மகேந்திர நுளம்பன்
மகேந்திர நுளம்பன் (கி.பி.870-895) என்பவன் ஒரு நுளம்பச் சிற்றரசனாவான். இவன் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி என்ற இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டுவந்த நுளம்பர் மரபைச்சேர்ந்த மன்னனாவான். மகேந்திரனின் தந்தை நொளம்பாதிராசன்; தாய் கங்க இளவரசி ஜெயபீ. மகேந்திரன் மனைவியும் காமபே என்ற கங்க மரபைச் சேர்ந்த இளவரசி ஆவாள்.
தகடூரைக் கைப்பற்றல்
தொகுஇவன் தகடூர் மீது படை எடுத்துவந்து அதன் அப்போதைய ஆட்சியாளனான பாண அரசனை வென்று, தகடூரைக் கைப்பற்றி (கி.பி.873) அதைத் தனது தலைநகராக்கிக் கொண்டான். அது முதல் கி.பி.968 வரை தகடூர் நுளம்பரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. [1]
பணிகள்
தொகுஇவன் சைவச் சமயத்தைப் பெரிதும் போற்றியவன். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையல் உள்ள சிவாலயம் இவன் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதனாலேயே அந்த ஈசன் பெயர் மயிந்தீசுவரம் உடையார் என்னும் பெயரைக்கொண்டார் என்று கூறப்படுகிறது.[2]