மகான்டி அன்கிணிடு
இந்திய விடுதலைப் போராட்டத் தெலுங்கர்
மகான்டி அன்கிணிடு (Maganti Ankineedu, பிறப்பு: சனவரி 1, 1915 - ) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் இந்திய சுதந்திர ஆர்வலராகவும், அரசியல்வாதியாகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மகந்தி அங்கினீது | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | மச்சிலிப்பட்டினம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1915 தாமிரிசா, கிருஷ்ணா மாவட்டம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சாரதாம்பா |
இவர் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள தமீாிசா கிராமத்தில் மாண்டி வெங்கட ராம்தாசுக்கு மகனாக பிறந்தார். இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையேன வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்து கொண்டு இரு முறை சிறை சென்றார்.
இவர் 6 வது மற்றும் 7 வது மக்களவை தோ்தல்களில் மசிலிப்பட்டிணம் தாெகுதியிலிருந்து 1977 மற்றும் 1980 களில் இருமுறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]