மகுயிண்டனாவோ படுகொலை

(மகுயின்டனவு படுகொலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகின்டனாவ் படுகொலை (Maguindanao massacre) (அல்லது திரளான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட அம்பாதுவான் நகரை ஒட்டி அம்பாதுவான் படுகொலை (Ampatuan massacre)[2]) பிலிப்பீன்சின் மின்டனாவ் தீவில் மகின்டனாவ் மாநிலத்தில் அம்பாதுவான் நகரில் நவம்பர் 23, 2009 காலையில் நடந்தது. 2010ஆம் ஆண்டின் பிலிப்பீன்சு பொதுத்தேர்தல்களில் அங்கமாக எதிர்வந்த ஆளுநர் தேர்தலில்[3] இசுமேய்ல் மங்குடடாதுவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் அளிக்க உயிரிழந்த 58 பேரும் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கையில் வழி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். நடப்பில் மகின்டனாவின் ஆளுநராக இருந்த அண்டால் அம்பாதுவான் முதியவரின் மகனும் தாது உன்சேயின் மேயருமான அண்டால் அம்பாதுவான் இளையவருக்கு எதிராக மங்குடடாதா போட்டியில் இறங்கினார். அண்டால் அம்பாதுவான் முதியவருக்கு மின்டனாவ் முசுலிம் சமூகத்தில் வலுவான செல்வாக்கு இருந்தது.[4] இந்தப் படுகொலையில் மங்குடடாதுவின் மனைவி, இரண்டு சகோதரிகள், இதழாளர்கள், வழக்கறிஞர்கள், உதவியாளர்கள் மற்றும் இக்குவிழுவின் உறுப்பினர்களாக தவறாக எண்ணப்பட்ட மகிழுந்து ஓட்டுநர்கள் கொல்லப்பட்டனர்.

மகின்டனாவ் படுகொலை
பிலிப்பீன்சு நிலப்படத்தில் மகின்டனாவ் காட்டப்பட்டுள்ளது
இடம்அம்பாதுவான், மின்டனாவ், பிலிப்பீன்சு
நாள்நவம்பர் 23, 2009
ஏறத்தாழ காலை 10:00 மணி – பிற்பகல் 3:00 மணி (UTC +8)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இசுமேயில் மங்குடடாதுவின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இதழாசிரியர்கள்
தாக்குதல்
வகை
படுகொலை
ஆயுதம்சிற்றாயுதங்கள்
இறப்பு(கள்)58
இசுமேய்ல் மங்குடடாதுவின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உடன்சென்ற இதழாசிரியர்கள்[1]
காயமடைந்தோர்குறைந்தது 4
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
அண்டால் அம்பாதுவான் இளையவரும் அவரது குடும்பக் குழுவும்
தாக்கியோரின் எண்ணிக்கைஏறத்தாழ 100

இதழாசிரியர்கள் காப்புக் குழு (CPJ) மகின்டனாவ் படுகொலையை வரலாற்றிலேயே மோசமான பத்திரிக்கையாளர் படுகொலையாகக் கருதுகின்றது.[5] குறைந்தது 34 இதழிகையாளர்களாவது கொல்லப்பட்டதாக அறியப்படுகின்றது.[6] இந்தப் படுகொலைகளுக்கு முன்னதாகவே இதழாசிரியர்கள் காப்புக் குழு பிலிப்பீன்சை, ஈராக்கிற்கு அடுத்தபடியாக, பத்திரிகையாளர்களுக்கு இரண்டாவது மிக அபாயகரமான நாடாக முத்திரையிட்டுள்ளது.[5]

மேற்சான்றுகள்

தொகு
  1. Jimenez-Gutierrez, Jason (November 23, 2010). "Philippines mourns massacre victims". Philippine Daily Inquirer இம் மூலத்தில் இருந்து ஜூன் 27, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150627122428/http://newsinfo.inquirer.net/breakingnews/nation/view/20101123-304817/Philippines-mourns-massacre-victims. பார்த்த நாள்: November 23, 2010. 
  2. Analyn Perez (November 25, 2009). "The Ampatuan Massacre: a map and timeline". GMA News (gmanews.tv). http://www.gmanetwork.com/news/story/177821/news/specialreports/the-ampatuan-massacre-a-map-and-timeline. 
  3. Jimenez-David, Rina (November 24, 2009). "Understanding the unbelievable". Philippine Daily Inquirer இம் மூலத்தில் இருந்து நவம்பர் 27, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091127193253/http://opinion.inquirer.net/inquireropinion/columns/view/20091124-238128/Understanding-the-unbelievable. பார்த்த நாள்: November 24, 2009. 
  4. "http://content.time.com/time/world/article/0,8599,1943191,00.html". Time. November 27, 2009. http://content.time.com/time/world/article/0,8599,1943191,00.html. 
  5. 5.0 5.1 Papa, Alcuin (2009-11-26). "Maguindanao massacre worst-ever for journalists". Philippine Daily Inquirer இம் மூலத்தில் இருந்து 2009-11-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091129120848/http://newsinfo.inquirer.net/breakingnews/nation/view/20091126-238554/Maguindanao-massacre-worst-ever-for-journalists. பார்த்த நாள்: 2010-09-30. 
  6. Zonio, Aquilies (2009-11-24). "Inquirer man recounts harrowing tales of survival". Philippine Daily Inquirer இம் மூலத்தில் இருந்து 2009-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091126211637/http://technology.inquirer.net/infotech/infotech/view/20091124-238100/Inquirer-man-recounts-harrowing-tales-of-survival. பார்த்த நாள்: 2009-11-25. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுயிண்டனாவோ_படுகொலை&oldid=3517510" இலிருந்து மீள்விக்கப்பட்டது