மகாநாகன் (உருகுணை)

மகாநாகன் என்பவன் மகாவம்சத்தின் படி இலங்கையின் தென்பகுதியான உருகுணை இராச்சியத்தை தொடங்கி வைத்தவன் என அறியப்படுகிறான். ஆனால் தாதுவம்சம் நூலின் படி உருகுணையை ஆண்டவர்கள் தமிழர்கள் என்பது ஆய்வாளர்கள் கருத்து.[1][2]

அநுராதபுரத்தில் இருந்து தப்புதல்

தொகு

தேவநம்பிய தீசன் அநுராதபுரத்தில் ஆட்சி செய்த போது மகாநாகன் இளவரசனாய் இருந்தான். தேவநம்பிய தீசனின் பின் அவரது சகோதரனான மகாநாகனே அனுராதபுரத்தின் ஆட்சியாளனாக வரவேன்டும். ஆனாலும் அரச பட்டத்து இராணி தன் மகனுக்கு ஆட்சியை வழங்க எண்ணினாள். மகாநாகனைக் கொல்ல பல சூழ்ச்சிகள் செய்தாள். ஒருமுறை ஒரு மாம்பழத்தில் விசத்தைக் கலந்து அதனை மாம்பழக் கூடையில் வைத்து மகாநாகனுக்கு அனுப்பினாள். இதனை அரசியின் மகன் உண்டு மரணமடைந்தான். இந்தச்சம்பவத்தால் பயந்த மகாநாகன் உருகுணைக்கு தப்பி வந்து அங்கிருந்த தமிழ் அரசர்களிடம் தஞ்சமடைந்தான். பின்னர் யட்டால என்ற இடத்தில் அவனுக்கு என்றொரு மகன் பிறந்தான். அவன் யட்டால தீசன் என அழைக்கப்பட்டான். மகாநாகனுக்கு கோதாபயன் என்ற தத்து மகனும் உண்டு.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. ஸ்ரீசாகுசந்தர், தாதுவம்சம், பக்கம் 23-24
  2. மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (211 - 218)/232. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநாகன்_(உருகுணை)&oldid=2248385" இலிருந்து மீள்விக்கப்பட்டது