சோடியம் பைகார்பனேட்டு

சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate, ஐயுபிஏசி பெயர்: சோடியம் ஐதரசன் கார்பனேட்டு) NaHCO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சோடியம் அயனிகள் மற்றும் பைகார்பனேட்டு அயனிகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உப்பு ஆகும். சோடியம் பைகார்பனேட்டு ஒரு வெண்ணிறப் படிகத் திண்மம் ஆகும். ஆனால் பார்ப்பதற்கு பொடி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.  இது சலவைச் சோடாவினை (சோடியம் கார்பனேட்டு) ஒத்த இலேசான உப்புச்சுவையையும் மற்றும் கசப்புச்சுவையையும் கொண்டுள்ளது.  இதன் இயற்கைக் கனிமமானது நாகோலைட்டு என்ற வடிவத்தில் காணப்படுகிறது. இது நேட்ரான் எனும் கனிமத்தின் பகுதிப்பொருளாக உள்ளது. கனிமங்கள் கரைந்துள் பல ஊற்றுக்களில் இது கரைந்து காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால்  E 500 எனக் குறியீடிடப்பட்ட உணவுடன் சேர்க்கத்தக்க சேர்க்கைப் பொருளாக உள்ளது.

சோடியம் பைகார்பனேட்டு
Ball and stick model of a sodium cation
Ball and stick model of a sodium cation
Ball and stick model of a bicarbonate anion
Ball and stick model of a bicarbonate anion
Sample of sodium bicarbonate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரசன் கார்பனேட்டு
வேறு பெயர்கள்
சமையல் சோடா, பைகார்ப் (ஆய்வக வழக்கு), சோடாவின் பைகார்பனேட்டு, நாகோலைட்டு
இனங்காட்டிகள்
144-55-8 Y
Beilstein Reference
4153970
ChEBI CHEBI:32139 Y
ChEMBL ChEMBL1353 Y
ChemSpider 8609 Y
DrugBank DB01390 Y
EC number 205-633-8
InChI
  • InChI=1S/CH2O3.Na/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1 Y
    Key: UIIMBOGNXHQVGW-UHFFFAOYSA-M Y
  • InChI=1/CH2O3.Na/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1
    Key: UIIMBOGNXHQVGW-REWHXWOFAQ
IUPHAR/BPS
4507
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C12603 Y
ம.பா.த சோடியம்+பைகார்பனேட்டு
பப்கெம் 516892
வே.ந.வி.ப எண் VZ0950000
  • [Na+].OC([O-])=O
UNII 8MDF5V39QO Y
பண்புகள்
NaHCO
3
வாய்ப்பாட்டு எடை 84.0066 கி மோல்−1
தோற்றம் வெண்ணிறப் படிகங்கள்
மணம் மணமற்றது
அடர்த்தி
  • 2.20 கி/செமீ3 திண்மமாக[1]
  • 1.1 to 1.3 பொடியாக[2]
உருகுநிலை (50 °செ-இல் சோடியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது [7])
  • 69 கி/லி (0 °செ)[3]
  • 96 கி/லி (20 °செ)[4]
  • 165 கி/லி (60 °செ)[4]
  • 236 கி/லி (100 °செ)[3]
கரைதிறன் 0.02 எடை% அசிட்டோனில், 2.13 எடை% மெதனாலில் @22 °செ.[5] எதனாலில் கரைவதில்லை
மட. P −0.82
காடித்தன்மை எண் (pKa)
  • 10.329[6]
  • 6.351 (கார்போனிக் அமிலம்)[6]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) nα = 1.377 nβ = 1.501 nγ = 1.583
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−947.7 கிஜுல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
102 ஜுல்/மோல்கெல்வின்
வெப்பக் கொண்மை, C 87.61 ஜுல்/மோல்கெல்வின்
மருந்தியல்
ATC code
Routes of
administration
சிரைவழி, வாய்வழி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீவிரமான கண் எரிச்சலை உண்டாக்குகிறது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றும் தன்மையற்றது
Lethal dose or concentration (LD, LC):
4220 மிகி/கிகி (rat, oral)[8]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் கார்பனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பெயரிடுதல்

