மகாவீர் பிரசாத் துவிவேதி
மகாவீர் பிரசாத் துவிவேதி (இந்தி: महावीर प्रसाद द्विवेदी) (1864, தவ்லத்பூர் – 1938) இந்தி மொழி இலக்கியத்துக்கு பெருமை சேர்த்தவர்களுள் முக்கியமானவர் . உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர் சரஸ்வதி எனும் இதழின் ஆசிரியராக இருபது ஆண்டுகள் வரை பணியாற்றினார். பேகனின் கட்டுரைகள், ஸ்பென்சரின் தத்துவார்த்தப் படைப்புகள் போன்றவற்றை இந்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சமஸ்கிருத நூல்களான குமாரசம்பவம், ரகு வம்சம், மகாபாரதம் ஆகிய மூன்று நூல்களை இந்தியில் மொழியாக்கம் செய்துள்ளார். இவரின் நூல்களில் அறுபது நூல்கள் சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவருக்கு இந்தி மொழிக்கான "ஆச்சார்யா" எனும் பட்டம், "சாகித்ய வாசஸ்பதி" எனும் பட்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மகாவீர் பிரசாத் துவிவேதி महावीर प्रसाद द्विवेदी | |
---|---|
தொழில் | எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
நாடு | இந்தியர் |
எழுதிய காலம் | துவிவேதி யுகம்(1893-1918) |
கருப்பொருட்கள் | இந்தி |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
மஹிலா மோத் |
துணைவர்(கள்) | கமலா பாய் |
புத்தகங்கள்தொகு
- காவ்யமஞ்சுஷா
- கவிதாகலப் (1909)
- சுமன்
- மேரி ஜீவன் யாத்ரா
- சாஹித்ய சந்தர்ப்
குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- Brief profile பரணிடப்பட்டது 2012-04-18 at the வந்தவழி இயந்திரம் at indiavisitinformation.com, Retrieved 2011-07-02.
- Hindi Language