மகாநதி இரண்டாம் இரயில் பாலம்

இந்தியாவிலுள்ள பாலம்

மகாநதி இரண்டாம் இரயில் பாலம் (Second Mahanadi Rail Bridge) இந்திய மாநிலமான ஒடிசாவில் கட்டாக் நகருக்கு அருகே மகாநதியின் மீது கட்டப்பட்டுள்ள இரயில் பாலமாகும்.

மகாநதி இரண்டாம் இரயில் பாலம்
Second Mahanadi Rail Bridge
ஆள்கூற்று20°29′07″N 85°54′38″E / 20.4852°N 85.9105°E / 20.4852; 85.9105
வாகன வகை/வழிகள்காரக்புர்-பூரி வழித்தடம், அவுரா-சென்னை முதன்மை வழித்தடம்
கடப்பதுமகாநதி
இடம்கட்டக்
Characteristics
மொத்த நீளம்2,100 மீட்டர்கள் (6,900 அடி)
History
திறக்கப்பட்ட நாள்2008

மகாநதி முதல் இரயில் பாலம் 1899 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 அன்று திறக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 100 அடி (30.48 மீட்டர்) நீளம் கொண்ட 64 இடைவெளிகளைக் கொண்டிருந்தது. 19 அடி 6 அங்குலம் (5.94 மீட்டர்) விட்டம் கொண்ட கிணறுகளில் குறைந்த அளவு நீர் மட்டத்திற்கும் கீழே 60 அடி (18.28 மீட்டர்) ஆழம் வரை மூழ்கியிருந்தது.[1] மகாநதி முதல் இரயில் பாலத்தின் கட்டுமானப் பொறியாளராக வில்லியம் பெக்கெட் பணியாற்றினார். 1901 ஆம் ஆண்டு பாலம் கட்டுமானம் குறித்து இவர் சமர்ப்பித்த கட்டுரைக்காக கட்டடப் பொறியாளர் நிறுவனம் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கியது.[1]

2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) நீளமுள்ள மகாநதி இரண்டாவது இரயில் பாலம் ₹120 கோடி (US$16 மில்லியன்) செலவில் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 160 கிமீ (மணிக்கு 99.41 மைல்) வேகம் செல்லும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தாங்கவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "East Coast Railway". Archived from the original on 2012-03-26. பார்க்கப்பட்ட நாள் 2011-07-06.
  2. "Second rail bridge over Mahanadi commissioned". தி இந்து (Chennai, India). 27 July 2008 இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081010023746/http://www.hindu.com/2008/07/27/stories/2008072756890300.htm. 

புற இணைப்புகள்

தொகு
  வெளி ஒளிதங்கள்
  Video of a train passing over the Mahanadi Bridge