தொகு

இந்த உப்பானது மிக நீண்ட காலமாக அறியப்பட்டதாக இருப்பதாலும், பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாலும், இந்த உப்பானது ரொட்டி சோடா, சமையல் சோடா மற்றும் சோடாவின் பை கார்பனேட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.  நடைமுறையில் பேச்சு வழக்கில் சோடியம் பை கார்பனேட்டு மற்றும் சோடாவின் பை கார்பனேட்டு ஆகிய பெயர்கள் துண்டிக்கப்பட்டே விடுகின்றன. சோடியம் பைகார்ப், பைகார்ப் சோடா, பைகா என்பது கூட பொதுவான பெயர் வடிவங்களாக உள்ளன.  19 ஆம் நுாற்றாண்டில் இலத்தீன் மொழியில் சாலேரடசு (saleratus) என்ற வார்த்தை (பொருள்: காற்றேற்றப்பட்ட உப்பு) என்பது சோடியம் பைகார்பனேட்டு மற்றும் பொட்டாசியம் பைகார்பனேட்டு ஆகிவற்றுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பெயராகும்.

இச்சேர்மத்தின் பெயரிலுள்ள முன்னொட்டான “பை“ என்பதானது, சோடியம் கார்பனேட்டு மற்றும் இதர கார்பனேட்டுகளில் காணப்படும் ஒரு சோடியத்திற்கான (அல்லது உலோகத்திற்கான) கார்பனேட்டைப் போன்று இரண்டு  மடங்கு கார்பனேட்டு (CO3) இருப்பதாக உற்றுநோக்கப்பட்டு அறியப்பட்டதன் அடிப்படையில் வைக்கப்பட்டப், பழைய பெயரிடும் முறையிலிருந்து வந்ததாகும். நவீன முறையில் வேதிச்சேர்மங்களின் வேதிஇயைபு துல்லியமான முறைகளில் கண்டறியப்படுவதால் (சோடியம் பைகார்பனேட்டு என்று பெயரிடும் போது அறியப்படாமல் இருந்தது) NaHCO இல் உள்ள சோடியத்தின் அளவானது Na2CO3 (Nல் உள்ள சோடியத்தின் அளவில் பாதியாக உள்ளது என்று வேறு விதமாகச் சொல்லப்படுகிறது. (Na எதிர் Na2).

பயன்கள்

தொகு

சோடியம் பை கார்பனேட்டு பல்வேறு விதமான விரிவான பயன்பாாடுகளைக் கொண்டுள்ளது.

சமையல்

தொகு

ரொட்டி தயாரிப்பு சோடா என அழைக்கப்படும் சோடியம் பைகார்பனேட்டு முக்கியமாக அடுமனைத் (baking)  தொழிலில் ஒரு புளிப்பேற்றியாக பயன்படுகிறது. இது உணவு தயாரிக்கப் பயன்படும் மாவுப்பொருட்ளில் காணப்படும் அமிலத்தன்மையுடைய பகுதிப்பொருட்களுடன் வினைப்பட்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. இதன் காரணமாக, மாவுப்பொருளில் விரிவடைதல் நிகழ்ந்து இளகிய தன்மையும், விரும்பத்தகுந்த ஒரு இழையமைவும் உருவாகி, ரொட்டிகள், சோடா ரொட்டிகள், அடுமனையில் தயாராகும் உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றில் மிருதுத்தன்மை உண்டாகிறது. இந்த வினையில் பாசுபேட்டுகள், எலுமிச்சைப் பழச்சாறு, டார்டார் குழைவு, வெண்ணெய், இன்தயிர், கோகோ, காடி (வினிகர்) போன்றவை சோடியம் பைகார்பனேட்டுடன் வினைபுரியும் பொருட்களாக உள்ளன. புளித்த மாவில் காணப்படும் இயற்கையான அமிலங்களுடன் சிறு அளவுகளில் சேர்த்து மேலும் புளிக்கச்செய்யலாம்.[9]

