மகரப் பிரகரணம்

மகரப் பிரகரணம் என்பது மறைந்துபோன இலக்கண நூல்களில் ஒன்று. யாப்பருங்கலம் என்னும் நூலுக்கு விருத்தி உரை எழுதும் குணசாகரர் இந்த நூலை மேற்கோள் காட்டி அந்த நூலிலிருந்து இரண்டு பாடல்களையும் தந்துள்ளார். [1] தந்துள்ள பாடல்களையும் நூலின் தலைப்பையும் நோக்கும்போது இது மகரக்குறுக்கம் பற்றிச் சொல்லும் நூல் எனத் தெரிகிறது.

ஆய்தமும் ஒற்றாய் அடங்கினும் ஆங்கதனை

ஓதினார் தொன்னூல் உணர்வுடையோர் - நிதியால்
ஒற்றாய் அடங்கினும் உன்கால வேற்றுமையால்
சொற்றாய் மகரச் சுருக்கு.

மெய் என்ற சொல்லானே மிக்க மகரத்தினையும்

நையும் அடங்கும் நனி என்னின் - ஐ என்பது
ஆவி என அடங்கும் அஃகிற்று எனில் மகரத்
தேய்விற்கும் அஃதே திறம்.

மேற்கோள்

தொகு
  1. யாப்பருங்கலம் விருத்தியுரை, சென்னை அரசு வெளியீடு, 1960, பக்கம் 25
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரப்_பிரகரணம்&oldid=3448702" இலிருந்து மீள்விக்கப்பட்டது