மகிழ்ச்சி திட்டம்
மகிழ்ச்சி திட்டம் (Khushi Scheme)(ஒடியா மொழியில் "குஷி") என்பது ஒடிசாவின் மாணவிகளுக்கு இலவசமாக விடாய்க்கால அணையாடை வழங்குவதற்காக ஒடிசா அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் மகளிர் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சார்ந்த திட்டமாகும்.[1] இது பிப்ரவரி 26, 2018 அன்று ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக்கால் தொடங்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஒடிசா அரசு ஆண்டுக்கு 70 கோடி இந்திய ரூபாயைச் செலவிடுகிறது.[2]
வகை | மகளிர் சுகாதார திட்டம் |
---|---|
நிறுவுகை | 2018 |
நிறுவனர்(கள்) | ஒடிசா அரசு |
சேவை வழங்கும் பகுதி | ஒடிசா |
முதன்மை நபர்கள் | நவீன் பட்நாய்க் |
உரிமையாளர்கள் | ஒடிசா அரசு |
திட்டம் பற்றி
தொகுஇந்தத் திட்டத்தின் கீழ், ஒடிசா அரசின் சுகாதாரத் துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 1.7 மில்லியன் மாணவிகளுக்கு இலவச விடாய்க்கால அணையாடைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[3] மேலும், பள்ளி செல்லும் பெண்கள் மத்தியில் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பள்ளியில் மாணவிகளை அதிக அளவில் தக்கவைத்துக்கொள்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Odisha govt to give free pads to schoolgirls, names campaign 'Khushi'". இந்தியா டுடே. 27 February 2018. https://www.indiatoday.in/fyi/story/odisha-govt-to-give-free-pads-to-schoolgirls-names-campaign-khushi-1177860-2018-02-26.
- ↑ "Chief Minister Naveen Patnaik launches 'Khushi, the padgirl'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 27 February 2018. http://www.newindianexpress.com/states/odisha/2018/feb/27/chief-minister-naveen-patnaik-launches-khushi-the-padgirl-1779502.html.
- ↑ "Odisha Launches Scheme To Provide Free Sanitary Pads To 17 Lakh Students". என்டிடிவி. 26 February 2018. https://www.ndtv.com/india-news/odisha-launches-scheme-khushi-to-provide-free-sanitary-pads-to-17-lakh-students-1817458.
- ↑ "Odisha launches 'Khushi' to provide free sanitary napkins". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 26 February 2018. http://www.business-standard.com/article/news-ians/odisha-launches-khushi-to-provide-free-sanitary-napkins-118022600532_1.html.