மகாராசா இரஞ்சித் சிங் விருது
மகாராசா ரஞ்சித் சிங் விருது (The Maharaja Ranjit Singh Award) என்பது விளையாட்டுத்துறையில் சிறந்த சாதனை புரியும் வீரர்களுக்காக பஞ்சாப் அரசாங்கம் வழங்குகின்ற ஒரு விருதாகும். விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டு, உலக அளவிலான போட்டிகள், தேசியப் போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகளில் நிகழ்த்துகின்ற சாதனைகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகின்றது. 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விருது மகாராசா ரஞ்சித் சிங் கேடயமும் ஒரு இலட்சம் ரூபாய் பணமுடிப்பும் கொண்டதாகும். பர்கத் சிங் என்ற ஒலிம்பிக் வீரருக்கு முதலாவது மகாராசா ரஞ்சித் சிங் விருது வழங்கப்பட்டது.[1] 1996 ஆம் ஆண்டு முதல் 2005 வரையில் பத்தாண்டுக் காலம் சில காரணங்களுக்காக இவ்விருது வழங்கப்படாமல் தடைபட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இவ்விருது வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது[2]. விருது வழங்கப்படாமல் தடைபட்டிருந்த காலத்தில் சாதனைகள் புரிந்த விளையாட்டு வீரர்களின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- Official list of Maharaja Ranjit Singh Awardees பரணிடப்பட்டது 2012-02-15 at the வந்தவழி இயந்திரம் இந்திய பஞ்சாப் அரசு
- Maharaja Ranjit Singh Awards Article 1 பரணிடப்பட்டது 2007-10-26 at the வந்தவழி இயந்திரம்
- Maharaja Ranjit Singh Awards Article 2 பரணிடப்பட்டது 2007-10-01 at the வந்தவழி இயந்திரம் தி இந்து