணப்படுகிறது.
மகதி ஏரி | |
---|---|
2014ல் மகதி ஏரி, கென்யா | |
அமைவிடம் | கென்யாவின் ரிப்ட் பள்ளத்தாக்கு |
ஆள்கூறுகள் | 1°55′S 36°16′E / 1.917°S 36.267°E |
வடிநில நாடுகள் | கென்யா |
மேற்பரப்பளவு | 100 km2 (39 sq mi) |
இந்தியாவின் டாடா குழுமம் 2005-ஆம் ஆண்டு முதல் மகதி ஏரியின் நீரிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தேவையான சோடா உப்பு தயாரிக்கிறது.
-
சோடா உப்பு தொழிற்சாலை
-
சோடா இரயில்
-
வரைபடம்
-
ஏரியின் செந்நிற நீர்
-
மகதி ஏரியின் உப்பளம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Baker, B.H. 1958. Geology of the Magadi area. Report of the Geological Survey of Kenya, 42, 81 pp.
- Behr, H.J. 2002. Magadiite and Magadi chert: a critical analysis of the silica sediments in the Lake Magadi Basin, Kenya. SEPM Special Publication 73, p. 257-273.
- Eugster, H.P. 1970. Chemistry and origin of the brines from Lake Magadi, Kenya. Mineralogical Society of America Special Paper, No. 3, p. 215-235.
- Eugster, H.P. 1980. Lake Magadi, Kenya, and its Pleistocene precursors. In Nissenbaum, A. (Editor) Hypersaline brines and evaporitic environments. Elsevier, Amsterdam, pp. 195–232.
- Jones, B.F., Eugster, H.P., and Rettig, S.L. 1977. Hydrochemistry of the Lake Magadi basin, Kenya. Geochimica et Cosmochimica Acta, v. 41, p. 53-72.
வெளி இணைப்புகள்
தொகு- Slide show of aerial photos by Christophe Gruault at Fotopedia