மகேஷ் சந்திரன் பஞ்சநாதன்
மகேஷ் சந்திரன் பஞ்சநாதன் (பிறப்பு 10 ஆகஸ்ட் 1983) ஓர் இந்திய சதுரங்க வீரர்.இவருக்கு 2006இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மகேஷ் சந்திரன் பஞ்சநாதன் | |
---|---|
உலக சதுரங்க ஓப்பன் 2004 | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 10 ஆகத்து 1983 மதுரை, இந்தியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் (2006) |
பிடே தரவுகோள் | 2474 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2586 (செப்டெம்பர் 2011) |
மகேஷ் சந்திரன் மதுரையில் பிறந்தார். 2003இல் இவர் இலங்கையில் நடந்த ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியை வென்றார்.[1] 2005ஆம் ஆண்டில் அமெரிக்க சுதந்திர தின வார இறுதியில் பிலடெல்பியாவில் 33வது உலக சதுரங்க ஓபனில் விளையாடி கமில் மிடோஸுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டார். [2] அதே ஆண்டில் இவர் டெக்சாசின் ரிச்சர்ட்சனில் நடந்த யூ.டீ.டீ. ஜி.எம். அழைப்பிதழ் போட்டியில் முதலிடம் பிடித்தார்.[3] 2008ஆம் ஆண்டில் இவர் கோலாலம்பூர் ஓபனில் நுகுயென் ஆன்ஹ துங் ,சடிக்கின் இருவாண்டோ மற்றும் சுசான்டோ மேகரண்டோ ஆகியோருடன் இணைந்து 3–6வது இடங்களை பகிர்ந்து கொண்டார்.[4] 2009இல் மும்பை மேயர் கோப்பையில் அலெக்சாண்டர் அரெஸ்சேங்கோ, கொனேரு ஹம்பி மற்றும் எவ்கெஞ்சி மிரோஷ்ணி சென்கோ ஆகிய மூவருடன் இணைந்து 1-4ஆம் இடங்களை பகிர்ந்து கொண்டார்.[5] 2010இல் கான்பரா டோபேர்ள் கோப்பையில் கலந்து கொண்டு 3-6வது இடங்களை விளாடிமிர் மலானியுக், டேவிட் ஸ்மெர்டோன், சப்தரிஷி ராய் சவுத்ரி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.[6] 2011 ஆம் ஆண்டில் 3ஆவது ஒரிஸ்ஸா சர்வதேச ஜிஎம் ஓபன் சதுரங்க போட்டியில் [7] டிக்ரான் எல். பெட்ரோசியன் மற்றும் அபிஜித் குப்தாவுடன் 2வது–4வது இடங்களை பகிர்ந்து கொண்டார் மற்றும் பெர்க்லி சர்வதேச சதுரங்க போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[8] 2012இல் இவர் பிலடெல்பியா ஓபனை 7/9 புள்ளிகளுடன் வென்றார்.[9] 2015 இல், மோரிசுடவுனில் நடந்த நியூஜெர்சி ஓபன் போட்டியில் செர்ஜி அசரோவ் உடன் இணைந்து முதலிடம் பிடித்தார்; இரு வீரர்களும் 5/6 மதிப்பெண் பெற்றனர்.[10]
மகேஷ் சந்திரன் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தார்.
சான்றுகள்
தொகு
- ↑ Crowther, Mark (28 July 2003). "TWIC 455: 26th Asian Junior Championships". The Week in Chess. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ "Live 8 and chess in Philadelphia". ChessBase. 2005-07-06. பார்க்கப்பட்ட நாள் 21 May 2010.
- ↑ "Tournament report April 2006: UTD GM Invitational". FIDE. பார்க்கப்பட்ட நாள் 21 May 2010.
- ↑ "Tournament report April 2009: KL Open 2008 - Malaysia". FIDE. பார்க்கப்பட்ட நாள் 25 May 2010.
- ↑ Zaveri, Praful (2009-05-15). "Areshchenko triumphs in Mayor's Cup – Jai Ho Mumbai!!". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 10 May 2010.
- ↑ Crowther, Mark (2010-04-12). "TWIC 805: Doeberl Cup". London Chess Centre. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ "GM Aleksej Aleksandrov victorious in Orissa". Chessdom. Archived from the original on 7 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 7 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "2011 Berkeley International". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 19 February 2012.
- ↑ "Results are in at the Philadelphia Open". The United States Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012.
- ↑ Tamburro, Pete (8 September 2015). "Magesh Panchanathan Wins New Jersey Open". The United States Chess Federation. Retrieved 7 August 2020.
வெளி இணைப்புகள்
தொகு- Magesh Chandran Panchanathan games at 365Chess.com