மகாத்மா காந்தி புதிய வரிசை
மகாத்மா காந்தி புதிய வரிசை ரூபாய் தாள்கள், நவம்பர் 8, 2016ல் அறிவிக்கப்பட்டது.[1] நவம்பர் 10, 2016 முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் இவ்வரிசையின் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டது.
இதற்குமுன் பயன்பாட்டில் இருந்த மகாத்மா காந்தி வரிசையின் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என நவம்பர் 8, 2016ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்ததைத் தொடர்ந்து, அதிக பாதுகாப்பு அம்சங்களைக்கொண்ட மகாத்மா காந்தி புதிய வரிசையைச் சார்ந்த 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.[2]
இத்தாள்களின் முகப்பில் மகாத்மா காந்தி படமும், மறுபக்கத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.[3][4]
ரூபாய் தாள்கள்
தொகுமகாத்மா காந்தி புதிய வரிசை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
படம் | மதிப்பு | அளவு மி.மீ |
முதன்மை நிறம் | விளக்கம் | வெளியிடப்பட்ட நாள் | |||
முன்புறம் | பின்புறம் | முன்புறம் | பின்புறம் | நீர்வரிக்குறி | ||||
₹10 | 123 x 63 | சாக்கலேட் பழுப்பு நிறம் | மகாத்மா காந்தி | கொனார்க் சூரியக் கோயில் | மகாத்மா காந்தி | 5 ஜனவரி 2018 | ||
₹20 | 129 x 63 | பசும் மஞ்சள் நிறம்[5] | எல்லோரா குகைகள் | 26 ஏப்ரல் 2019 | ||||
₹50 | 135 x 66 | உடனொளிர் நீல நிறம் | ஹம்பியின் கல்ரதம் | 18 ஆகஸ்ட் 2017 | ||||
₹100 | 142 x 66 | லாவெண்டர் நிறம் | இராணியின் கிணறு குஜராத் |
19 ஜூலை 2018 | ||||
₹200 | 146 x 66 | ஒளிர் மஞ்சள் நிறம்[6] | சாஞ்சி தூபி | 25 ஆகஸ்ட் 2017 | ||||
₹500 | 66 x 150 | கற்சாம்பல் நிறம் | செங்கோட்டை | 10 நவம்பர் 2016 | ||||
₹2000 | 66 x 166 | ஒண் சிவப்பு நிறம் | மங்கள்யான் | 10 நவம்பர் 2016 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆர்.பி.ஐ. செய்திக் குறிப்பு". இந்திய ரிசர்வ் வங்கி. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
- ↑ "கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு". தி இந்து. 8 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2016.
- ↑ "500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது". இந்துஸ்தான் டைம்ஸ். 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
- ↑ "புதிய 500, 2000 ரூபாய் தாள்கள்". தி எக்கணாமிக் டைம்ஸ். 9 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.
- ↑ "புதிய 20 ரூபாய் பணத்தாள்". rbi.org.in. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "புதிய 200 ரூபாய் பணத்தாள்". Reserve Bank of India. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)