மகாவீரர் ஜெயந்தி

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும்.

மகாவீரர் ஜெயந்தி
பிற பெயர்(கள்)மகாவீரர் பிறந்தநாள் விழா
கடைபிடிப்போர்சமணர்கள்
வகைஇந்தியாவின் தேசிய சமய விடுமுறை நாள்
முக்கியத்துவம்மகாவீரரின் பிறந்த நாள்
கொண்டாட்டங்கள்சமணக் கோயிலுக்குச் சென்று வழிபடுதல்
அனுசரிப்புகள்பிரார்த்தனைகள், பூஜைகள், வழிபாடுகள்
நாள்சைத்திர மாதம், திரியோதசி
நிகழ்வுஆண்டுதோறும்
மகாவீரரின் பண்டையச் சிற்பம்

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1]

மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Concise Encyclopaedia of India - K.R. Gupta & Amita Gupta - Google Books. Books.google.com. 2006-01-01. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126906390. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவீரர்_ஜெயந்தி&oldid=3350887" இலிருந்து மீள்விக்கப்பட்டது