மகிந்த ராஜபக்ச துறைமுகம்

மஹிந்த ராஜபக்ஸ துறைமுகம் இலங்கையின் தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. இது நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகமாகக் கருதப்படுகிறது. இலங்கை குடியரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் பெயரே இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

இத்துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் பணி ஆகஸ்ட் 15. 2010 இல் இடம்பெற்றது. முதலாவது கப்பல் நவம்பர் 17. 2010 இல் வருகைதந்தது. சர்வதேசத் துறைமுக கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய'களப்பின் ஒரு பகுதியைச் சூழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்ஸிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட நிர்மாணப்பணிகளுக்கு உதவ சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. 2010 நவம்பர் மாதம் இரண்டாம்கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அடிப்படைத் திட்டம் தொகு

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் டென்மார்க் ரெம்போல் கம்பனியின் வளப்பங்களிப்புடன் 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. திட்டத்தின் நில அளவு 2000 ஹெக்டயார்

துறைமுக நிர்மாணிப்பு (முதற்கட்டம்) தொகு

  • துறைமுக நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பம் 2008 ஜனவரி 15 முதற்கட்டவேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட தினம் : 2010 ஆகஸ்ட் 15
  • மேற்கு நீர்தடுப்புச் சுவர் 988 மீட்டர்
  • கிழக்கு நீர்தடுப்புச் சுவர் 312 மீட்டர்
  • கப்பல் முனையம் 600 மீட்டர்
  • சேவைகள் நடைபெறும் முனையம் 105 மீட்டர்
  • எண்ணெய் முனையம் 310 மீட்டர்
  • கப்பல் திசை திருப்பும் தடாகம் 600 மீட்டர்
  • தடாகத்தின் ஆழம் 17 மீட்டர்
  • துறைமுக உட்புகு கால்வாயின் அகலம் 210 மீட்டர்
  • துறைமுக உட்புகு கால்வாயின் ஆழம் 17 மீட்டர்
  • முதல் கட்டத்தில் ஆழமாக்கப்பட்ட நில அளவு 43 ஹெக்டயார்
  • கொள்ளளவு 100,000 DWT அளவினையுடைய கப்பல்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
  • எண்ணெய் முனையம், ஆரம்பம் 07.10.2009, ஆகு செலவு 76 மில்லியன், அமெரிக்க டொலர்கள், நிர்மாணிப்புக் கம்பனி சீன {ஹவான் கிவ் (HUWAN QUI) இஞ்சினியரிங்.
  • எண்ணெய்த் தாங்கிகளைக் கொண்ட தொகுதியொன்று நிர்மாணிக்கப்படுகிறது. அதன் மொத்தக் கொள்ளளவு 80000 m3.
  • கப்பல் எரிபொருள் தாங்கிகள் 08
  • விமான எரிபொருள் தாங்கிகள் 03
  • L. P. வாயு தாங்கிகள் 03 (திரவ பெற்றோலிய வாயு)
  • நிர்வாகக் கட்டடம், ஆரம்பம் 2009.10.07, நிர்மாணிப்பு சைனா ஹாபர் இஞ்சினியரிங் மற்றும் ஸைனோ ஹயிட்ரோ கோபரேஸன். 75000 சதுர அடியைக் கொண்ட 15 மாடிகளையுடைய 200 அடி உயரமான கட்டடமாகும்.

வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் சேவைகள் தொகு

  • பொதுவான கப்பல் சரக்குகள் எனும் சம்பிரதாய கப்பல் சரக்குகள் (சிமெந்து, உரம், மா,இரும்பு, பலகை போன்றன)
  • Raw வசதிகள் - வாகன போக்குவரத்து வசதிகள், கப்பலின் இயக்கச் செயற்பாடுகள் (இறக்குமதி / மீள்ஏற்றுமதி)
  • கப்பல் நிறுத்துமிட வசதிகளை அளித்தல்.
  • கப்பல்களுக்கான மரக்கறி உட்பட உணவுப் பொருட்களை (Ship Stores) வழங்குதல், மருத்துவ வசதியினை வழங்குதல்.
  • நீர் வழங்கல்
  • கப்பல் பணியாளர்களை வழங்குதல், பணியாளர் பரிமாற்று மத்திய நிலையமாக செயற்படல்.
  • கப்பல் கட்டுதல் மற்றும் திருத்துதல் (Dry Doc)
  • நடவடிக்கைகளுக்கு உலர் தடாக வசதிகளினை வழங்குதல்.
  • துறைமுக வளாகத்தினுள் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான வசதிகளை அளித்தல்.
  • கொள்கலன் கையாளும் முனையம் உருவாக்குதல். நிலக்கரி, மின் உற்பத்தி பயன்பாடு தொடர்பில் வசதி அளித்தல்.

எதிர்பார்க்கப்படும் இலக்குகள். தொகு

ஹம்பாந்தோட்டை துறைமுகமூடாக உள்நாடு, சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் பின்வருமாறு

சர்வதேச இலக்குகள் தொகு

  • இலங்கையை உலகில் முன்னணி கப்பல் மத்திய நிலையமாக மாற்றுதல்.
  • கப்பல் துறை பற்றி வலய மட்டத்தில் மேல் எழும் சவால்களுக்கு துணிச்சலுடன் முகங்கொடுத்தல்.
  • இலங்கை கடல் வலயத்திலிருந்து கிடைக்கப்பெறும் பாரிய அந்நிய நாட்டுச் செலாவணியை இலங்கை பொருளாதாரத்தின் மீது கவரவைத்தல்.
  • வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தல்.

தேசிய இலக்குகள் தொகு

  • வெளிநாட்டு செலாவணியை நாட்டினுள் கொண்டு வருதல்.
  • தொழிலில்லா பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.
  • 25000 - 30000 அளவிலான சுற்றாக தொழில் வாய்ப்புகள் உருவாதலினால் பிரதேசத்தின் நிதிப் புழக்கம் அதிகரித்தல்.
  • பயிற்சி தொழில் முயற்சியாளர்களை உருவாக்கிக் கொள்ளல்.
  • பிரதேச அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
  • பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்.
  • அரச ஆதாயத்தினை கூட்டுதல், புது நிதி கிடைக்கும் வழிமுறைகள் உருவாதல்

வெளி இணைப்புகள் தொகு