மகேஷ் ஜெத்மலானி

மகேஷ் ஜெத்மலானி (Mahesh Jethmalani) இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், மாநிலங்களவை நியமன உறுப்பினர்|மாநிலங்களவை நியமன உறுப்பினரும் ஆவார்.[1] இவர் மறைந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் மகன் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக 2012 வரை செயலாற்றியவர்.[2]

மகேஷ் ஜெத்மலானி
2009 பொதுத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மகேஷ் ஜெத்மலானி
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2021
முன்னையவர்ரகுநாத் மகபத்ர
தொகுதிமாநிலங்களவை நியமன உறுப்பினர் மாநிலங்களவை (சட்டம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1956
மும்பை, மகாராட்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஹசீனா ஜெத்மலானி
பெற்றோர்s
முன்னாள் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்

வழக்கறிஞர் தொழில் தொகு

1980ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்த மகேஷ் ஜெத்மலானி, 12 பிப்ரவரி 1981 முதல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் தொடங்கினார்.[3]

மகேஷ் ஜெத்மலானி மகாராட்டிரா முன்னாள் முதல்வர் ஏ. ஆர். அந்துலே மீதான ஊழல் வழக்கில் அந்துலே சார்பாக வாதாடினார். மேலும் இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடினார்.[3]

அரசியல் தொகு

2009 பொதுத்தேர்தலில் மகேஷ் ஜெத்மலானி மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2021ல் மகேஷ் ஜெத்மலானி மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.[4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Senior advocate Mahesh Jethmalani nominated to Rajya Sabha". Swati Deshpande. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 May 2021. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021.
  2. "Ram Jethmalani's son Mahesh Jethmalani nominated to Rajya Sabha". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
  3. 3.0 3.1 Deshpande, Swati (31 May 2021). "Senior advocate Mahesh Jethmalani nominated to Rajya Sabha". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 Jul 2023.
  4. "Swapan Dasgupta, Mahesh Jethmalani nominated to Rajya Sabha". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-06-01. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_ஜெத்மலானி&oldid=3793166" இலிருந்து மீள்விக்கப்பட்டது