வெப்பப்படுத்துவதும் சோடியம் பைகார்பனேட்டை ஒரு மிருதுப்படுத்தும் காரணியாச் செயல்படச் செய்ய முடியும். வெப்பப்படுத்தும் போதும் சோடியம் பைகார்பனேட்டானது தன்னில் உள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி மாவுப்பொருளுக்கு மிருதுத்தன்மையை அளிக்கிறது.  அமிலத்தன்மையுள்ள பொருட்கள் சேர்க்கப்படாத போது, அதில் உள்ள பாதி அளவான கார்பன் டை ஆக்சைடு மட்டுமே வெளியிடப்படுகிறது. கூடுதலாக, அமிலமேதும் சேர்க்கப்படாத அடுமனை சோடா (அல்லது) ரொட்டி சோடா உருவாக்கப்பட்ட சோடியம் கார்பனேட்டு வலிமையான காரத்தன்மை கொண்டதாகவும், அடுமனையில் தயாரித்த உணவுப்பொருளுக்கு ஒரு கசப்பான சுவை, பிசுபிசுப்புத் தன்மை மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவற்றைத் தருகிறது. சமையல் சோடா என்பது நீரால் செயலேற்றம் செய்யப்பட்ட அமிலமொன்றை உள்ளடக்கியது என்ற விதத்தில் வித்தியாசப்படுகிறது.[10][11]  80 °C வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும் போது கார்பன் டை ஆக்சைடானது உருவாகி வெளிவருகிறது.[12]

2 NaHCO3 → Na2CO3 + H2O + CO2

சாதாரண அறை வெப்பநிலையில் இந்த வினையானது மிக மெதுவாக நடைபெறுவதால், உணவுப்பொருள் அல்லது ரொட்டிகள் தயாரிப்பிற்காகத் தயார் செய்யப்பட்ட மாவினை அடுமனையில் வெப்பப்படுத்தப்படும் வரை விரிவடையாமல் இருக்கச் செய்யலாம்.

சமையல் சோடாக்களின் பலவகைகளில் சோடியம் பைகார்பனேட்டானது, கால்சியம் அமில பாசுபேட்டு, சோடியம் அலுமினியம் பாசுபேட்டு அல்லது டார்டார் குழைமம் ஆகியவற்றுடன் இணைந்து காணப்படும்.[13] சில நேரங்களில் காய்கறிகளை சமைக்கும் போது கூட அவற்றை மிருதுவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இவ்வாறு செய்யப்படுவது நடைமுறையில் இல்லாத செயலாகி விட்டது. இருப்பினும், ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க உணவகங்களில் உணவு தயாரிப்பில் இறைச்சியைப் பதப்படுத்த இது இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. சமையல் சோடாவானது உணவுப்பொருட்களில் உள்ள உயிர்ச்சத்து-சி (இடஞ்சுழி அசுகார்பிக் காடி அல்லது அசுகார்பிக் அமிலம்) போன்ற அமிலங்களுடன் வினைபுரியலாம். பொறித்த உணவு வகைகளை மேலும் மேம்படுத்த நீராவியுடன் சேர்த்து அனுப்பும் போது அதன் பாதையில் வைக்கப்படும் பொறித்த உணவுப்பொருளின் மொறுமொறுப்பு கூடுகிறது.

1920 களின் ஆரம்பத்திலேயே பைகார்பனேட் தங்களது சிறுநீரில் யூரியாவை இழந்து கொண்டிருக்கும் நோயாளிகளிடம் எலும்பின் வலிமையை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் அண்மையில், அந்தோணி செபாசுதியானின் சோதனைகள் உணவுடன் பைகார்பனேட்டை சேர்ப்பது (ஆய்வாளர் பொட்டாசியம் பைகார்பனேட்டை சேர்த்தார்) பெண்களிடம் மாதவிடாய் முடிந்த பின்னர் உள்ள காலகட்டத்தில் கால்சியம் இழப்பைக் குறைக்கிறது என்பதைக் காட்டுகின்றன. பைகார்பனேட்டை உணவுடன் இருபதாண்டுகளுக்குத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால், ஒரு கை, ஒரு கால் இவற்றின் எலும்புகளுக்கீடான கால்சியத்தைத் தருவதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.[14]

