மகளிர் கல்லூரி, தின்சுகியா

மகளிர் கல்லூரி, தின்சுகியா (Women's College, Tinsukia), என்பது இந்திய மாநிலமான அசாமில் தின்சுகியாவில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரியாகும். இக்கல்லூரி 9 சூலை, 1966-இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரி திப்ருகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] தற்போது பல்கலைக்கழக மானியக்குழுவின் 2(எப்) மற்றும் 12(பி) தகுதியுடன், இக்கல்லூரி ஆயிரத்து ஐந்நூறு மாணவர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியாளர்களுடன் கலை மற்றும் வணிகப் பாடத் திட்டங்களில் கல்வி வழங்கும் பல ஆசிரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்திரா காந்தி தொலைதூர கல்வி மையத்தின் ஆய்வு மையமும், திப்ருகார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையமும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. ஆர்வமுள்ள மாணவர்களுக்குத் தொலைதூர முறையில் பல்வேறு படிப்புகளை வழங்குகின்றன.[2]

மகளிர் கல்லூரி, தின்சுகியா
வகைபொது
உருவாக்கம்1966
அமைவிடம், ,
27.4920° N, 95.3537° E
சேர்ப்புதிப்ருகர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.wimcol.org/#

புதிய வளாகம் தொகு

சமீபத்தில் இக்கல்லூரியால் ஒரு புதிய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இங்குத் தேசிய உயர்கல்வித் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மானியங்களைப் பயன்படுத்தி ஒரு புதிய வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அசாமின் தொழில்துறை மற்றும் வணிக மையமான தின்சுகியாவின் மையத்தில் உள்ள துர்காபரியில் (27.4920° N, 95.3537° E) கல்லூரி அமைந்துள்ளது. இந்தியாவின் அனைத்து நகரங்களுடனும் சாலை, தொடருந்து மற்றும் வானூர்திப் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

துறைகள் தொகு

  • அசாமிய மொழித்துறை
  • வங்காள மொழித்துறை
  • ஆங்கில மொழித்துறை
  • இந்தி மொழித்துறை
  • சமசுகிருத மொழித்துறை
  • வரலாறு
  • தத்துவம்
  • சமூக வியல்
  • அரசியல் அறிவியல்
  • வணிகவியல்
  • பொருளியல்
  • கல்வியியல்
  • கணினி அறிவியல்
  • கணிதம்
  • மனை அறிவியல்

மேற்கோள்கள் தொகு

  1. "Affiliated College of Dibrugarh University".
  2. "Womens College Tinsukia | Girls College | Best college in Tinsukia | Government Girls Womens College". www.wimcol.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.