மகாராசா ராசீந்தர் சிங்

பாட்டியாலாவின் அரசர் (1876 - 1900)

மகாராசா ராசீந்தர் சிங் (Maharaja Rajinder Singh) 1876 முதல் 1900 வரை பாட்டியாலா சுதேச அரசின் அரசராக இருந்தார். 1897 ஆம் ஆண்டில் காலனித்துவ அரசாங்கத்தால் இவரது துணிச்சலுக்காக இந்தியப் பெரிய சிலுவை நட்சத்திரம் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] Described as "the first reigning Prince to blend the elements of the English gentleman and Indian potentate." இந்திய வல்லமையின் கூறுகளுடன் ஆங்கில நற்பண்புகளும் கலந்த முதல் ஆட்சி இளவரசர் என்று மகாராசா ராசீந்தர் சிங் விவரிக்கப்பட்டார்.

ராசீந்தர் சிங்
Rajinder Singh
1898 ஆம் ஆண்டில் சிங்
பாட்டியாலா மகாராசா
ஆட்சிக்காலம்1876–1900
முன்னையவர்மொகிந்தர் சிங்
பின்னையவர்பூபிந்தர் சிங்]]
பிறப்பு(1872-05-25)25 மே 1872
இறப்பு8 நவம்பர் 1900(1900-11-08) (அகவை 28)
மதம்சீக்கியம்

1870 ஆம் ஆண்டுகளில் மகிழுந்து வைத்திருந்த முதல் இந்தியர்களில் ஒருவர் என்ற சிறப்பும் இவர் பெற்றிருந்தார். . பிரெஞ்சு டி டியான் பூட்டன் தயாரிப்பு நிறுவனத்தின் மகிழ்வுந்தை 1892 ஆம் ஆண்டில் வைத்திருந்தார்.

1900 ஆம் ஆண்டு சாலை சவாரி விபத்தில் ராசீந்தர் சிங் இறந்தார். போலோ, துடுப்பாட்டம், கள வளைக்கோல் பந்தாட்டம் மற்றும் ஆங்கிலப் பில்லியர்ட்சு விளையாடுவதிலும் இவர் பெயர் பெற்றவர் ஆவார். மகாராசா தனது ஐரிசு குதிரை ஆசிரியரின் மகளான புளோரன்சு பிரைனை மணந்தபோது, தனது குடிமக்களையும், பிரிட்டிசு அரசாங்கத்தையும் மீறி, சீக்கிய மதத்திற்கு மாறும்படி தன் மனைவியை வற்புறுத்தினார். வில்லியம் பெர்ச்போர்டு மற்றும் பிரடெரிக் ராபர்ட்சுவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.[2] இந்தியாவில் சிறிது காலம் தங்கி இருந்த ஐரிசு இசையமைப்பாளர் தாமசு பிரைன் பட்லர் இவருக்கு ஒரு பாடலை அர்ப்பணித்தார்.

இவர் புல்கியன் வம்சத்தின் உறுப்பினரான பாட்டியாலாவின் மகாராட்டிரா மகேந்திர சிங்கின் மகனாகப் பிறந்தார். மகாராசா பூபிந்தர் சிங் இவரது மகன்களில் ஒருவர் ஆவார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராசா_ராசீந்தர்_சிங்&oldid=3502122" இலிருந்து மீள்விக்கப்பட்டது