பூச்சிக் கட்டுப்பாடு

தொகு

சோடியம் பைகார்பனேட்டை கரப்பான் பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தலாம். சோடியம் பைகார்பனேட்டை உட்கொண்ட கரப்பான் பூச்சிகளின் உள்ளுறுப்புகள் கார்பன் டை ஆக்சைடு உருவாவதன் காரணமாக வெடித்துச் சிதறுகின்றன..[15] சோடியம் பைகார்பனேட்டானது, பூஞ்சைகளை வளரவிடாமல் கட்டுப்படுத்துவதில் திறன் மிக்கதாக உள்ளது. [16] மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தால் பதிவுபெற்ற உயிரியபூச்சிக்கொல்லியாகவும் உள்ளது..[17]

வண்ணப்பூச்சு அரிமான நீக்கம்

தொகு

சோடியம் பைகார்பனேட் வண்ணப்பூச்சினை நீக்கும் செயல்முறையிலும், சோடாத்தெளிப்பு (sodablasting) எனப்படும் செயல்முறையிலும் பயன்படுகிறது. சோடத்தெளிப்பு என்பது சோடியம் பைகார்பனேட்டை அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படத்தி அலுமினியப்பொருட்கள், மரங்கள் போன்றவற்றை துாய்மைப்படுத்தும் முறையாகும். வேறு ஏதாவது தேய்க்கும் பொருள் கொண்டு அலுமினியத்தைத் துாய்மைப்படுத்த முயன்றால் அரிமானம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

காரத்தன்மை/pH உயர்வு

தொகு

நீச்சல் குளங்கள், மருந்து நீரூற்றுகள், தோட்டங்களில் காணப்டும் குட்டைகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த காரத்தன்மையை நிர்வகிக்க சோடியம் பைகார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. சோடியம் பைகார்பனேட்டை சேர்ப்பது எப்பொழுதும் pH மதிப்பை உயர்த்தவே செய்யும் இதன் காரணமாக சரியான pH நிலையை எளிதாக நிர்வகிக்க முடிந்தது. pH மதிப்பானது குறைவாக இருந்து, காரத்தன்மையானது போதுமான அளவிற்கு இருக்கும் நேர்வில் சோடியம் பைகார்பனேட்டை pH மதிப்பை சரிசெய்ய பயன்படுத்தக்கூடாது.[18]

பட்டாசுத் தொழில்

தொகு

பொதுவான வெடி மற்றும் மத்தாப்புப் பொருட்களில் ஒன்றான பாம்பு மாத்திரை, சோடியம் பைகார்பனேட்டு தீயூட்டும் பொருளின் முக்கியப் பகுதிப் பொருளாக உள்ளது. பாம்பு போன்று எழும் தோற்றமானது, வெப்பச்சிதைவின் காரணமாக ஏற்படும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தால் சுக்ரோசு என்ற மற்றொரு முக்கியப் பகுதிப்பொருளின் எரிதல் விளைபொருளான சாம்பலை ஒரு நீண்ட பாம்பு போன்ற தோற்றம் உருவாகிறது.

மென்மையான தொற்றுநீக்கி

தொகு

இச்சேர்மம் வலிமை குறைந்த தொற்றுநீக்கி பண்புகளைக் கொண்டுள்ளது.[19][20] மேலும் இது ஒரு சில உயிரினங்களுக்கு எதிரான திறன்மிக்க பூஞ்சைக்கொல்லியாகவும் இருக்கிறது.[21] சமையல் சோடாவிற்கு பழையதான நாற்றத்தை உறிஞ்சும் தன்மை உள்ள காரணத்தால் பழைய புத்தக விற்பனையாளர்களுக்கு பழம்புத்தகங்களின் வாசனையை குறைப்பதற்கான நம்பத்தகுந்த வழிமுறையாக இதன் உபயோகம் உருவாகியுள்ளது.[22]

