மகேந்திர சிங் பதி
இந்திய அரசியல்வாதி
மகேந்திர சிங் பதி (Mahendra Singh Bhati) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தரபிரதேசத்தின் தாத்ரி நகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.[1][2] மகேந்திர சிங் பதியும் இவரது நண்பர் உதய் பிரகாசு ஆர்யா ஆகியோர் தாத்ரி ரயில் நிலையம் அருகே 13 செப்டம்பர் 1992 அன்று ஆயுதமேந்திய ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3]
மகேந்திர சிங் பதி Mahendra Singh Bhati | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 1985–1992 | |
முன்னையவர் | விஜய் பால் |
பின்னவர் | சமீர் பதி |
தொகுதி | தாத்ரி, உத்தரப் பிரதேச சட்டமன்றம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 13 செப்டம்பர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சனதா தளம் |
பிள்ளைகள் | சமீர் பதி |
வாழிடம் | கௌதம புத்தா நகர் மாவட்டம் |
தொழில் | அரசியல்வாதி |
1992 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் பதியைக் கொன்றதற்காக முன்னாள் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. யாதவ் உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு 28 பிப்ரவரி 2015 அன்று அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dadri Assembly constituency election results". elections.in. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
- ↑ "Dadri Assembly constituency election results". Result University. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
- ↑ "Former MP DP Yadav sentenced to life imprisonment". Times of India. 11 March 2015. http://timesofindia.indiatimes.com/india/Former-MP-DP-Yadav-sentenced-to-life-imprisonment/articleshow/46515203.cms.
- ↑ Singh, S.P.; Manoj, Kumar (11 March 2015). "23 years after Bhati's death, DP Yadav gets life term". Daily Pioneer. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.