மகேந்தர் சிங்

இந்திய அரசியல்வாதி

மகேந்தர் சிங் (Mahender Singh) (பிறப்பு 22 பிப்ரவரி 1950) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். சிங், மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் தொகுதியில் இருந்து இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதாரம், தோட்டக்கலை மற்றும் சைனிக் நலம் போன்ற துறைகளைத் தனது பொறுப்பில் வைத்திருக்கிறார். [1] [2] [3] [4]

மகேந்தர் சிங்
தொகுதிதரம்பூர் -[32]- மண்டி மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் மறைந்த ஸ்ரீ பாலி ராமின் மகன். அவர் சஞ்சியாரில் (ரிச்லி) பிறந்தார். இவர் மெரட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் பர்மிளா தேவியை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

ஆரம்பத்தில், இவர் கோவில்களைக் கட்டுவதில் ஈடுபாடுடையவராகவும், ஏழைகளுக்கு திருமணம் செய்ய உதவுபராகவும் இருந்தார். 1969 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் டோக்ரா படைப்பிரிவில் சேர்ந்தார். இவர் 1971 ஆம் ஆண்டில் நடந்த இந்திய-பாக்கிஸ்தான் போரில் பங்கேற்றார். 1973-ஆம் ஆண்டில் படைப்பிரிவிலிருந்து வெளியேறினார்.

தொழில்

தொகு

இவர் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மாநில சட்டமன்றத்திற்கு சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பிலும், 1998 ஆம் ஆண்டில் எச் வி சி சார்பிலும், 2003 ஆம் ஆண்டில் லோக் தந்திரிக் மோர்ச்சா சார்பிலும், 2007 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1997 முதல் 2002 வரை எச்விசியின் துணைத் தலைவராக பணியாற்றினார்; 2003 முதல் 2004 வரை லோக் தந்திரிக் மோர்ச்சாவின் தலைவராக இருந்தார்; 1998 முதல் 2000 வரை ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், பொதுப்பணித்துறை, மற்றும் கலால் & வரித்துறை அமைச்சராகவும், மதிப்பீட்டுக் குழு தலைவராகவும் மற்றும் பல்வேறு அவைக் குழுக்களின் உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் 9 சூலை 2009 முதல் டிசம்பர் 2012 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார். அவர் 2012 ஆம் ஆண்டில் ஆறாவது முறையாக மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 2017 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP to prepare chargesheet against Congress govt in Himachal - Times of India".
  2. "Asset comparison of Mahender Singh (BJP): Dharampur in Himachal Pradesh 2012". myneta.info.
  3. "Opposition to submit charge sheet against 'corrupt' Congress on december 25 - Times of India".
  4. "Archived copy". Archived from the original on 13 January 2006. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "HOME | eVidhan- Himachal Pradesh". Hpvidhansabha.nic.in. Archived from the original on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்தர்_சிங்&oldid=3566030" இலிருந்து மீள்விக்கப்பட்டது