தீ அணைப்பான்

தொகு

சோடியம் பைகார்பனேட்டு சிறிய அளவிலான எண்ணெய் வகை தீ அல்லது மின் கசிவினால் ஏற்படும் தீயினை அணைப்பதற்கு பயன்படுகிறது. இத்தகைய தீயின் மீது சோடியம் பைகார்பனேட்டை வீசி எறியும் போது வெப்பத்தின் காரணமாக கார்பன் டை ஆக்சைடானது வெளிவந்து தீயை அணைக்கிறது.[23] இருந்தபோதிலும், இது ஆழமான வாணலியில் ஏற்படும் எண்ணெய் வகைத் தீயினை அணைக்கப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் திடீர் வெளியேற்றம் எண்ணெயை உருக்குலைந்து சிதறச் செய்யும்.[23] சோடியம் பைகார்பனேட்டானது BC வகை உலர் வேதிய தீயணைப்பான்களில், ABC வகை தீயணைப்பான்களில் பயன்படும் அதிக அரிமானத்தை ஏற்படுத்தக்கூடிய டைஅம்மோனியம் பாசுபேட்டுக்கு மாற்றுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.சோடியம் பைகார்படே்டின் காரத்தன்மை பர்ப்புல்-கே என்பதைத் தவிர்த்த மற்றுமொரு உலர் வேதித் தீயணைக்கும் காரணியாக உள்ளது. இது வணிகரீதியான சமையலகங்களில் நிறுவப்பட்டுள்ள பேரளவு தீத்தடுப்பு சாதனங்களில் பயன்படுகிறது. இது காரமாக செயல்படக்கூடியதாகவும், எண்ணெய்களின் மீது வலிமை குறைந்த சோப்பாக்குதல் விளைவைத் தரக்கூடியதாகவும் இருப்பதால் எண்ணெய்களின் மீது மெலிதான சோப்பு நுரையை உருவாக்குகிறது.

அமிலங்கள் மற்றும் காரங்களின் நடுநிலையாக்கல்

தொகு

சோடியம் பைகார்பனேட்டு ஒரு ஈரியல்புள்ள சேர்மமாகும். இது அமிலங்களுடனும், காரங்களுடனும் வினைபுரியும் தன்மை கொண்டது. இது அமிலங்களுடன் தீவிரமாக வினைபுரிந்து CO2 வாயுவை விளைபொருளாகத் தருகிறது. பொதுவாக, வேதியியல் ஆய்வகங்களில் தேவையற்ற அமிலக்கரைசல்களையும், கீழே சிதறிய அல்லது கொட்டிய அமிலத்தெறிப்புகளை நடுநிலையாக்கவும் பயன்படுகிறது. இதன் நடுநிலையாக்கல் பண்பைச் சார்ந்து பலவிதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, காயம்பட்டு, துன்புறுகின்ற ஒரு படைவீரனின் காயத்திலிருந்து எடுக்கப்படும் எரியும் தோட்டாவிலிருந்து பரவும் வெண்பாசுபரசை மட்டுப்படுத்தும் செயலில் கூட சோடியம் பைகார்பனேட்டு பயன்படுகிறது.[24]

மருத்துவப் பயன்கள்

தொகு

சோடியம் பைகார்பனேட்டு நீருடன் கலந்து பயன்படுத்தும் போது ஒரு வயிற்றின் அமிலத்தன்மையை நீக்க உதவும் அமிலநீக்கி மருந்தாகப் பயன்படுகிறது.[25] வயிற்றில் உள்ள அமிலத்துடன் இதன் வினையானது உப்பு, நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைத் தருகிறது.

NaHCO3 + HCl → NaCl + H2O + CO2(வாயு)

