மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், இந்தியாவின் மத்திய அரசினால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இது அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும்.
இத்திட்டம் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஊதியம்
தொகுஇத்திட்டத்தில் பயன்பெறுவோருக்கு தற்போது நாளொன்றுக்கு 148 ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் ஊதியம் வங்கிக் கணக்கு மூலமாக தரப்படுகிறது.
மத்திய அரசு 2,844 கோடி ரூபாய் தமிழ் நாட்டிற்கு நிதி கொடுத்துள்ளது என்றும், மேலும் கூடுதலாக 1,846 கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். சி.ஏ.ஜி அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 1,645 பஞ்சாயத்துகளில் நாளொன்றுக்கு 70 ரூபாய் மட்டுமே ஊதியமாக தரப்படுவதாக தெரிவித்துள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ வங்கிகள் மூல ஊதியம் செலுத்த வேண்டும், பக்கம் 3, வெளியீடு நாள்:12-10-2013, புதிய தலைமுறை நாளேடு.