மேற்கோள்கள்

தொகு
  1. "Physical Constants of Inorganic Compounds". CRC Handbook, p. 4-85.
  2. "Densities of some Common Materials". பார்க்கப்பட்ட நாள் 3 March 2016.
  3. 3.0 3.1 "Aqueous solubility of inorganic compounds at various temperatures". CRC Handbook, p. 8-116.
  4. 4.0 4.1 "Sodium Bicarbonate" (PDF). UNEP Publications. Archived from the original (PDF) on 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
  5. Ellingboe, J. L.; Runnels, J. H. (1966). "Solubilities of Sodium Carbonate and Sodium Bicarbonate in Acetone-Water and Methanol-Water Mixtures". J. Chem. Eng. Data 11 (3): 323–324. doi:10.1021/je60030a009. 
  6. 6.0 6.1 Goldberg, Robert N.; Kishore, Nand; Lennen, Rebecca M. "Thermodynamic quantities for the ionisation reactions of buffers in water". CRC Handbook. pp. 7–13.
  7. Pasquali, Irene; Bettini, R.; Giordano, F. (2007). "Thermal behaviour of diclofenac, diclofenac sodium and sodium bicarbonate compositions". Journal of Thermal Analysis and Calorimetry 90 (3): 903. doi:10.1007/s10973-006-8182-1. 
  8. Chambers, Michael. "ChemIDplus - 144-55-8 - UIIMBOGNXHQVGW-UHFFFAOYSA-M - Sodium bicarbonate [USP:JAN] - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". chem.sis.nlm.nih.gov.
  9. "Sourdough Pancakes Recipe". whatscookingamerica.com.
  10. Czernohorsky, Hooker. "THE CHEMISTRY OF BAKING" (PDF). Archived from the original (PDF) on 2016-11-27. பார்க்கப்பட்ட நாள் 2017-01-22.
  11. "Baking Soda and Baking Powder - FineCooking.com" (in en). FineCooking.com இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202020545/http://www.finecooking.com/item/12173/baking-soda-and-baking-powder. 
  12. "The Many Practical Uses of Baking Soda in the Kitchen". About.com Food இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202011456/http://foodreference.about.com/od/Ingredients_Basics/a/What-Is-Baking-Soda.htm. 
  13. "Glossary Ingredients". Cooking.com. Archived from the original on 2013-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
  14. Douglas Fox (Dec 15, 2001). "Hard cheese". New Scientist. https://www.newscientist.com/article/mg17223214-900-hard-cheese. 
  15. "Best Home Remedies To Kill And Control Cockroaches". HRT.whw1.com. பார்க்கப்பட்ட நாள் 2015-06-20.
  16. Potassium bicarbonate (073508) and Sodium bicarbonate (073505) Fact Sheet. United States Environmental Protection Agency. Updated 17 February 2011. Retrieved 25 November 2011.
  17. Registered Biopesticides 04/29/02 United States Environmental Protection Agency. Updated 29 March 2002. Retrieved 25 November 2011.
  18. "A pool owners guide by Arm & Hammer Baking soda" (PDF). Armandhammer.com. Archived from the original (PDF) on 7 September 2012. பார்க்கப்பட்ட நாள் 30 July 2009.
  19. Malik, Y; Goyal, S (May 2006). "Virucidal efficacy of sodium bicarbonate on a food contact surface against feline calicivirus, a norovirus surrogate". International Journal of Food Microbiology 109 (1–2): 160–3. doi:10.1016/j.ijfoodmicro.2005.08.033. பப்மெட்:16540196. 
  20. Rutala, W. A.; Barbee, S. L.; Aguiar, N. C.; Sobsey, M. D.; Weber, D. J. (2000). "Antimicrobial Activity of Home Disinfectants and Natural Products Against Potential Human Pathogens". Infection Control and Hospital Epidemiology (The University of Chicago Press on behalf of The Society for Healthcare Epidemiology of America) 21 (1): 33–38. doi:10.1086/501694. பப்மெட்:10656352. 
  21. Zamani, M; Sharifi, Tehrani, A; Ali, Abadi, Aa (2007). "Evaluation of antifungal activity of carbonate and bicarbonate salts alone or in combination with biocontrol agents in control of citrus green mold". Communications in agricultural and applied biological sciences 72 (4): 773–7. பப்மெட்:18396809. 
  22. Altman, Gail (2006-05-22). "Book Repair for BookThinkers: How To Remove Odors From Books". The BookThinker (69). http://www.bookthink.com/0069/69alt.htm. 
  23. 23.0 23.1 "Arm & Hammer Baking Soda – Basics – The Magic of Arm & Hammer Baking Soda". armandhammer.com. Archived from the original on 31 August 2009. பார்க்கப்பட்ட நாள் 30 July 2009.
  24. "White Phosphorus". GlobalSecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2007-09-26.
  25. "Sodium Bicarbonate". Jackson Siegelbaum Gastroenterology. 1998. Archived from the original on 2016-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பைகார்பனேட்டு&oldid=3637047" இலிருந்து மீள்விக்கப்பட்டது